(Reading time: 77 - 154 minutes)

ன்னதிது எஸ்பி சார் திடீர்னு அவதார் சேஞ்ச்?”

அவனுக்கு பிடித்த மின்ட் சில்லரை  அவனிடம் நீட்டியபடி கேட்டாள். கோவாவில் அதை அவன் விரும்பி குடித்த ஞாபகம் அவளுக்கு.

“தேங்க்ஸ் ரேயு….பட் இப்ப வேண்டாம்…பசிக்குது….எம்டி ஸ்டமக்ல எனக்கு இந்த ஃப்ளேவர் பிடிக்காது…..ட்ரெஸ்ஸ சொல்றியா எல்லோரும் வேஷ்டி கட்டலாம்னு சொன்னாங்க அதான்….” சிரிப்பின்றி சொல்லிக்கொண்டே எதையோ கவனிக்க என நகர்ந்து போயிருந்தான் அவன்.

அப்பொழுதுதான் கவனித்தாள் ஆண்கள் அனைவருமே வேஷ்டி சட்டையில். ஓ!!!

பசியோடயா அலைஞ்சுகிட்டு இருக்கான்….?

அவ்வப்பொழுது விருந்தினர்களுக்கு பரிமாறிக் கொள்ளப் பட்டிருந்த ஸ்டாட்டர்ஸில் ஃபில்லிங்காய், அவனுக்கு பிடித்தமாய் இருக்கும் என இவளுக்குத் தோணியவைகளை எடுத்துக் கொண்டு போய் மீண்டுமாய் அவனைத் தனியாக பிடித்து நீட்டினாள்.

“ஹேய்…என்ன இது இன்னைக்கு கவனிப்பெல்லாம் பலமா இருக்குது…? பட் இப்ப டைம் இல்லமா….” நீட்டியதை தொடக் கூட இல்லாமல் போய்விட்டான்.

என்னாச்சு இவனுக்கு? என்னை அவாய்ட் பண்றானா? கோபமா இருக்கானோ? அடுத்து அவள் பார்வை அவனையே சுற்றிக் கொண்டு இருந்தது.

கூட்டத்தில் ஒவ்வொருவரையாக சந்தித்துப் பேசி சிரித்துக் கொண்டிருந்த ஆதிக் மொபைல் சிணுங்கவும் அதைக் காதில் வைத்துக் கொண்டு வீட்டின் பக்கவாட்டுக் கதவு வழியாக தோட்டத்திற்குள் போனான்.

அவசரமாக அவனைப் பின் தொடர்ந்தாள் மனைவி.

சுவரருகில் நின்று மொபைலில் பேசிக் கொண்டிருந்தவன் நெற்றியில் போய் கை வைத்துப் பார்த்தாள். உடம்பு சரியில்லையோ?

அப்பொழுதுதான் அவள் வருகையை உணர்ந்தவன் சுற்றிலும் ஒரு மின்னல் பார்வையை சுழலவிட்டு யாருமில்லை என்று உறுதிபடுத்தியபடி அவளை தன் மீது இழுத்து சாய்த்தான். விலகி எழும்ப நினைத்தவள் அசைய முடியாதபடி இடையோடு வளைத்துக் கொண்டான்.

“இல்லத்தான்…..எப்டினாலும் இது என் கேஸ் கிடையாதில்லையா….? அதான் நைட் கிளம்புறோம் ….நாளைக்கு அங்க ஆஃபீஸ் போகனும்….லீவ் எடுக்க முடியாது….” மொபைலில் பேச்சைத் தொடர்ந்தான்.

அவன் உடல் நலம் சரியாக இருப்பது புரிந்தாலும் மனதிற்குள் ஒரு வாட்டம். ஏமாற்றம்.

அவனை அணைத்த படி அவன் மார்ப்பிற்குள் முகம் புதைத்தாள்

அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் கேட்டாள்

“அம்மா சரியா பேசலையா ஆதிப்பா? அதான் அப்சட்டா…?”

“ஏய் முயல்குட்டி நான் நல்லாத்தான் இருக்கேன்……ஆனா ஒரு சின்ன ஹெல்ப் வேணும்….நானா உன்ட்ட வந்து பேசுற வரை நீ உள்ள மத்தவங்க கூட இரு…..”

“ஹீம் அடுத்த ட்ராமவ ஆரம்பிச்சுடீங்களா….?” சலித்துக் கொண்டே உள்ளே போனாள் ரேயா.

அடுத்து ஒரு அரைமணி நேரத்திற்கு அவன் இவளைத் தேடி வரவே இல்லை. திரும்பி அவனைத் தேடிப் போகலாமா என இவள் நினைத்த நேரம் இவளிடம் வந்து நின்றது அவனது அம்மா ஜெயா.

“உன்ட்ட கொஞ்சம் பேசனும் ரேயாமா?”

இவள் கையைப் பிடித்தபடி தோட்டத்தை நோக்கி நடக்க தொடங்கினார்.

“என்னாச்சு ரேயாமா? அவனுக்கு என்ன கோபம்? நானும் பார்த்துட்டே தான் இருக்கேன்….நீ போய் போய் பேசுற….அவன் முகம் கொடுத்தே பேசலை….? உங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் இருக்கனும்னு தான நான் விலகி இருக்றதே….இதுல நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டா என்ன அர்த்தம்?....இவன் மாமன்காரன் வரலைனா அதுக்கு நீ என்ன பண்ணுவ? ”

“ம்….அவ கூட நீங்க சண்டை போட்டா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துப்போம்னு நீங்க தான ஃபார்முலா சொல்லி கொடுத்தவங்க….அதே ஃபார்முலாவை நான் இப்ப டெஸ்ட் செய்து பார்க்கேன்….நான் அவட்ட சண்டை போட்டா நீங்க அவ கூட சேர்ந்துகிடுவீங்களான்னு….”

ஆதிக் தான்.

“அது…”

திணறிப் போனார் ஜெயா ஒரு நொடி. பின்பு….

”போடா இப்டியா ஏமாத்துவ…?”

என மலர்ந்த முகத்துடன் மகனுக்கு ஒரு அடி வைத்தார்.

“ஹலோ என் பொண்டாட்டியோட மாமியாரே….இப்ப புரியுதா? அரை மணி நேரம் நாங்க பேசிக்கிடலனாலே உங்களுக்கு வலிகுதே….நீங்க விலகி விலகி போனா எங்களுக்கு எப்டி இருக்கும்னு?”

பாசமாய் பூரிப்பாய் மகன் கன்னத்தில் ஒரு செல்ல தட்டு.  ஜெயா தான்.

“அது….உங்க மாமா …. அவன் கொஞ்சம் செல்ஃபிஷ்…பாசமானவன் தான்….ஆன முதல்ல அவன் விஷயம் அவனுக்கு நடக்கனும்…அப்றம் தான் அடுத்தவங்கள யோசிப்பான்…. அவன் விஷயம் வெளிய வர்றப்ப அவன் பக்கம் நியாயம்  இருக்காதோன்னு தோணிச்சுடா, அத வச்சு நாள பின்ன ரேயாவுக்கு ஏமாற்றமா தோணி…உங்க ரெண்டு பேருக்கும் ப்ரச்சனை ஆகிடுமோன்னு பயமாயிட்டு ……இப்டி நான் வேண்டாம்னு சொல்லியும் ரேயா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்னா….நம்ம குடும்பம் எப்டி இருந்தாலும் பிரவாயில்ல…..நீ மட்டும் போதும்னு  வருவா…..அப்ப வசிய பத்தி என்ன பூதம் வெளிய வந்தாலும் உங்களுக்குள்ள ப்ரச்சனை வராதுன்னு பார்த்தேன்டா……”

ஆதிக் யூகித்திருந்ததை அப்படியே சொல்லி முடித்தார் அவன் அம்மா.

தன் தோள் உயரத்திற்கே இருந்த தன் அம்மா தோளைச் சுற்றி கையைப் போட்டு குனிந்து அவர் தோளில் முகம் நிறுத்திக் கொண்டான்.

“அதெல்லாம் தெரியும் ஜெயு….ஆனா அதுக்காக அந்த ஷாக் ட்ரீட்மென்ட் ரொம்ப ஓவர்…..நாங்கல்லாம் அதைப் பேச்சு வார்த்தையிலே ஏற்கனவே சால்வ் பண்ணிட்டுதான் கல்யாணத்துக்கே ஸ்டெப் எடுத்தோமே…. உங்க பையன் இன்னும் எல் கே ஜி போற குட்டிப் பாப்பா இல்லை….இதெல்லாம் ஹேண்டில் பண்ணிடுவான்னு கொஞ்சம் நம்பிக்கையும் வேணும்…..”

“அப்டிங்களா பெரிய மனுஷா…..அப்ப நான் ஏன் செய்றேன்னு கண்டு பிடிச்சவுடனே இதே விளக்கத்த அப்ப சொல்லிருக்கலாம்ல சார் நீங்க…?”

“அதுவாங்க ஜெயு…..இந்த விஷயம் தெரியுறப்ப உங்க தம்பி சார் விஷயமா எங்கள ப்ரச்சனை துரத்துதுன்னு தெரிஞ்சுட்டு….அதுக்குள்ள உங்கள வேற ஏன் இழுக்க….விலகி இருக்றது உங்களுக்கு சேஃப்டினு விட்டுடேன்……இந்த எஸ் பி என்ன பண்ணாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும் ஜெயு டார்லிங் ”

இக் காட்சியை சிரித்து ரசித்தபடி பார்த்திருந்த ரேயாவிற்கு அடுத்து அவன் சொன்ன விஷயத்தில் புரை ஏறியது.

“பைதவே பையனுக்குதான் எல்லாம் புரிஞ்சுட்டே இனிமே என் செல்ல மருமகள செல்லம் கொஞ்ச போறேன்னு எதுவும் இப்போதைக்கு ப்ளான் போட்றாதீங்க ஜெயு டார்லிங்….ஏன்னா இன்னும் எனக்கே அங்க அப்டி ஒரு சான்ஸ் கிடைக்கலை…”

சொல்லி முடிக்கவும் இவளுக்கு புரையேறும் என அறிந்திருந்தவன் போல் இவள் தலையை தட்ட ஆதிக் கை நீட்டவும் அவளுக்கு புரையேறவும் சரியாக இருந்தது.

இதுக்கு மேல் அங்கிருந்தால் இவன் என்னத்தை பேசி வைப்பானோ….

”வரேன் அத்த…”

 வீட்டைப் பார்த்து ஓட்டமும் நடையுமாய் ஓடிப் போனாள் ரேயா. மனமோ வெகுவாய் இலகுவாகி இருந்தது. என்னதான் திருமணத்திற்குப் பின் இவளிடம் குத்தலும் குடச்சலுமாய் ஜெயா நடந்து கொள்ளவில்லை எனினும் தாமரை இலை தண்ணீர் போல் ஒரு விலக்கம் இருந்தது நிஜம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.