(Reading time: 29 - 58 minutes)

தன் பின் வந்த ஒவ்வொரு வெள்ளி மாலையும் சரித்ரனுக்கு ஷாலுவுடன் தான் வேலை.

ஒரு நாள் அவன் அவளை தன் அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றான் எனில் மறு நேரம் ஷாப்பிங்க் போனார்கள். ஒரு வாரம் சனிக்கிழமை வண்டலூர் ஸூ சித்தப்பா பிள்ளைகளை அழைத்துச் சென்றனர் இருவர் மாத்திரமாக. மறு வாரம் அவளுக்கு அடிக்கடி வரும் தலைவலிக்காக ஐ டெஸ்ட் போனார்கள். அடுத்த வாரம் சித்தப்பா சித்தி திருமண நாளுக்கு பரிசு வாங்க போனார்கள். அந்த வார மத்தியில் புதன் கிழமை வந்த திருமண நாளுக்கு இவளை வந்து அழைத்துப் போனதும் அவன் தான். மறுமுறை அவன் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய ஒரு பார்டிக்கு இருவருமாக மெனு டிசைட் செய்தார்கள். அவளது ஒவ்வொரு தேவையும் அவன் வழியாக சந்திக்கப் பட்டது. அப்படி பட்ட எந்த நேரத்தில் அவனுக்கு போன் வந்தாலும் பேசுவது அவனது நெருங்கிய நட்பாயிருந்தால் அவர்களிடம் அவளையும் பேச சொன்னான்.

ஷாலுவுக்கு புரிந்ததோ இல்லையோ அவனது நெருங்கியவட்டம் அனைவருக்கும் தெரிந்தது ஷாலு அவனுக்கு யாரென.

சித்தப்பா வீட்டிலும் மொட்டை மாடியில் காற்றில் நின்றபடி அரட்டை அடித்தனர் சில நேரங்களில்.

ஒரு நாள் சித்தப்பா சரித்ரனை தனியே பிடித்தார்.

“சின்ன வயசுல இருந்து உனக்கு ஷாலு கூட பழக்கம்ங்கிறதாலதான் நான் ஆரம்பத்துல தப்பா எடுத்துக்கிடலை…பட் இப்ப இது போற விதம் சரி இல்லை. காதல்னா எங்க வீட்ல யாருக்கும் நல்ல எண்ணம் கிடையாது…அதுவும் என் அண்ணன் கொன்னே போட்டுடுவான்…அதோட ஷாலுவ பார்க்கிறப்ப அவ மனசுல எதுவும் இருக்ற மாதிரி தெரியலை….உனக்கு விருப்பம் இருந்தா முதல்ல உங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வர சொல்லு…..அப்பதான் அண்ணன் சம்மதிப்பான்…அந்த வகையில இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு…இல்லைனா நீ இதோட நிறுத்திக் கோ…”

“மாமா கண்டிப்பா அம்மா அப்பாவை வந்து உங்கட்ட பொண்ணு கேட்க சொல்றேன்….. அதுக்கு முன்னால ஷாலுட்ட க்ளியரா சொல்லிடுறேன்…ப்ளீஃஸ் அதுக்கு மட்டும் டைம் குடுங்க….”

இப்படி அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை தன் அத்தையிடம் தெரிவித்தான் சரித்ரன். அவருக்கும் இவன் சொல்லும் முன்பே இந்த ஊகம் இருந்தாலும் அவன் வாயிலிருந்து வரவேண்டுமே விஷயம் என காத்திருந்தார்.

“ஹப்பா ஒரு வழியா எங்க அண்ணி புலம்பலுக்கு விடிவு காலம் வருது….கல்யாணம்னாலே பின்னங்கால் தலைல பட ஓடுவியே, இப்ப எப்டி இப்டி தொபுகடீர்னு விழுந்த…?”

“அது அவள முதல் தடவ இப்போ பார்க்கிறப்பவே தோனிட்டு….அந்த இன்னொசொன்ஸா எதுவோ….இவ கூடதான் உன் லைஃப்னு ஒரு ஃபீல்…”

“அப்படின்னா அப்ப இருந்தே சதி செய்றன்னு சொல்லு…”

“இது பேரு சதியா…? ஏன் சொல்ல மாட்டீங்க? வாரம் ஒரு தடவை அவளை பார்க்கிறதுக்கு வாரம் முழுக்க மண்டைய உடச்சி ப்ளான் செய்யனும்…”

“பிறகு லவ் பண்றதுன்னா சும்மாவா? அதுவும் பெரியத்தான் பொண்ண? கல்யாணத்துக்கு அப்புறம் கூட பேச்சுவாக்கில் இது லவ் மேரேஜுன்னு அவர்ட்ட சொல்லிடாத, சண்டைக்கு வந்துடப் போறாங்க”

“ப்ச்…அவர்ட்ட போய் யார் பேசிட்டு இருக்கப் போறா? அவர் இடத்துல அவர் நிம்மதியா இருக்கட்டும், மேரேஜுக்கு பிறகும் வந்து அவர் ஷாலுவை டிஃஸ்டர்ப் செய்றதலாம் என்னால பார்துட்டு சும்மா இருக்க முடியாது…எங்க வீட்டுக்கெல்லாம் அவர் வர வேண்டாம்…”

“டேய்…என்ன நீ…? எப்படா இவ்ளவு ஷெல்ஃபிஷா மாறின? அவர் வளத்த பொண்னு வேணும் அவர் வேண்டாமா? உங்க மாமா காதுல விழுந்தாலே இந்த கல்யாணம் வேண்டாம்னு இப்பவே சொல்லிடுவாங்க…”என பதற்றமாய் ஆரம்பித்தவர் பின் நிதானமாக

“நீ நினைக்கிற மாதிரி இல்லமா….அவர பார்த்துகிற பொறுப்பு ஷாலுவுக்கும் ரேயுவுக்கும்தானே…அதோட மூத்த மருமகனா போறவனுக்கு மகனோட இதயம் வேணும்…அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்…அவங்க வீட்டுக்குன்னு இதை சொல்லலை உன் வீடுமே அப்பதான் நல்லா இருக்கும்….நீ தான் முன்னால நின்னு எல்லாம் செய்யனும்….சின்னவ மேரேஜாகட்டும் அப்புறம் பெரியத்தான பார்த்துகிறது ஆகட்டும் எல்லாம் ஷாலு செய்ய வேண்டியது இல்லையா….ஷாலுவுக்கு கடமைனா உனக்கு பொறுப்பு இல்லையா?”

“அதெல்லாம் செய்துடுவேன் அத்தை…இன்ஃபாக்ட் ரேயாவுக்கு கூட அலையன்ஃஸ் பத்தி எனக்கு ஒரு ஐடியா இருக்குது…பட் அவ சின்ன பொண்ணு…டைம் வரப்ப பார்த்துகிடலாம்…பட் என்னமோ உங்க அத்தான்ட்ட பழக இஷ்டம் இல்லை… என் ஷாலுவை ரொம்ப படுத்தி இருக்கார்….பர்க்கலாம்…”

இருவரும் மாத்திரம் பேசிக் கொண்டு இருப்பதாய் எண்ணித்தான் சென்றது உரையாடல் இயல்பாக…..அது வேறு இரு செவிகளிலும் விழுந்து வைத்தது.

அந்த வாரம் வெள்ளிக் கிழமை காலையிலே சரித்ரன் தன் அத்தை வீட்டுக்கு சென்றுவிட்டான். “மாமா…..இன்னைக்கு ஷாலுட்ட நான் கல்யாண விஷயம் பேசனும்…போய் பார்க்கலாமா…ப்ளீஸ்…? நாளைக்கு பாம்பே டிக்கட் புக் செய்துட்டேன்…மார்னிங் ஃப்ளைட்….இதெல்லாம் நேர்ல போய் சொன்னாதான் நல்லா இருக்கும்….சோ போய் அம்மாட்ட சொல்லிட்டு அப்டியே அம்மா அப்பா கூட இங்க தான் வருவேன்……”

சின்னதாக புன்னகை அவர் முகத்தில். “இதெல்லாம் சரியாத்தான் இருக்குது…..ஆனால் ஷாலுக்கு இன்னும் ஒன் இயர் இருக்கேப்பா ஸ்டடீஸ்…?”

“அதுக்கென்ன மாமா, மேரேஜுக்கு பிறகு இங்க தான சென்னைல இருக்கப் போறோம்…அவ ஸ்டடிஸை கன்டின்யூ செய்யட்டும்……இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இதுக்கு மேல தாங்காது….அதோட நீங்க வேற டென்ஷன் ஆகுறீங்களே…..” குறை சொல்லும் தொனியில் விளையாட்டாய் முடித்தான்.

“ம்…உனக்கும் பொண்ணு பிறக்கட்டும் அப்ப புரியும்…”

“பொண்ணு இல்ல….பொண்ணுங்க பிறக்கட்டும்னு சொல்லுங்க…..3 பொண்ணாவது வேணும்…உங்க வாயால ஆசீர்வதிங்க…..அப்பவாவது ஆண்டவர் அருள் பாலிக்றாரான்னு பார்ப்போம்…ஐ’ல் செலிப்ரேட் மை டார்லிங்ஸ்….” அவன் கண்களில் மின்னிய கிண்டலையும் தாண்டி அவனுக்கு அதில் உண்மையில் எத்தனை ஆசை என்பதையும் காட்டின அவன் விழிகள்.

“ம்…அந்த பொண்ணுங்களை இப்படி சனி கிழமை சனி கிழமை உனக்கு தெரியாம யாராவது தடிமாடு மீட் பண்ணா என்ன செய்து செலிப்றேட் செய்வ?...சொல்லு நானும் அதையே செய்றேன்…. ”

“ம்…நினைக்றப்பவே டென்ஷனாத்தான் இருக்குது……ஆனா அதுக்காக என் பொண்ணுங்களையெல்லாம் நான் அடிக்க மாட்டேன்…..”

“அப்போ…?”

“ம்…அந்த பையன்களை பிச்சிடுவேன் பிச்சி…உங்கள மாதிரியா இப்டி நிக்க வச்சு பேசிகிட்டு இருப்பேன்….?.” சிறு வயதில் இருந்து மாமாவிடம் பேசி விளையாடி வளர்ந்தவன் என்பதால் சரித்ரனால் இலகுவாக பேசி சிரிக்க முடிந்தது. ஆனாலும் உள் ஓரத்தில் ஷாலுவின் அப்பாவை சற்று புரிகின்றார் போலவும் தோன்றியது….அவர் சந்தேகப்பட்டார் என்பதைவிட பாதுகாக்க முயன்றார் என்பதே சரியான புரிதலோ?

மாலை ஷாலுவை சந்திக்க சென்றவன் படு உற்சாகத்தில் இருந்தாலும் அவன் உள்ளங்கை வியர்ப்பதை அவன் உணராமல் இல்லை.

ஷாலுவிற்கு இவன் மீது விருப்பமே என்பது இவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை காதல் என அவள் உணர்ந்திருக்கிறாளா என தான் தெரியவில்லை. சொன்னால் புரிந்து கொள்வாளா?

வழக்கம்போல் இவனைப் பார்த்ததும் தூள்ளி எழுந்து வந்தாள். உரிமையாய் அவள் கையிலிருந்த பேக்கை பின் கதவை திறந்து உள்ளே வைத்தவள், இவன் திறந்து விட்ட முன் கதவின் வழியாய் ஏறி இயல்பாக முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். உள்ளே ஏறி அமரும் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். காரை கிளப்பினான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.