(Reading time: 77 - 154 minutes)

புரிந்துவிட்டது ஆதிக்கிற்கு, இவன் உள்ளணர்வு அதியை நம்புகிறது. ஆனால் வசீகரனை நம்பவில்லை. ஏன்?

ஆதிக்கின் அம்மாவின் செயலுக்கும் காரணம் அவர் வசிகரனை நம்பாததுதானே. வசிகரன் பற்றி வந்தனா கூறிய கதையைக் ஆதிக் வழியாக தெரிந்த கொண்ட பின்னும் ஆதிக்கின் அம்மா  டேவிட் மீது சிறிது கூட வருத்தப் படவில்லையே…ஆனால் எப்படியும் ஒரு நாள் வசிகரன் புறம் குற்றம் இருப்பதாக தெரிய வரும் என்று தோன்றிவிட்டது அவருக்கு….தன் தம்பியை அவர் அறிவார் அல்லவா?

டேவிட் மீது எந்த சந்தேகமும் இன்றி ஆதிக் குடும்பம் மேல் நல்ல மதிப்போடு ஆதிக்கை திருமணம் செய்து வரும் ரேயா, திருமணத்திற்குப் பின்னால் ஆதிக்கின் குடும்ப உறுப்பினர் ஒருவர் நல்லவரில்லை என அறிய வரும்போது, ஒரு மோசமான குடும்பத்திற்குள் தான் வந்து ஏமாந்து போய் மாட்டிக் கொண்டதாக உணர்வாள். அப்பொழுது ஆதிக்கிற்கும் அவளுக்கும் இடையில் ப்ரச்சனைகள் எழக் கூடும்…..

அதே இது இப்பொழுது ஆதிக்கின் அம்மாவே குணம் பத்தாதவர் என தெரிந்தே அவள் திருமணத்திற்கு சம்மதிக்கும் போது தம்பதிகளுக்குள்  உள்ள உறவுமுறை இப்பொழுதிலிருந்தே அன்யோன்யமாய் இருப்பதோடு பின் வசிகரனைப் பற்றி தெரிய நேர்ந்தாலும் ஆதிக்கிற்கும் ரேயாவுக்கும் இடையில் ப்ரச்சனை எதுவும் எழாது என எண்ணியதால் தான் ஜெயா திருமணம் வரை ரேயாவைக் குத்திக் கிளறியது. அதே நேரம் திருமணத்தை மறுக்கவும் இல்லை. இதை ஆதிக்கும் புரிந்து கொண்டான்.

மேலும் தஞ்சாவூர் வீட்டை வந்து பார்த்தவர் அங்கு ரேயா தனியாக பகல் பொழுதுகளில் இருக்க நேரிடும் என அறிந்திருந்தாலும், பாதுகாப்பை பற்றிக் கவலைப் படவில்லை. தன் தம்பி உயிருடன் இருந்தால் கூட தன் பிள்ளைகளை கொலை செய்யும் அளவுக்குப் போக மாட்டான் என அவர் எண்ணுகிறார் என்பது ஆதிக்கின் புரிதல்.

ஆக வசிகரனிடம் நிச்சயம் குற்றம் இருக்கிறது. ஆனால் கொலை…..

“ சரி நான் எது எதையோ பேசிட்டுப் போறேன்….இப்ப உள்ள ப்ரச்சனைக்கு வருவோம்….” அதியின் கூற்றில் தன் கவனத்தை மீண்டுமாய் அதியின் மீது குவித்தான் ஆதிக்.

“அப்டி நாங்க அப்ராட் போன பிறகு….எல்லாத்தையும் ப்ளான்படி செய்து முடிச்சது என் ஃப்ரெண்ட்ஸ்தான்……வசிஸ்ல உள்ள இருந்த மெஷினரிஸை கூட நல்ல விலைக்கு வித்து கொடுத்தான் சூர்யா….ஃபேக்டரியை டிஸ் மாண்டில் செய்துட்டு அந்த லேண்டையும் நல்ல ரேட்டுக்கு வித்து கொடுத்தான்.

அத வச்சு வசிகரன் சார் இங்க ஏடிஎஸ்னு கம்பெனி ஆரம்பிச்சார்…நான் எவ்ளவு மறுத்தும் கேட்காம 30% ஷேர் எனக்கு அந்த கம்பெனியில….அதோட ஃபார்மஸில பிஎச்டி செய்றது வரைக்கும் எனக்கு ஹெல்ப் செய்தார்…. இப்ப ஏடிஎஸ் வேர்ல்ட் லெவல்ல பெரிய கம்பெனி….இன்டியால மட்டும் தான் ப்ரான்ச் இல்லைனு சொல்லலாம்…..அங்க கான்டாக்ட் ஏற்படுத்திக்க மனசு இல்லை…..அதான்….

இன்டியால இருந்து எங்களுக்குத் தேவையான இன்ஃபர்மேஷன் கலெக்ட் செய்து கொடுக்றதெல்லாம் சூர்யாதான்....தயாமா இறந்த விஷயம் தெரிஞ்சா நான் எமோஷனாகி அங்க கிளம்பி வந்து மாட்டிக்குவேன்ற நினைப்புல என்ட்ட அதைப் பத்தி அப்ப  சொல்லலை….

அது மாதிரிதான் என் அப்பா டெத்துக்கும்….

பட் எஃப் பில ஷாலு மேரேஜ் பத்தி பார்த்து சொன்னா பியூலா…..எதையோ தேடுறப்ப சரித்ரன் மாப்ள ஃப்ரஃபைலை பார்த்திருக்கா…..வெட்டிங் ஃஸ்னாப்ல இருந்த ராஜண்ணாவ வச்சு, பொண்னு பேரை வச்சு கண்டி பிடிச்சுட்டா அவ.

 அப்றம் நான் கேட்டுகிட்டதுக்காக ஷாலு வெட்டிங் வீடியோ அனுப்பி இருந்தான் சூர்யா..….அந்த சீடில தயாம்மா இல்லைனதும்தான் நான் கண்டு பிடிச்சேன்….அப்றம் கேட்டப்ப அம்மா பத்தி எல்லாம் சொன்னான்….ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….ஒரு வெறியே வந்துச்சுதான்…….ஆனா என் கைல என்ன இருந்துச்சு?

அத தவிர ராஜியப் பத்தி அப்பப்ப எனக்கு சூர்யா சொல்லிகிட்டே இருப்பான்….ஏன்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்….அவங்க எங்க கேஸை டிக் செய்துட்டே இருந்தாங்க….வசிகரன் சார் வீட என் வீடல்லாம் சந்தேகப் படவிடாம செய்ய பக்காவா ப்ளான் செய்த சூர்யா ராஜியால இப்டி ப்ரச்சனை ஆகும்னு எதிர்பார்த்திருக்கலை…..

அதானல அவங்களோட  ஒவ்வொரு மூவையும் தடுக்றதுக்கு என்ன செய்ய முடியுமோ அதை சூர்யா எங்களுக்காக இப்ப வரை செய்துட்டு இருக்கான்…..அதேநேரம் ராஜி என்ன ஸ்டெப் ட்ரை செய்றாங்க…அதை கவ்ண்டர் செய்ய இதை செய்யப் போறேன்னு ஒவ்வொரு தடவையும் எனக்கு இன்ஃபோ அனுப்பிடுவான்…..ஏன்னா  ராஜி பியூலாவோட அக்கா இல்லையா?

இந்த தடவை நீங்க கேஸை ரீ ஓபன் செய்ய ட்ரை செய்வீங்கன்னு வசிகரன் சாருக்கு அனுப்பி இருக்கான்…அதோட உங்க மூவை கவனிக்க அரேஞ்ச் செய்ததும் அவன் தான். ராஜியப் பார்த்து சூர்யா பயந்தது கிடையாது….ஆனா உங்களப் பார்த்து பயந்துட்டான்….அவனுக்கும் வயசாகுது இல்லையா நீங்க யூத்…உங்க ஸ்பீடுக்கு கோப் அப் செய்ய முடியாம மாட்டிப்பமோன்னு ஒரு பயம் அவனுக்கு…….அதான் ஒரு டென்ஷன்ல மானிடர் செய்ய வீட்டுகுள்ள மைக்லாம் வச்சது…..

அதை வசிகரன் சாருக்கும் அனுப்பி இருக்கான்…..அவர்தான் அந்த வாய்ஸ் ரிகார்டாயிருந்த சீடியை எனக்கு அனுப்பினது…..அவருக்கு நீங்கன்னா படு இஷ்டம்…..நாம ரெண்டு பேரும் சொந்த காரங்களாயாச்சுனு அதி சார்னு படு எக்‌ஸைட் ஆகிட்டார்….

ஆனா இப்டி உங்களை மானிடர் செய்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை……அதோட நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்ததை கேட்கிறப்ப என்னால உங்களுக்கு எவ்ளவு ப்ரச்சனைனு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு….அதான் நேரடியா நானே இன்வால்வானேன்…..

சூர்யாவால என் நல்லதை யோசிக்க முடியும்…ஏன்னா அவன் எனக்கு ஃப்ரெண்ட், ஆனா உங்கட்ட அவன் அந்த டென்டர்னஸை காமிக்கலையோன்னு எனக்கு பட்டுது…..உங்கட்ட இருந்து என்னை காப்பாத்தனும்ன்றதுதான் அவனுக்கு தோணுதே தவிர, கல்யாணம் ஆனவங்க ரூம்ல போய் மைக் செட் பண்றோமேன்ற……கிறுக்கன்….

அதான் வேறவங்க மூலம் அந்த மைக்கையெல்லாம் வெளிய தெரியுற மாதிரி எடுத்துவிட சொன்னேன்….அப்ப அதெல்லாம் எங்க இருக்குன்னு தெரிஞ்சு டிஸ்போஸ் செய்திட்டு நிம்மதியா இருப்பீங்கன்னு எதிர் பார்த்தேன்…..

ஆனா நீங்க…..மாப்ள…..என்ன இருந்தாலும் ரேயா சின்னப்….எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை….அவள நீங்க அடிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை….

அம்மா இல்லாத பொண்ணு, உங்க வைஃப்…அவளுக்கு எல்லாமே நீங்க தான்….சாரி சாரி அட்வைஸ் செய்றது என் இன்டென்ஷன் இல்ல….ஆனா அவ அடி வாங்கினதை நிச்சயமா என்னால தாங்க முடியலை….அதான் என்ன ஆனாலும் பிரவாயில்லை உங்களை நேர்ல பார்த்து பேசி ப்ரச்சனையை முடிச்சுடனும்னு நினச்சுட்டேன்……அதான் மைல்ட் அனெஸ்தடிக் gas ஐ உங்க ரூம்குள்ள ஏசி வழியா ஸ்ப்ரே செய்து கொண்டு வந்தோம்….வெரி சாரி…ஆனா மீட் பண்ண வழி தெரியலை….

எந்த வகையிலயும் உங்கள நாங்க தொந்தரவு செய்ய மாட்டோம்…..ரேயாமா உங்களை யாரும் வாட்ச் செய்யாம பார்த்துகிறது சித்தப்பா என் பொறுப்பு…..நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க மாப்ள….ஆனா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா லைஃபை கன்டின்யூ செய்யனும்….” அதியின் முகத்தில் அன்பு பாசம் அக்கறையின் கெஞ்சலும் அதட்டலும். அதற்கும் மேலாக அருகிலிருந்த சூட்கேசிலிருந்து அந்த ஃபைலை எடுத்து ஆதிக்கிடம்  கொடுத்தான் அதி.

“அந்த எவிடென்ஸோட காபி”

அதி முகத்தைப் பார்த்தான் ஆதிக். எதைத் தூக்கி இவன் கையில் கொடுகிறானாம் இந்த ஆதி? எதற்காகவாம்…..இவன் ரேயுவுடன் இவன் சந்தோஷமாக வாழ்வதற்காகவாமா??? ஆதிக்கிற்கு எல்லாமே புரிந்துவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.