(Reading time: 27 - 54 minutes)

ருத்துவமனைக்கு அருகில் தான் இருந்தது அந்த ஹோட்டல். மலர்விழிக்கு காயமும் கையில்தான் எனினும் அவளுக்கு  அங்கு வந்து சேர்வதற்குள் மிகவும் சோர்வாக இருந்தது. மனதிற்குள் செறிந்திருந்த வெறுமை உணர்வு காரணம். அதி முன்னால் செல்ல அவனுக்கு ஒரு அடி பின்னால் பியூலா செல்ல இவள் கடைசியாக சென்று கொண்டிருந்தாள்.

வேகமாக வந்து சட்டென ஹோட்டல் முன் நின்றது ஒரு கார். சத்தமே புரிய வைத்துவிட்டது வந்திருப்பது யாரென….திரும்பி பார்த்தவள் காரைவிட்டு இறங்கிக் கொண்டிருந்த வசீகரனை நோக்கிச் சென்றாள்.

அவன் முகத்தில் அத்தனை வேதனை தவிப்பு. அவனும் இவளை நோக்கி ஏறத்தாழ ஓடிதான் வந்தான். மலர் கட்டியிருந்த புடவை தட்டியதோ? சற்று இவள் படிகளில் தடுமாற தன்னவளை அள்ளி எடுக்க அவன் நீட்டிய கைகளை, அவள் தன் நிலையை சமாளித்துக் கொண்டதும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான் வசீகரன். ஆனால் அவன் கண்களில் வெடித்துக் கொண்டிருந்தது வேதனை நிரம்பிய காதல் ஒன்று. அந்த பார்வையில் சென்று சேர்ந்தது பெண்ணவளின் கண்கள் நன்று.

வந்த வேகத்தில் கட்டுபாடின்றி அவன் மீது விழுந்துவிடக் கூடாதென்று அப்பொழுதுதான் நீட்டி பின் மடக்கிக் கொண்டிருந்த அவன் இடக்கையை தன் இரு கைகளாலும் பிடித்து தன் உடலை தரையோடு நிலை நிறுத்தினாள் மலர்விழி. அவனைக் கண்டதும் தான் ஓடி வந்திருப்பதை உணர்ந்தாள் அக்கணம்தான் அவள். தன் கை மேல் இருந்த அவள் இருகைகளை தன் வலக்கையால் பிடித்தான் வசீகரனும்.  மலர்விழி தான் சொல்ல நினைத்ததை சொல்ல வாயை திறக்கும் போதே அருகில் அந்த பியூலாவின் குரல் கேட்டது.

“ஹலோ சார்….வாங்க….நான் தான் கால் செய்திருந்தேன்….உங்க வைஃப் க்கு சின்ன அடிதான் பயப்படுற மாதிரி எதுவும் இல்லை…”

ஏன் பெருசா அடிபடலைனு இவளுக்கு வருத்தமோ? வசீகரனுடன் பியூலா வந்து பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை மலர்விழிக்கு.

“ வணக்கம் சார்….ஐ’ம் பியூலா” இவளை பிடித்திருந்த தன் கையின் பிடியை நீக்கி, இவள் பிடித்திருந்த தன் கையுடன் கூப்பி, கைகூப்பிய பியூலாவிற்கு பதில் வணக்கம் சொன்னான் வசீகரன். எரிமலை ஒன்று இடம் கொண்டது மலர் வசம்.

“வாங்க போகலாம் வசி…எனக்கு ரொம்ப டயர்டா இருக்குது…” இவள் வார்த்தையில் இவள் முகத்தை பார்த்தவன் கண்களில் பரிவு. இவள் கையை திரும்பவுமாக பற்றினான்.

“சார் மேடம் இன்னும் சாப்டலை….அப்டியே சாப்டுட்டு போய்டலாம் சார்….” பியூலாதான்.

அதற்குள் இவர்களை தேடி வந்திருந்தான் அதி.

“ஹலோ வசி சார் ஹவ் ஆர் யு? வெட்டிங் போல…. கங்கராஷுலேஷன்ஸ்….விஷ் யூ ய ஹாப்பி மேரிட் லைஃப்….” முழு சந்தோஷம் இருந்தது அதியின் கண்களில்.

“தேங்க்ஸ் ஆன்ட்ரூ….நீங்க வெட்டிங்க் வராம இருந்திட்டீங்களே….நான் ரொம்ப எதிர்பார்த்தேன்….”

“ஓ…எனக்கு இன்விடேஷன் வரலை…..சாரி விஷயமே தெரியாது……எனிவே ஐம் வெரி ஹாப்பி டு சீ யு அஸ் அ கப்புள்….”

“இஸ் இட்..இன்விடேஷன் வரலையா? ஐ’ம் சாரி…உங்களுக்கு இன்விடேஷன் அனுப்ப சொல்லி  இருந்தேன்…சம் ஹவ் மிஃஸ் செய்துட்டாங்க போல….”

“இல்ல ஒருவேளை இங்க ரீச் ஆகாமலும் போயிருக்கலாம்….”

“ஓ…ஓகே….பைதவே ஒரு வீக் எண்ட் நீங்க நம்ம வீட்டுக்கு லன்ச் வாங்க…”

“ஷ்யூர் சார்….வித் ப்ளஷர்…”

“தென் கேட்ச் யூ லேட்டர்…சி யூ சூன்….இப்ப நாங்க கிளம்புறோம்…ஷி லுக்‌ஸ் வெரி டயர்ட்…” அதியிடம் சொல்லிவிட்டு வசிகரன் மலரைப் பார்த்தான்.

காரில் ஏறிய பின் வசீகரன் மலர்விழிக்கு தேவையான அனைத்தும் செய்தான் தான். வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகட்டும், அவளை கவனித்துக் கொண்டதிலாகட்டும் ஒன்றிலும் குறை காணவே முடியாது. ஆனால் அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் அவளிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அவன்.

சீகரனுடன் காரில் ஏறிய பின் வேறு எதிலும் மலர்விழியின் கவனம் செல்லவில்லை. மனம் முழுவதும் அன்றைய நாள் பற்றிய சுய ஆராய்ச்சியே…..நடந்த நிகழ்வொன்றும் சிறிதானது இல்லையே….ஆக வசீகரனின் மௌனம் அவளுக்கு முதலில் கவனத்தை தொடவில்லை.

அதியை பற்றிய எண்ணங்களுக்குள் மூழ்கி இருந்தாள் அவள். எத்தனை எத்தனை விதமாய் அவனை பற்றி கற்பனை செய்திருப்பாள் அவன் புகைப்படத்தைப் பார்த்த பின்பு. ஆனால் இன்று நேரில் பார்க்கும் பொழுது அவன் உருவத்தில் புகைப்படத்திற்கும் நிஜத்திற்கும் இடையில் வேறுபாடு இல்லையெனினும், மற்ற எல்லாவற்றிலும் இவன் அவன் இல்லை என்பதாக இருக்கிறான். இவள் மனகண்ணில் பார்த்த நடை, குரல், குணம் எதுவும் எதுவும் இவன் இந்த அதி இல்லை, இல்லவே இல்லை…..

அவனை நினைத்த நொடி இவளுக்குள் உயிர் தொடங்கி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லையிடப் பட்டிருக்கும் உடல் முழுவதும் பாய்ந்து பரவுமே ஒரு மாய வசீகரம், மனோகரம், மல்லிகை வாசம், சுகப்ராவகம், ஜீவஜீவன்…..அப்படி எதுவும் நேரில் பார்க்கும் போது பாயவே இல்லையே…..

புகைப்படத்தை பார்த்த நொடியிலிருந்து, அவன் பால்வண்ண முகம் ஞாபகம் வரும் கணம் தோறும், பறக்குமே பாவை வயிற்றில் பால் மென்மை பட்டாம்பூச்சிகள். எங்கே போயின அவை? அவனைச் சுற்றி கண் படா ஒரு காந்தபுலம் இவள் கற்பனையில் உணர்வாளே எங்கே அது? நேரில் அவனைக் கண்டபின்பு இப்பொழுது வரை அவை இவள் புறம் திரும்பவே இல்லையே ஏன்?

அதி அழகின் மொத்த உருவமாகத்தான் இருக்கிறான்…..கேளாமல் உதவும் அவன் குணத்திற்கொன்றும் குறைவில்லைதான்….ஆனால் இவன் அவன் இல்லை…..இவள் மனம் கொண்ட மாயக்காரன் இவன் இல்லவே இல்லை….. இப்பொழுதோ இவன் மீதான இவள் உணர்வோ பின்னணி இசை இயற்றப்படாத ஒளி காட்சி தொகுப்பாய்…..உப்பற்ற திண்பண்டமாய், வண்ணமற்ற ஓவியமாய்…..ஏதோ இல்லை…..எதுவுமே இல்லை….எல்லையற்ற வெறுமையாய்…..

அதி என்பவன் ஒரு மனிதன் அவ்வளவே….அதுவும் இவளுக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத மனிதன்…. அவளுக்கு வந்த அந்த முதல் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். இப்பொழுது அதைப் பார்க்க எப்படி தோன்றுகிறது? வழக்கமாக அதைப் பார்க்கும் போது ஆரம்பத்தில் ஆகாயத்தில் பறப்பாள். திருமணத்திற்குப் பின்நாளில் அதைக் கண்டு ஏக்கத்தில் ஏமாற்றத்தில் வெடிப்பாள். இன்று?

ஒன்றுமில்லை…..அது ஒரு புகைப்படம் அவ்வளவே……..வெறுமையான வெறுமை….. அவளது கற்பனை கோட்டைகள் அத்தனையும் கற்பாறை கட்டிடம் இல்லை என்பதே இப்பொழுதுதான் புரிகின்றது. அது காற்று எழுதிய ஓவியம். அவைகளை உணர்ந்திருக்கிறாள் தான் சில பொழுது…சுவாசிக்க கூட செய்திருக்கிறாள் அதை வாழ்வென்று, ஆனாலும் அது அஸ்திவாரமற்ற காற்று, கலைந்து காணாது போயேவிட்டது….

மாயை….டீனேஜ் மாயை….

ஒருவேளை அதி இவளை விரும்பினால்? அவன் விருப்பத்தை அறிந்த யாரோதான் இவளுக்கு இப்படி அவன் புகைப்படத்தை அனுப்பிவிட்டார்களோ? அவன் தன் காதலை தன்னிடம் வெளிப்படுத்தினால் இவள் எப்படி உணர்வாள்? மீண்டும் பட்டாம்பூச்சியும் படும்காந்தபுலமும் பாவை மனம் சேர்ந்து காதல் போர் தோன்றுமா? கேள்வி எழுப்புகிறது அறிவு. பதில் சொன்னது ஆவியாகிய இதயம்.

அதியே விரும்பினால் கூட, எல்லாம் ஏற்றவிதமாய் அமைந்தால் கூட இவள் மனம் விரும்பாது அவனோடு ஒரு வாழ்வு….மாயக்காரன் வெறும் மாயையே…. இவனில்லை அவன்….இவள் நேசித்தது தன் சுய ஆசையை……தன்னவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்ற அவள் கற்பனையை…..அவள் கற்பனை கணவனுக்கு  இந்த அதியின் புகைப்படம் ஒரு சட்டை…..முகமூடி…..முக்காடு…… அவ்வளவே…..முகமூடி எப்படி முழுமனிதனாக முடியும்….சட்டையுடன் எப்படி  சதி பதியாக முடியும்? இனி இவளால் அதியை ஒரு போதும் ஆசிக்க முடியாது. அது தெளிவு.

இப்பொழுது நிகழ்காலம் நேரில் நிற்கிறது…எது உன் எதிர்காலம் என்கிறது அது. வெறுமையிலும் வெறுமை…..தனிமையிலும் தனிமை….இனி இவள் என்ன செய்ய வேண்டும்?????? காதல் என்பது என்ன? அப்படி ஒன்று உண்மையில் இருக்கிறதா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.