(Reading time: 27 - 54 minutes)

மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன் எழுந்து சென்றுவிட்டான்.  இவள் ஃப்ரெஷப் செய்து வரும்போது அங்கு ஆப்பம் தேங்காய் பால் ஒரு தட்டிலும், மறுதட்டில் இட்லி சட்னியும் காத்திருந்தன.

“காலைல பெரும்பாலும் ப்ரெட்டும் ஜாமும்தான் ஹாஃஸ்டல்ல இருக்றப்ப சாப்டுவேன்……எனக்கு பிரேக்பாஸ்ட் இனிப்பா இருக்கனும்….அதுக்கு இத தவிர வேறு வழி கிடையாது…” அவள் முன்பு ஒருமுறை அவனிடம் சொன்னதற்கு

 “எல்லாத்திலயும் நீ சின்னபிள்ளதான்….அவங்கதான் எப்பவும் ஸ்வீட் கேட்பாங்க….நாங்கல்லாம் ஃபீவர்னாதான் ப்ரெட்டைப் பத்தி யோசிப்போம்…” என சொன்னாலும் அடுத்து தினமும் காலை சிற்றுண்டியில் இடியாப்பாம், ஆப்பம், புட்டு, குழி பணியாரம், கார்ன் ஃப்ளேக்‌ஸ் என எதாவது இனிப்பு இருக்கும் வீட்டில்…ஆனால் கடைசியாக ஒரு இட்லி அளவு உணவாவது காரம் சேர்த்து சாப்பிட சொல்வான். அதுதான் வசீகரன்.

இப்பொழுது வந்து இட்லி தட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். அவன் செயல்படிதான் செய்து பார்ப்போமே…. அவள் உண்டுமுடிக்கும் வரை அவளைப் பார்த்திருந்தவன் அவளுக்கு அப்போதைக்கான மாத்திரைகளை கொடுத்துவிட்டு இடம் பெயர்ந்தான்.

ன்று மாலை இவளைப் பார்க்க இவளால் காப்பாற்றப் பட்ட குழந்தையின் பெற்றோர் வந்திருந்த போது நன்றாகத்தான் இருந்தது. அவர்களிடம் இவளுடன் அமர்ந்து வசீகரனும் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால் அப்பொழுது வசீகரனைத் தேடி வந்து நின்றாள் அந்த பியூலா வாட்சன். கொதிக்க தொடங்கியது மலர்விழிக்கு. இங்கேயும் வந்துட்டாளா இவள்?

முதலில் இவள் முன்பாக இயல்பாக பேசுவது போல் நல விசாரிப்புகள் எல்லாம் முடித்த பின்பு…அவனது அலுவலக அறையில் தொலைபேசி அழைக்க அதற்காக எழுந்து போன வசீகரனை இரு நிமிடங்கள் இடைவெளியில் வெறும் எக்‌ஸ்க்யூஸ்மி என பின்பற்றிப் போன பியூலா பெரும் ப்ரளயத்தை கொண்டு வந்தாள் மலர் மனதில்.

சற்று நேரத்தில் அந்த பெற்றோர் விடை பெற மலர்விழி வேக வேகமாக வசீகரனின் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அங்கு வசீகரன் முழு சிரிப்புடன் அந்த பியூலாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஷ்யூர்…ஷ்யூர்…ஃபரைடே நைட்….கண்டிப்பா வருவேன்…..வெயிட் அண்ட் சீ…”

அறிவிப்பின்றி அறைக்குள் நுழைந்த இவளைப் பார்த்ததும் அவன் சிரிப்பு அப்படியே சுருங்கி காய்ந்து போனது. அதுவரை வசீகரன் முகத்தை இளிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பியூலாவும் வசியின் பார்வையை தொடர்ந்து இவளை திரும்பிப் பார்க்கிறாள். சிரிப்பற்ற பார்வையுடன்.

இப்படி கூட சிரிப்பானா வசீகரன்? அத்தனை மகிழ்ச்சியாமா?  இதுவரை இவளிடம் இவன் இப்படி சிரித்ததே இல்லையே. ஏன் இந்த விபத்துக்குப் பிறகு அவன் இவளோடு பேசவே இல்லை. ஆம் அது இப்பொழுதுதான் உறைக்கிறது.

பியூலா கிளம்பிச் சென்றதும் முதல் விஷயமாக மலர் வசியிடம் கேட்டது இதைத்தான் “ஃப்ரைடே நைட் எங்க போறீங்க…? நானும் வருவேன்…” மொத்தப் பிடிவாதமும் குடி இருந்தது குரலில்.

“நோ…யூ ஆர் நாட் கம்மிங்…..” அதையும் விட அறைந்தார் போல் சொல்லியவன் சென்று கதவடைத்துக் கொண்டான் தன் அறையை. முதன் முறையாக அவள் கண்முன் அவன் அறை பூட்டி இருந்தது. பூட்டப்பட்டது அறையா? அல்லது அவன் மனமா???? அதிர்ந்து நின்றாள் மலர்.

ன்று இரவு முழுவதும் மலருக்கு தூக்கம் இல்லை. வசீகர ஆராய்ச்சி. முடிவில் அவள் புரிந்தது இதுதான்.  இவள் வேறொருவனை விரும்புவதைச் சொன்னபோது, அதுவும் திருமணத்தன்றே சொன்னபோது, இவள் உணர்வுக்கும் ஆசைக்கும் காதலுக்கும்…அது காதல் இல்லையென்று இப்பொழுது தெரிந்தாலும் அன்று காதலாய் தோன்றிய ஒன்றுக்கு மதிப்பளித்து இவள் ஆசை நிறைவேற தான் விலகி விவாகரத்து வரை ஒத்துக் கொண்டானே வசீகரன், அதோடு நில்லாமல் தன்னை விரும்பாமல் விலகி நிற்கும் ஒருத்தி என்று எண்ணாமல் இவள் ஆசை தேவை இவள் குடும்ப நலம் என எல்லாம் முன்னிறுத்தியே செயல்படுகிறானே அவன், அப்படியிருக்க இப்பொழுது அவன் ஒரு பெண்ணை விரும்பினால் இவள் என்ன செய்ய வேண்டும்?

பியூலாவைப் பற்றி விசாரித்து அறிந்து நல்லபடியாக அவளுடன் வசியை சேர்த்து வைக்க வேண்டும். இவள் வசியின் வாழ்விலிருந்து சுவடின்றி தூரப் போய்விட வேண்டும். இதயமெல்லாம் உதிர கொப்புளங்கள், கடும் வலி ஆனாலும் இதுதான் சரி. முடிவு செய்து கொண்டாள்.

மறுநாள் கல்லூரிக்கு பியூலாவை தேடிச் சென்றாள் மலர்விழி. ஆனால் பியூலா அங்கு இல்லை. பியூலாவின் முகவரியை சக வகுப்பு மாணவியிடம் வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கே சென்றுவிட்டாள் மலர்விழி அன்று மாலையே. அந்த வீட்டிலிருந்து குற்றுயுரும் குலையுருமாய் மரணத்தை மடியிலேந்தியவாளாய்தான் தான் வெளிவரப் போகிறாள் என அப்பொழுது மலருக்குத் தெரியாது…..

ல்லாம் இயல்பானது போல் ஒரு சூழல் வரவும் ஆதிக் தன் பக்கத்தை சொல்ல ஆரம்பித்தான்.

“அத்தானை ஆஃபீஸ்ல ட்ராப் செய்துட்டு ஒரு சின்ன ஷாப்பிங்காக அந்த பக்கம் காரை பார்க் செய்துட்டு வந்தேன்….தூரத்துல நீ அந்த ரோட்ல நுழையுறப்பவே பார்த்துட்டேன்….திரும்பி திரும்பி பார்த்துட்டே பயந்து பயந்து வந்த…..கன்ஃபார்மா நீ தான்னு தெரியலை….நம்ம முயல்குட்டிய குற்றாலத்துல விட்டு வந்தோமே….அது எப்டி இங்க வந்துச்சுன்னு ஒரு டவ்ட்….எப்டியும் ஒரு பொண்ணுக்கு ப்ராப்ளம்னு  வந்தேன்…ஸ்டில் நம்மள மாட்டிவிடுற மாதிரி எதுவும் ட்ராப்பாவும் இருந்துடக் கூடாதுல….அந்த பக்கம் ஷாப் ஓனர்ஸ் ஹெவி கேஷோட கிளம்புற டைம் அது…..அதான் பிஃஸ்டல்….”

அவன் பிஸ்டலுடன் வந்ததில் இவள் ஒரு வகையாக அரண்டிருந்தது நிஜம். அதை அவள் வார்த்தையால் வெளிப்படுத்தாவிட்டாலும் புரிந்து விளக்கினான் அவன்.

“நீங்க இவன் உங்களை காப்பாத்துன சீனை உங்க அப்பாட்ட சொல்றப்ப கண்டிப்பா இதை விளக்கமா சொல்லிடுங்க அண்ணி!!! இல்லனா அங்கிள் மாப்ளைய தப்பா நினச்சுக்கப்போறாங்க…” அண்ணியிலும் மாப்பிள்ளையிலும் அழுத்தம் கொடுத்து சிமி சொன்ன விதத்தில் துடித்துப் போனாள் ரேயா.

இலை மறை காய் மறையாக ஆதிக் அவ்வப்போது கோடிட்டு காட்டி இருந்தாலும், இப்படி வெளிப்படையாய் இவளிடம் யாரும் இவர்களது வருங்கால உறவு குறித்து உடைத்து பேசியது இல்லையே. அதிலும் அவனை வைத்துக் கொண்டு அவன் முகத்திற்கு எதிராகவே இப்படி சிமி போட்டு உடைப்பாள் என ரேயா எதிர்பார்க்கவே இல்லை.

மொத்த ரத்தமும் முகத்திற்குப் பாய, செங்கமலமாய், எதிரிலிருந்த அவனைக் கண் நோக்க முடியாமல், தன் பார்வையை எங்கு நிறுத்த என புரியாமல், எழுந்து ஓட துடித்த உடலை எங்கிழுக்க என அறியாமல், தானாக குனிந்த தலையின் மறைவில் கீழ் உதடை அழுந்த கடித்து துள்ளி ஏறிய ரத்த ஓட்டத்தை சமநிலைப் படுத்த முயன்றாள் பெண்.

“ஏய்…”என்று உறுமலாய் தொடங்கியவன் வாயிலிருந்து வர துடித்த வார்த்தையை வரவிடாமல் பல்லை கடித்து அடக்கிவிட்டு, “என்ன பேசுற நீ? அவளப் போய் அண்ணினு சொல்லிகிட்டு….” என்று தங்கையை அதட்டிய ஆதிக்கின் குரலில் அக்மார்க் கோபம் இருந்தது.

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் ரேயா.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.