(Reading time: 22 - 43 minutes)

றுநாள் மாலை வரை அவளை தன்னுடன் அழைத்து வரும் விஷயத்தில் என்ன செய்வது என்ற புரிபடவேயில்லை ரிஷிக்கு. அப்போது ஒலித்தது அவன் புதிதாக வாங்கி இருந்த அந்த கைப்பேசி.

அவனது திருமணதிற்கு பிறகு அம்மாவுடன் பேசவே இல்லை. தினமும் அவன் அப்பாவுடன் பேசுவதும், ஏதாவது காரணம் சொல்லி, அவன் அம்மாவிடம் பேசுவதை அப்பா தவிர்த்து விடுவதுமே வாடிக்கையாக இருக்கிறது. அழைப்பது ஒரு வேளை அம்மாவாக இருக்குமோ? ஆவலுடன் எடுத்தான் கைப்பேசியை. அழைத்தது சஞ்சீவ்.

'சொல்லுடா....' என்றான் ரிஷி.

'உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உன் மாமனார் அவரோட வீட்டை வித்துட்டார்'

'சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்தே விட்டிருந்தான். 'வித்துட்டாரா ஏன்?'

சஞ்சா தான் கேள்விப்பட்ட அவரது நிலையை பற்றி சொல்ல சொல்ல ரிஷியினுள்ளே பூகம்பம். 'மை காட். நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேடா'

அந்த மனுஷன் அப்படிதாண்டா' என்றான் சஞ்சா.

'சரி அந்த வீட்டை வாங்கினது யாரு?' சட்டென கேட்டான் ரிஷி.

மூன்று நாட்கள் கடந்திருந்தன. அருந்ததி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தாள். அன்று காலை தனது மாடி அறையில் படுத்துக்கிடந்தாள் அருந்ததி. மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்த சந்திப்பிற்கு ரிஷி அவளை சந்திக்க வரவே இல்லை.

ரிஷியின் நினைவுகள் இப்போதெல்லாம் அவளை சரியாக உறங்கக்கூட விடுவதில்லை. 'அவனை விலகிப்போ என்று சொன்னவளே நான் தானே? இப்போது ஏன் உள்ளுக்குள்ளே மறுகுகிறேனாம்? அவளுக்கே புரியவில்லை.

வீட்டுக்கு வந்தாகி விட்டது. இனி அவனை சந்திப்பது கடினமோ என்று கூட தோன்றியது அவளுக்கு. எது நடந்தாலும் இந்த வீட்டின் வாசல் படியை அவன் மிதிக்ககூட மாட்டான் என்பது இந்த நாடறிந்த உண்மை.

'என்னிடம் சொல்லாமல், அவன் லண்டன் சென்று விட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை' மனதிற்குள் பல ஏக்கங்கள் பரவ, 'வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம்' தனக்குள்ளே சொல்லிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு உறங்க முயன்றாள் அருந்ததி.

அப்போது அவள் வீட்டு காம்பௌண்டுக்குள் வந்து நின்றது அந்த கார். அதிலிருந்து இறங்கினான் ரிஷி. அவனது கையில் அந்த வீட்டின் பத்திரங்கள்.

இரண்டடி நடந்தவன், அப்படியே நின்றான். தலை நிமிர்த்தி அந்த வீட்டை பார்த்தான். மனதின் அடி ஆழத்தில் இருக்கும் சில காயங்கள் சுள்ளென வலிப்பதை போன்றதொரு உணர்வு அவனுக்கு.

'அவமானம் என்றால் என்ன? அதன் சுவையும், அது தரும் காயங்களும் எப்படி இருக்கும் என்பதை அவனுக்கு முதன் முதலில் உணர்த்தியதே இந்த வீட்டினுள் நிகழ்ந்த அந்த நிகழ்வுகள் தானே???

அது ஒரு டிசம்பர் 31.!!! அவன் திரையுலகிற்கு வந்த பிறகு வந்த முதல் டிசம்பர் 31.!!! அவன் நடித்த முதல் திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றிப்பெற்றிருந்த சமயம் அது. அந்த திரைப்படத்தை இயக்கியவர் இந்திரஜித். அப்போது அருந்ததி டெல்லியில் படித்துக்கொண்டிருந்தாள்.

மறுநாள் புது வருடம் என்பதால் தனது வீட்டில் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் இந்திரஜித். திரையுலகத்தின் பெரிய மனிதர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அந்த திரைப்படத்தை பற்றியே பேச்சுகளே அங்கே அதிகமாக இடம் பெற்றன.

எல்லாருடைய பாராட்டுகளிலும் வாழ்த்துகளிலும் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்தான் ரிஷி. அதை ஜீரணித்துகொள்ளவே முடியாமல் அமர்ந்திருந்தார் மேகலா. எப்படியாவது அவனை அவமானப்படுத்த துடித்தது அவர் மனம்,

அந்த வீட்டில் இருந்த மிகப்பெரிய கூடத்தில் விருந்து. எல்லாரும் சாப்பிட துவங்க, மேகலாவின் எண்ணங்கள் புரியாமல் பெருமை பொங்க சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ரிஷி.

ஏதோ யோசனை தோன்றியிருக்க வேண்டும் மேகலாவுக்கு. அங்கே பரிமாறிக்கொண்டிருந்த ஒரு பணியாளின் காதில் எதையோ கிசுகிசுத்தார் மேகலா. அந்த பணியாள் அங்கிருந்து அகல ரிஷியை தொட்டது மேகலாவின் ஏளன பார்வை.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து, அந்த கூடத்தில் இருந்த மிகப்பெரிய டி.வி.யின் திரையில் ஒளிர்ந்தது அந்த திரைப்பாடல். எல்லார் பார்வையும் டி.வியின் திரையில் பதிந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று புரியவே சில நொடிகள் பிடித்தது ரிஷிக்கு. புரிந்தபோது உடல் அப்படியே கூச துவங்கியது அவனுக்கு.

'என்ன ரிஷி பாட்டு சூப்பர் இல்ல?' மேகலா எள்ளலாக கேட்க அங்கே சிரிப்பலை. அடுத்து அவன் காதுகளை வந்து தொட்டன ஒரு சில கேவலமான வர்ணனைகளும், ஏளன பார்வைகளும்.

கொதித்துப்போனது போனது அவன் ரத்தம். பேசியவர்களை அடித்தே கொன்று விட துடித்தன அவன் கைகள். ஆனால் வந்திருக்கும் பெரிய மனிதர்கள் முன்னால் எதையுமே வெளிக்காட்டும் தைரியம் அவனிடம் இல்லை அப்போது. '

'ஹேய்... மேகலா என்ன பண்றே நீ? அதை ஆஃப் பண்ணு.' இடை புகுந்தார் இயக்குனர். 'அட பாட்டு தானே இதுக்கு போய் ஏன் டென்ஷன் ஆகறீங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன்' மிக சாதாரணமாக சொன்னார் மேகலா. வந்திருப்பவர் முன்னிலையில் அதற்கு மேல் அந்த விஷயத்தை பெரிதாக்க விரும்பவில்லை. இயக்குனர்.

தன்மானம் மொத்தமாக அடிப்பட்ட உணர்வில், வலையில் சிக்குண்டு பறக்கவே இயலாத பறவையாய், பார்வையை கூட நிமிர்த்தாமல் அந்த பாடல் முடியும் வரை முகம் இறுக  தலை குனிந்தே அமர்ந்திருந்தான் ரிஷி.

பாடல் ஐந்து நிமிடத்தில் முடிந்துதான் போனது. ஆனால் அந்த நிமிடங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், அதன் பிறகு அவன் சந்தித்த அவமானங்களும், கேட்ட வார்தைகளும்....

தலையை குலுக்கிக்கொண்டு பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்தான் ரிஷி. மனம் பழைய நினைவுகளில் உழன்றால் செய்ய வேண்டிய வேலைகள் தேங்கிப்போகும். இடம் வலமாக தலையை அசைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அந்த கூடத்தின் சோபாவில் கையில் ஏதோ ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தார் மேகலா. பல வருடங்களுக்கு பிறகு மறுபடியும் இந்த வீட்டுக்கு வருகிறான் அவன்!!! கம்பீரமான நடையுடன் உள்ளே வந்தான் ரிஷி. அவனை பார்த்தவுடன் வியப்பில் உயர்ந்தன மேகலாவின் புருவங்கள். எங்கே வந்தான் இவன்???

அவனது பார்வை சுழன்று மொத்த கூடத்தையும் ஒரு முறை அலசி திரும்பியது. மெல்ல நடந்து மேகலாவுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் சென்று சாய்ந்து அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான் ரிஷி.

'எங்கேடா வந்தே நீ?' உனக்கு தன்மானம் ஜாஸ்தி ஆச்சே.??? இந்த வீட்டுக்குள்ளே வர மாட்டியே??? எள்ளலாக கேட்டார் மேகலா. 'ஓ!!! பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியலையோ??? அதுதான் தன்மானமெல்லாம் காத்திலே போயிடுச்சு போல!!!'

'உண்மையிலேயே அருந்ததி ஏன் மேலே வெச்சிருக்க பாசதுக்கு எதை வேணும்னாலும் காத்துலே பறக்க விடலாம்' என்றான் அழுத்தமாக. ஆனால் நான் இப்போ வந்தது உங்க எல்லார் கிட்டேயும் வேறொரு முக்கியமான விஷயம் பேச, அது என்னென்னா,,, என்றபடியே அந்த வீட்டு பத்திரங்களை அங்கே இருந்த டீப்பாயின் மீது போட்டான் ரிஷி. 'இந்த வீடு இனிமே எனக்கு சொந்தம்!!!!

Episode # 05

Episode # 07

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.