ஹச் ஹச் ஹச்!
தும்மியபடி வீட்டினுள் நுழைந்தான் எஸ்.
மற்ற நாட்களை போல் அமைதியாக இல்லாமல் அன்று வீட்டினுள் இருந்து சிரிப்பு சத்தமும் பேச்சும் கேட்டது.
ஹச் ஹச் ஹச்!
தும்மலுடனே நுழைந்தவன், நந்தினியுடன் அன்று கோல்ஸ் கடையிலும் பின் ஷெரீப் ஆபிஸிலும் பார்த்த அவளின் தோழி இருப்பதை பார்த்தான்.
அவனை பார்த்து பெண்கள் இருவரும் தங்களின் பேச்சை நிறுத்தி விட்டு அமைதியானார்கள்.
எஸ் நந்தினியின் தோழியை பார்த்து,
“ஹலோ” என்றான் தன் வழக்கமான வசீகர புன்னகையுடன்.
நந்தினியின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் தோன்றின ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டு,
“இவ என் பிரெண்ட் ஸ்வேதா! ஸ்வேதா இவர் என் கணவர் சதீஷ்” என்று இருவருக
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“ஆனால் உங்க இரண்டு பேருக்குள்ள இன்னைக்கு என்ன? ஏதாவது சண்டையா? எதுவா இருந்தாலும் நீ இப்படி கிச்சனுக்குள்ள போய் நுழைஞ்சுக்குறது சரியே இல்லை. நான் உன் பிரென்ட், சோ எஸ் கிட்ட பேசும் போது என்னோட லிமிட் தெரிஞ்சே தான் பேசினேன். பட் எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க நந்து”
“......”