(Reading time: 77 - 154 minutes)

ர்மியோட இன்டெலிஜன்ஸ் டிபார்ட்மென்ட்க்கு இன்ஸ்ட்ரூமென்ட் டிசைன் செய்ற என் ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா எங்களை மானிடர் செய்ய அரேஞ்ச்மென்ட் செய்திருந்தேன்…. எங்களை வீட்ல வச்சே கண்டெய்னர்ல நீங்க லோட் செய்துட்டீங்க….அப்டினா நீங்க எங்களை ஷிப் வழியாதான் கொண்டு போகப் போறீங்கன்னு யோசிச்சு….போர்ட்ல இருந்த ஷிப்ஸ்ல அப்ப கிளம்ப போற ஷிப்…அது போகப்போற டைரக்க்ஷன்….அந்த டைரக்க்ஷன்ல….இன்டர்நேஷனல் வாட்டர்ஸ்ல வெயிட் செய்ற இன்னொரு ஷிப்னு எல்லாத்தையும் சர்வே செய்து…. நீங்க எங்களுக்காக வெயிட் செய்துட்டு இருந்த ஷிப் வரை லோகேட் செய்துட்டார் அந்த ஃப்ரெண்ட்….. எனக்கோ ரேயுக்கோ எதோ ப்ராப்ளம்னா நான் அவருக்கு சிக்னல் செய்ய ப்ரொவிஷன் கொடுத்ருந்தார் …இன்ஃபாக்ட் ஃப்யூ எக்‌ஸ் கமண்டோஸை அந்த ஷிப்ல நைட்டோட நைட்டா ட்ராப் செய்திருந்தார் அவர்….ஃபுல் பேக்கப்போட தான் நாங்க வந்தோம்…..”

“அப்ப நீங்க ரேயாட்ட போட்ட சண்டை எல்லாம் ட்ராமாவா?”

அதிக்கு இப்பொழுதான் விஷயம் புரிய கேட்டான். கோபம் எதுவும் அவன் முகத்தில் இல்லை. சிறு சிரிப்பும் முழு மகிழ்ச்சியும்தான்.

“என்ன அங்கிள் நீங்க….? நான்லாம் உங்க பொண்ண இப்டி ட்ராமால அடிச்சாத்தான் உண்டு….நிஜத்துல அடிக்றதுலாம் அவ வேலை தான்….”

சென்னையிலிருந்த ரேயாவின் தந்தை வீட்டில் தான் இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தது. உரையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு காஃபி கொடுக்கவென அப்பொழுதுதான் அங்கு வந்த ரேயா இதைக் கேட்டு

“ஹும்…இப்டிலாம் பொய் சொல்ல கூடாது…”

சிணுங்கலாய் சொல்லியபடி அவன் தோளில் ஒரு கையால் மெல்ல தட்டியவள், பின் மீண்டுமாக இரண்டு கைகளாலும் கையிலிருந்த ட்ரேயைப் பற்றி காஃபியை முதலாவதாக தன் சித்தப்பாவிற்கு நீட்டினாள்.

“பாத்தீங்களா உங்க முன்னாலயே இப்டி அடிக்கா தனியா இருக்கப்ப எவ்ளவு அடிப்பானு நீங்களே யோசிச்சுக்கோங்க….”

இப்பொழுது அதி சிரிக்க, ரேயா ஆதிக்கை முறைத்தாள்.

“சரித்ரன் அண்ணா முதல்லயே சொன்னாங்க தனியா கூட்டிட்டுப் போய் அடிக்றதுதான் இவ ஸ்டைல்னு….இருந்தும் துணிஞ்சு கல்யாணம் செய்துட்டேன்….ஆனா இவ்ளவு நாளா ஜிம் போய் பாடி ஃபிட்னெஸ் மெய்ன்டெய்ன் செய்ததோட உண்மையான பலன் இப்ப கல்யாணத்துக்கு பிறகுதான் புரியுது…..அடி தாங்க முடியுதே அதைத்தான் சொல்றேன்…”

ஆதிக் தொடர, அதி  வாய்விட்டு சிரிக்க

“வாங்க கவனிச்சுகிறேன்…”

சின்னதாய் முனங்கிவிட்டு சென்றுவிட்டாள் ரேயா.

“எனக்கு உங்க ரெண்டு பேரையும் இப்டி பார்க்க எவ்ளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா……உங்க வசி மாமாக்கும் அப்டித்தான் இருக்கும் மாப்ள”

அதி தன் கருத்தை வலியுறுத்த முனைந்தான்.

“சொன்னேனே அங்கிள்….உங்க மேல எனக்கு வருத்தம் உங்க ஃப்ரெண்டை நீங்க அளவுக்கு மீறி நம்பினதுல மட்டும்தான்….அடுத்தவங்கட்ட பொய்யா நடந்துகிறவங்க நம்மட்ட மட்டும் எப்டி உண்மையா இருப்பங்கன்னு எதிர் பார்த்தீங்கன்னு தெரியலை….பட் மத்த எல்லாத்லயும் நீங்க உண்மையா இருக்க முடிஞ்சவரை ட்ரை பண்ணிருக்கீங்க….பியூலா ஆன்டிட்ட உண்மைய சொல்லிருக்கீங்க…..அவங்க லைஃப் நல்லா இருக்கனும்னு பார்த்திருக்கீங்க…பின்னயும் அவங்க உணர்வுகளுக்கு முக்கியதுவம் கொடுத்ருக்கீங்க….உங்க அண்ணா ஃபேமிலிக்கு எது நல்லதுன்னு யோகிச்சுருக்கீங்க….இப்பவும் எனக்கும் ரேயாவுக்கும் கஷ்டமா இருக்குதுன்ன உடனே உதவி செய்யன்னு ஓடி வந்துட்டீங்க….

“பட் உங்க வசிகரன் சாரைப் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க….அவர் தன் வைஃப்ட்ட கூட உண்மைய சொல்லலை….அவங்களை உங்கப்பாட்ட என்ன பொய் சொல்ல சொல்லிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியாது….”

“எங்கப்பாட்ட அவங்க வைஃப் என்ன சொன்னாங்க? பியூலா கூட சண்டையில என்னை ஃபயர் செய்துகிட்டேன் சொல்லிட்டதா சூர்யா சொன்னான்….அந்த காதல் ஏற்கனவே எங்கப்பாவுக்கு

பிடிக்காத ஒன்னு…அதனால அதுக்கு மேல இதை குடைய மாட்டார்னு ப்ளான்னு சொன்னான்…”

“இல்ல…உங்க அப்பாவோ ப்ரதர்ஸோ அதை எப்டி அக்செப்ட் செய்வாங்க?” மலர்விழியை வசீகரன் சொல்ல சொன்ன கதையை இப்பொழுது ஆதிக் அதிக்கு தெரிவித்தான்.

“அத சொல்றப்ப அத்தைக்கு எவ்ளவு கஷ்டமா இருந்திருக்கும்? யாரோட உணர்ச்சிகளையும் கொஞ்சம் கூட மதிக்காத ஒரு செல்ஃப் சென்டர்ட் பேர்சன் தான் வசிகரன்  சார். இப்பவும் நானும் ரேயுவும் பேசுறதை கேட்டுட்டு  அவர் கொஞ்சமாவது எங்க பக்க கஷ்டத்தை யோசிச்சாரா?....அவர் கூட உறவு வச்சுகிறது ஆபத்து…”

சிறிது நேரம் மௌனமாக இருந்தான் அதி.

“நீங்க இப்டி செய்வீங்களான்னு என்னைப் பார்த்து கேட்டா நிச்சயமா மாட்டேன்னு தான் சொல்வேன், பட் வசி சார் கொஞ்சம் பயந்த டைப், அவரை சூர்யா இப்டி உங்க வைஃப் சொன்னாதான் நீங்க தப்பிபீங்கன்னு எதாவது சொல்லி பயம் கட்டிருப்பான் இவரும் பயந்திருப்பார், அதோட உங்கள வாட்ச் பண்ற அந்த சீடிய அவர் என்ட்ட கொடுக்க காரணமும், நான் எதாவது ஆக்க்ஷன் எடுப்பேன்னு எதிர்பார்ப்பா கூட இருந்திருக்கலாம்….ஏன்னா இவ்ளவு வருஷ பழக்கத்துல என்னைப் பத்தி அவருக்கு தெரியுமே….”

“அதான்….அது எனக்கும் புரியுது அங்கிள்….அப்ப கூட ரிஸ்க் எடுக்றது நீங்களா இருக்கடும் நான் மாட்டிக்க கூடாதுன்ற எண்ணம் இருக்குதுன்னு தான அர்த்தம் ஆகுது?”

அதன்பின் அதியுமே வசிகரனைப் பற்றி எந்த பேச்சையும் எடுக்கவில்லை.

ன்று அங்கு விருந்து.

வந்தனா குடும்பத்தினர், ஆதிக் பெற்றோர், அதி அண்ட் ஃப்ரெண்ட்ஸ் குடும்பம், ஷாலு சரித்ரன், அவர்களது மகன் வின்யத், மகன் குடும்பத்துடன் சில நாட்கள் தங்கிவிட்டுப் போகவென வந்திருந்த சரித்ரனின் பெற்றொர், ஆல்வின் சித்தப்பா குடும்பம், ஓடோடி வந்திருந்த செல்வின் சித்தப்பா ஃபேமிலி மற்றும் சென்னையிலிருந்த நெருங்கிய நட்பு மற்றும் உறவு வட்டம் என அனைவருக்கும் அழைப்பு. இடம் சென்னை ராஜ்குமார் இல்லம். ஏற்பாடெல்லாம் ஆதிக் ரேயா.

அவசர அவசரமாக தன் உடைகளை குடைந்து கொண்டிருந்தாள் ரேயா. மனதிற்கு பிடித்த அனைத்து உடைகளையும் தஞ்சாவூர் அள்ளிச் சென்றுவிட்டதால் இங்கு இருப்பதில் எதை உடுத்த என அவளுக்கு பெரும் குழப்பம்.

சூர்யா கைது ப்ரச்சனையின்றி அரங்கேறியதும், அதி சித்தப்பா இந்தியா கிளம்பும் தகவலும் கிடைக்க உச்ச ஆனந்தத்தில் ஓடி வந்திருந்தவள் உடை பற்றியெல்லாம் எதையும் திட்டமிட்டிருக்கவில்லை.

“ஏய்க் குட்டிப் பொண்ணு எனக்கு ஒரு ஃபேவர் பண்ண முடியுமா….? இன்னைக்கு இந்த சேரி கட்ட முடியுமா?”

அறைக்குள் வந்த ஆதிக் அவளிடமாக அந்த புடவையை நீட்டினான்.

அவன் தரும் முதல் பரிசு.  இளம் பிங்க் வர்ண புடவையில் முத்து வேலைப் பாடுகளும் பார்டரில் கோல்டன் மற்றும் ஆங்காங்கே  காப்பர் சல்ஃபேட் த்ரெட் பூக்களும்.

அப்பொழுதே உடுத்தும் படியாய் அனைத்தும் ஆயத்தமாய்.

வெகு மென்மையாய் ஒரு உணர்வு அவளுள்.

அதற்கு நேர்மாறாக அழுந்த ஒரு முத்தத்தை அவன் கன்னத்தில் இறக்கிவிட்டு அவசர அவசரமாக உடை மாற்ற ட்ரெஸிங் ரூமிற்குள் ஓடினாள்.

எப்படி இருக்கிறது என அவனிடம் தான் முதலில் காட்ட வேண்டும் என அவசர அவசரமாக உடுத்தி வந்தால் அவன் அங்கு இல்லை.

அறையிலிருந்து கீழே இறங்கி வந்தால் அனைவரும் வந்திருந்தனர். ஒவ்வொருத்தரையும் வரவேற்று ஓடி ஆடி கவனிக்க இடையில் கண்ணில் தட்டுப் பட்டான் ஆதிக். வேஷ்டி சட்டையில் அவன்.

ஆணழகாய், கம்பீரமாய்……ஆனாலும் இது என்ன?

ஏதோ ப்ளான் செய்றானோ? ஜிவ் என்றது அவளுள்.

இவளைப் போல்தான் அவனும் பிஸி. ஒருவழியாக தனியாக பிடித்தாள் அவனை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.