(Reading time: 27 - 54 minutes)

லர்விழி அறிந்த வரை வசீகரன் வெளிகாரியங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படுபவன் கிடையாது. பெரிய ஜோக் என்றாலும் சின்னதாய் உதடுகளின் நீளம் கூடும் அவ்வளவே. துன்பகரமான செய்திகள் கேட்டாலும் அலட்டிக் கொள்ளவே மாட்டான்.

“நான் அழுறதால அவங்களுக்கு எல்லாம் சரியாயிடுமா? நம்மளால முடிஞ்ச உதவி எதாவது இருந்தா செய்யனும்…இல்லனா சும்மா இருக்கனும்…அழுது என்ன ஆயிடப் போகுது” ஒரு முறை இவள் துருவி துருவி கேட்ட பின் அவன் தந்த விளக்கம்.

இவளிடம் அலுவலகத்தில் நடந்த காரியங்களை சொல்லும் போது கூட அதில் காரம் கசப்பு இனிப்பு என எதுவும் சேர்க்காது பேசுவான். ஆனால் இவள் சம்பந்தப்பட்ட விஷயங்களோ அல்லது அவன் அக்கா குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்களோ எனில் எல்லாம் தலை கீழ். உணர்ச்சி பிளம்பாகிப் போவான். ஒரு முறை இவள் வம்படியாக சமையல் முயற்சிக்க, கன்னி முயற்சியில் கையில் கத்திபட, அவன் கண்ணில் நீர்கட்டியதைப் பார்த்திருக்கிறாள். அன்று முழுவதும் இவளுடன் பேசவில்லை அவன்.

முதல் நாளிலிருந்து இவளது வேதனையை தன்னதாய் ஏற்றவன் அல்லவா அவன்? இன்று செய்தி கேட்டு எப்படி ஆடிப் போவான்? இது இந்த இவளுக்கு சிரிக்ற மாதிரி விஷயமாமா? மனதிற்குள் திட்டினாள் அந்த மாணவியை.

“உங்க சார் அந்த நம்பர் உங்களுக்குன்னு மட்டும் வச்சுருக்கிறாங்களா? ரிசீவரை எடுத்ததும் மைய்யூ!!!! என்னமா? என்ன இந்த நேரத்துல கால் பண்ற? அப்டின்னு ஆரம்பிச்சார் பாருங்க…கண்டிப்பா உங்க மேரேஜ் லவ் மேர்ஜ்னு தெரிஞ்சு போச்சு…” இப்பொழுது அந்த மிஸ் வாட்சன் மட்டுமல்ல அதியும் இவளைத்தான் பார்த்தான். கிண்டல் தொனி இருந்தாலும் மரியாதை இருந்தது அப்பார்வையில்.

ஆனால் மலர்விழியின் மனம் இந்த கிண்டல் சுண்டல் எதற்குள்ளும் வர மறுத்தது. வசி பதறுவது இவளுக்கு கிண்டலா இருக்காமா? என்ற இடத்திலேயே நின்றது.

“நான் டிசைட் செய்துட்டேன்….. என் ஹஸ்பண்ட்டும்  இப்டி எனக்கே எனக்குன்னு தனி ஃபோன் கனெக்க்ஷன் வாங்கி வைக்கனும்….நான் அப்டினாத்தான் ஃபோன் பேசுவேன்…” அந்த மிஸ் வாட்சன் கிண்டலாய் அறிவிக்க அருகில் நின்றிருந்த அதியோ

“ஏய் பியூ புத்திசாலி, டாக்டர்க்கு ஒரு போன் இருந்தாலும் ஒன்பது போன் இருந்தாலும் ஆப்ரேஷன் தியேட்டர்க்கு கனெக்க்ஷன் கொடுக்க மாட்டாங்க…அதோட எடிசன் பூனை வளர்த்த கதை மாதிரி இருக்குது உன் ஆசை….….”

“அதென்ன எடிசன் கதை?” அந்த  பியூதான் கேட்டாள்.

“எதிலயோ படிச்சேன்…எந்த அளவு உண்மைனு தெரியலை….அவர் ஒரு கேட் வளத்தாராம்…அது இவர் ரூமுக்குள்ள எப்ப வேணும்னாலும் வந்துட்டு போறதுக்காக கதவுல ஒரு ஹோல் போட்டு வச்சுருந்தாராம்….அப்ப அந்த கேட் மூனு குட்டி போட்டுதாம்…அந்த குட்டீஸும் வந்துட்டு போறதுக்குன்னு கதவுல இன்னும் மூனு குட்டி ஹோல்ஸ் போட்டு வச்சாராம் எடிசன்….ஒரு நாள் அவர் பார்துட்டு இருக்றப்ப தாய் பூனையை ஃபாலோ செய்து மூனு குட்டியும் அம்மா போனா ஹோல் வழியாவே போனதை பார்த்த பிறகுதான் அவருக்கு உறச்சுதாம் ஒரு பெரிய ஹோலே போதுமே எல்லா பூனையும் போய்ட்டு வரன்னு…..அதுமாதிரி இருக்குது உன் ஐடியா… இப்போ யு எஸ்ல செல்லுலார் போன் சர்வீஸ்நு வந்து இருக்குது கேள்வி பட்டுருக்கியா…..நமக்கும் சீக்கிரம் வந்துடும்….அதுதான் பெஸ்ட்….” அந்த பியூ வாகிய மிஃஸ் வாட்சனை மறுத்துப் பேசிக்கொண்டு இருந்தான் அதி

“அது ஒன்னும் தப்பு இல்ல….எல்லா குட்டி பூனைக்கும் அம்மா கூடவே போக தானே ஆசை இருக்கும்…ஒரே ஹோல்னா ஒருதுக்கு வழி விட்டு மத்ததுல்லாம் வெயிட் செய்ய வேண்டி இருக்கும்….அப்டி எந்த பிரிவும் கஷ்டமும் வராதே இந்த 4 ஹோல் கான்சப்ட்ல…” மலர்விழி தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அவங்க வேற மீட்டிங் எதுல இருந்தாலும் இந்த போன் ரிங்க் ஆனதும் நான் கூப்டுறேன்னு தெரிஞ்சிடுமில்லையா….இன் கேஸ் எமெர்ஜென்ஸினா எனக்கு அவங்க இம்மிடியட் ரீச்ல வேணுமில்லையா…. அதான் இப்டி தனியா நம்பர் வச்சுருப்பாங்க..…” வசீகரன் செயல் ஒன்றும் முட்டாள் தனமானது இல்லை என்று சொல்லி முடித்தாள் மலர்விழி. (1990 ல காலர் ஐடி கிடையாதுந்னு நினச்சுகோங்க ஃப்ரெண்ட்ஸ்)

“எக்‌ஸாட்லி…லாஜிக் மட்டும் பார்க்கிறவங்களுக்கு லவ் தெரியாது….லவ் பண்றவங்களுக்கு லாஜிக் கிடையாது….ஹை எனக்கு கூட அதி ஜீனியஸை கவ்ன்டர் செய்ய தெரியுது…” அந்த பியூ இவளுடன் சேர்ந்து அவனை வாரினாள்

“ஏய் கவ்ண்டர் செய்தது அவங்க நீ என்ன சீன்போடுற…..?”அந்த பியூவிடம் சொன்னவன் “பை த வே நான் சும்மா பியூலாவை டீஸ் செய்றதுக்காக சொன்னது…என் அண்ணியே இதுமாதிரி வீட்டுக்குன்னு தனி நம்பர் தான் வச்சுருக்காங்க…அவங்களும் டாக்டர் தான்….சின்ன குழந்தை இருக்குது…எமெர்ஜென்ஸினா ரீச் செய்ய தேவைப் படும்..… உங்க சாரை குறை சொல்லவே இல்லை மேம்…நீங்க சொல்ற மாதிரி  இது கண்டிப்பா யூஸ்ஃபுல்லா தான் இருக்கும்……பை த வே சார் ஆஃபீஸ் எங்க…? அவங்க இங்க ரீச் ஆக எவ்ளவு நேரம் ஆகும்?”

“அவங்க ஆஃபீஸ் நுங்கம்பாக்கம், வசிஸ்னு….”

“வசிஸ்லயா? சார் அங்க என்னதா இருக்காங்க மேம்…?” இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே படு ஆர்வமாய் இடையிட்டாள் அந்த பியூலா.  மலர்விழி பார்த்த பார்வையில் அந்த ஆர்வத்தை மறைக்க வேறு முயல்கிறாள்.

சுர் என ஏறியது மலர்விழிக்கு. எப்படிப் பட்ட பெண் இவள்? வசீகரன் திருமணமானவன் என தெரிந்தும் அவன் மீது இவளுக்கு என்ன? ஒரு தடவை போனில் பேசியதில் இவளுக்கு அவனைப் பற்றி என்ன தெரிந்துவிட்டதாம்?

“ம்…அவர்தான் அங்க எம்டி. அவர் கம்பெனி அது…” சிடுசிடு தொனியில் உன் தகுதிக்கு இதெல்லாம் நீ நினச்சே பார்க்க கூடாத உயரம்…என்ற முகபாவத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பினாள் மலர்விழி.

“எம் டியா…?” அந்த பியூலாவின் முகத்தில் வந்த இருட்டடிப்பும் ஏமாற்றமும் இவளுக்கு படு திருப்தியாக இருக்கிறது.

அதேநேரம் “வசீகரன் சார் வைஃபா நீங்க…?” ஆச்சர்யமாய் கேட்டான் அதி.

“ஆமா…” பட்டென வந்தது பதில்.

“சரி வாங்க நீங்க, லன்ச் சாப்ட வாங்க…உங்க ஹஸ்பண்ட்டை அங்க தான் வர சொல்லிருக்குது…” அந்த பியூலா அழைக்க இவளுக்கு எரிச்சலாக வருகிறது..

யாரை கேட்டு இப்டி முடிவு செய்தாங்களாம்? வசீகரன் இவளை தேடி எங்கெல்லாம் அலைய வேண்டும்? அதோடு எது எப்படியோ இவள் விஷயத்தை முடிவு செய்ய இவள் யார்? வசியிடம் வழிய இப்படி ஒரு திட்டமா? ஆனால் வசீகரனை ஹோட்டலுக்கு  வரசொன்ன பிறகு இவள் வேறு என்ன செய்வதாம்?? வேண்டா வெறுப்பாக கிளம்பிச் சென்றாள் மலர்விழி. ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடித்து தந்திருந்தான் அதி.

இவர்கள் கிளம்பி வெளியே வரும் போது ஒரு சிறு படை மாணவ கூட்டம்…..”இன்னைக்கு ஈவ்னிங் பார்க்கலாம்….இப்ப ஒரு கெஸ்ட்…” அதி அவர்களுக்கு சொல்லிவிட்டு வந்தான். அவர்களும் விடை பெற்று சென்றனர்.

“ஈவ்னிங்கா அப்போ நீங்க எப்ப படிப்பீங்க…உங்களுக்கும் தான எக்‌ஸாம்…?” அந்த பியூலா அதியிடம் எரிச்சலோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அவங்களுக்கு முடிச்சுட்டு நைட் உட்கார்ந்து படிச்சுடுவேன்பா….” 

“அப்போ தூக்கம்?” கோபமாய் கேட்டாள் பியூலா.

“ப்ச்…இன்னைக்கு ஒருநாள் தானமா…..உன் க்ளாஸ்மேட்ஸ் தான அவங்க…..கஸ்டமா இருக்குன்னு தான சொல்லிதர சொல்லி கேட்டு வாறாங்க…?”

இவ என்ன பொண்ணு சும்மா சும்மா அதட்டிக்கிட்டு? இல்லனா இளிச்சுகிட்டு…… ஒரே அலட்டல் பார்ட்டி…..மனதுக்குள் பியூலா மேல் இன்னும் இன்னுமாய் எரிச்சல் கூட்டினாள் மலர்விழி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.