(Reading time: 77 - 154 minutes)

பியூலாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்ப ஆரம்பிக்க காரணமே எங்கள சுத்தி நடக்கிற எந்த ப்ரச்சனைக்கும்  சொல்யூஷன் கொண்டு வர நாங்க ட்ரை பண்ற அந்த நேச்சர்தான்னு நினைக்கிறேன்…அப்ப நாங்க`லவ் பண்ண ஆரம்பிச்சிருந்த புதுசு….எங்க டைப்க்கு ஒத்துப் போற இன்னும் ஃபியூ ஃப்ரெண்ட்ஸ்…..லைஃப் ரொம்பவே நல்லா போய்ட்டு இருந்துச்சு….அதோட எங்க ரெண்டு பேர் வீட்லயும் விஷயத்தை சொல்லி சம்மதமும் வாங்கியாச்சு….ரொம்ப சந்தோஷமா ஸ்டடீஸ் முடியுறதுக்காக வெயிட் செய்துட்டு இருந்தோம்….

அப்பதான் முதல் இஷ்யூ…நாங்க படிச்சது கவர்மென்ட் மெடிக்கல் காலேஜ் இல்லையா…சோ எங்க ஹாஸ்பிட்டல் ஸ்டடி எல்லாம் ஜி எச் ல தான் இருக்கும்….அங்க பேஷண்ட்ஸுக்கு ஃப்ரீயா கொடுக்ற டப்ளட்ஸ் சிலது  காம்ப்ரமைஸ்டா இருக்றத கவனிச்சோம்…அதாவது அதே மெடிசின் மார்கெட்ல வாங்கினா ஸ்வீட் கோட்டடா ப்ளசண்ட் கலர்டா இருக்கும்…பட் இங்க சப்ளை ஆறது வெரி பிட்டரா எந்த அலங்காரமும் இல்லாம இருக்கும்….குழந்தைங்களுக்கு சாப்ட கஷ்டமா இருக்கும்… எங்களால முடிஞ்ச அளவு ஹாஸ்பிட்டல் சைட் அது சம்பந்தபட்டவங்கட்ட அதைப் பத்தி சொல்லிப் பார்த்தோம்… பட் நோ யூஸ்…. அப்ப அந்த டாப்ளட்ஸை கான்ட்ராக்ட் பேஸ்ல சப்ளை செய்துட்டு இருந்தவங்க வசி’ஸ் கம்பெனி… அவங்கட்ட இதை அட்ரெஸ் செய்யலாம்னு யோசிச்சு…..எஃபெர்ட் எடுத்து அதோட எம் டி வசிகரனை மீட் செய்து பேசினேன்…

அப்பதான் நான் வசிகரன் சாரை பர்ஸ்ட் டைம் பார்த்தது. அவர் என்ட்ட ரொம்பவே நல்லா பிஹேவ் செய்தார்……அவரும் நானும் ஒரு வகையில பக்கத்து ஊர் காரங்க….. எங்க பக்கம் என் அப்பா கொஞ்சம் வெல் நோன் பெர்சனாலிட்டி…அவரை வேற வசிகரன் சாருக்கு தெரிஞ்சிருந்தது, சுத்தி சுத்திப் பார்த்தா நாம ரிலடிவாதான் இருப்போம்னு சொல்லி வசிகரன் சார் நல்லாவே நடந்துகிட்டார்……

டேஸ்ட்ல தான் டிஃபரென்ஸே தவிர குவாலிட்டில எந்த இஷ்யூவும் இல்லை… நம்ம நாட்டு பாப்புலேஷன் சைஸுக்கு ஃப்ரியா கொடுக்கனும்னா அலங்காரம் செய்யல்லாம் செலவு செய்ய முடியாது…அதான் கவெர்மென்ட் எங்களுக்கு இந்த ஸ்டண்டர்ட் ஃபிக்ஸ்‌ செய்துருக்குது அவங்க கொடுக்ற மனிக்கு இவ்ளவுதான் மேக்‌சிமம் எங்களாலயும் முடியும்…நாங்களும் லாஸ்ல இதை செய்து கொடுக்க முடியாதேன்னு…ஸ்டாடிசிக்ஸோட எக்ஸ்ப்ளெய்ன் செய்தார்…

எனக்கும் அக்சப்டபிளாதான் இருந்துது…அதே நேரம் பீடியாட்ரிக் மெடிசன் மட்டும் இன்னும் என்னால முடிஞ்ச அளவு சைல்ட் ஃப்ரெண்ட்லியா செய்ய ட்ரை செய்றேன்னு சொன்னார்…அன்ட் ஹி கெப்ட் ஹிஸ் வேர்ட்..  அது எங்களுக்குள்ள பரஸ்பரம் ஒரு நல்ல ரேப்போ டெவலப் செய்தது. பட் நாங்க அடுத்து மீட் செய்துக்கலை….

அப்பதான் அடுத்த இஷ்யூ….அண்ட் இது ரொம்பவே பெருசுன்னு முதல்லயே எங்களுக்கு தோணிச்சு… ஆக்சிடண்ட் கேஸ்ல வந்த ஒரு பையன் இறந்துட்டான்….அவன் வீட்டை போலீஸ் ட்ரேஸ் செய்துட்டு இருந்தாங்க…..அதுவரை அவன் பாடி அஸ் பெர் த ப்ரொசிசர் மார்ச்சுவரில இருந்துதது ….ஒரு வழியா அந்த பையன் ரிலடிவ்ஸை போலீஸ் ரீச் அவ்ட் செய்து, அவங்க வந்து பார்க்கிறப்ப அவன் பாடி அங்க இல்லை…..

எங்களுக்கு நல்லா தெரியும் அந்த பையன் அங்க தான் இருந்தான்னு, அவன் பேரண்ட்ஸ் சண்டை போடுவாங்கன்னு சொல்லி ஹாஸ்பிட்டல்ல இருந்து பூசி மெழுகிட்டாங்க….அடுத்து யாரும் அதை பெருசா கண்டுக்கவும் இல்லை…. ஆனா அந்த பேரண்ட்ஸை நினச்சு எங்களுக்கு ரொம்பவும் வருத்தமா இருந்துச்சு….அப்பதான் நாங்க மார்ச்சுவரியை கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சோம்…

ஹாஸ்பிட்டல்ல அப்பப்ப க்ளெய்ம் இல்லாம இருக்ற டெட் பாடீஸ் மிஸ்ஸாகிறது தெரிய வந்துச்சு….சம்டைம்ஸ் சொந்தக்காரங்க விஷயம் தெரிஞ்சி வர்றதுகுள்ள இங்க இது காணம போய்டும்…அப்பல்லாம் .எமோஷனலி ரொம்பவே கஷ்டமா இருக்கும்….அப்டி டெட் பாடியை வச்சு என்ன செய்ய முடியும்னே முதல்ல எங்களுக்கு தெரியலை….பட் அது கன்டின்யூ ஆச்சுது…அதுவும் ஹைலி சீக்ரெட்டா…அதனால அது கண்டிப்பா பெரிய இஷ்யூவா இருக்கும்னு நினச்சோம்….அதை நாங்களும் படு சீக்ரெட்டா ட்ராக் செய்தோம்…

டூ அவர் ஷாக் அதை செய்தது வசிஸ் னு தெரிய வந்துச்சு… அதோட எங்களோட கெஸ் அதை அவங்க  எதையோ ஸ்மகிள் செய்ய யூஸ் செய்றாங்களோன்னு…வசிகரன் சார் அப்டி செய்றவரா இல்லையான்னு எங்களுக்கு ஒரு முடிவுக்கு வர முடியலை…ஏன்னா அதுவரைக்கும் அவரைப் பத்தின எங்கள் இமேஜ் அப்படி…அதனால அவரைப் பத்தி நெருங்கி விசாரிக்கனும்னு முடிவு செய்தோம்….

அந்த டைம்ல அவர் வைஃப் மலர்விழி மேம் ஆக்சிடெண்டாகி எங்க ஹாஸ்பிட்டல் வந்தாங்க….அப்பத்தான் வசிகரன் சாருக்கு மேரேஜாகிட்டுன்னே எங்களுக்குத் தெரியும்…மனசுல எங்கயோ ஒரு சின்ன ஃபீல் அவர் என்னை அவாய்ட் செய்றாரோன்னு….

அது அவர் மேல சந்தேகத்தை அதிகமாக்கிச்சு…..ஏன்னா என்னை சுத்தி நடக்ற ப்ரச்சனைகள்ள நான் ரொம்பவே இன்வால்வாகிற டைப்னு அவருக்கு தெரியும்…அதனால வசிஸ் செய்ற தில்லுமுல்லுவை நான் கண்டு பிடிச்சுடுவேன்னு அவர் என்னை அவாய்ட் செய்றாரோன்னு நான் நினச்சேன்….

அதே நேரம் அந்த மலர்விழி மேம் ஆக்சிடெண்ட்ல தான் பியூலாவுக்கு வசிகரன் சார் கூட இன்ட்ரோ கிடச்சிருந்துது…..அவ அதை வச்சு அவங்க வீடு ஆஃபீஸ்னு உள்ளே போய்ட்டு வந்தா…சாரிட்டி ப்ரோக்ராமுக்கு இன்வைட் செய்ய போற மாதிரி உள்ள போய் முடிஞ்ச வரை இன்ஃபோ கலெக்ட் செய்றது அவ ப்ளான்…..

இந்த மீன் டைம் வசிகரன் சார்ட்ட பியூலா பழகிறது மலர்விழி மேம்க்கு பிடிக்கலைனு தெரிஞ்சிது….அப்டி தோணனும்னாலே வசிகரன் சார்க்கும் மலர்விழி மேம்க்கும் இடையில சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லைனு எங்க ரெண்டு பேர்க்கும் அதாவது எனக்கும் பியூலாக்கும் தோணிச்சுது.

அப்ப மலர்விழி மேம் பியூலாவை தேடி எங்க காலேஜ் போய்ட்டு அவ வீட்டுக்கு வந்தாங்க….அவள பார்க்க முடியலை…அவ வீட்டு மாடி போர்ஷன்ல தான் நான் தங்கி இருந்தேன்…அதனால என்னைத்தான் அவங்களால பார்க்க முடிஞ்சிது….நான் பியூலாவை தப்பா நினைக்காதீங்கன்ற மாதிரி சொல்லி அனுப்பினேன்….என்னால அதுக்கு மேல மலர்விழி மேம் பெர்சனல் லைஃபல தலையிட முடியாதில்லையா?

அவங்களும் கன்வின்சாகி கிளம்புற மாதிரிதான் இருந்துது….பட் மாடில இருந்து கீழ போனதும் வாய்ல நுரை தள்ள விழுந்துட்டாங்க…ஹெவி பாய்சன் இன்டேக்…..ஹாஸ்பிட்டலைஸ் செய்தோம்…தப்பிச்சுட்டாங்க பை காட்ஸ் கிரேஸ்…

வசிகரன் சார் கூட உள்ள மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல தான் அவங்க சூசைட் அட்டெம்ட்னு நாங்க நினச்சோம்…வர்றப்பவே பாய்சன் சாப்டுட்டு வந்திருக்கனும்…அப்றம்தான் பியூவும் நானும் விரும்புற விஷயம் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்…அவங்க ரிலாக்‌ஸாகிருப்பாங்க….பட் பாய்சன் சாப்டுற அளவுக்கு என் ஹஸ்பண்டை சந்தேகபட்டேன்னு அவங்களால ஒத்துக்க முடியலைனு நினச்சோம்…ஏன்னா அவங்க அதை சூசைட் அட்டெம்ட்னே ஒத்துக்கலை…

அவங்களே ஒத்துக்காத பிறகு நாங்க வெளிப்படையா அவங்கட்ட பேச முடியாதில்லையா….சோ வசிகரன் சார் அவங்கள எவ்ளவு விரும்புறார்னும்….பியூ மனசில என்னைத் தவிர யாருமே இல்லைனும் காமிக்ற மாதிரி மலர்விழி மேம்ட்ட பேசினோம்…

அதோட பியூ அக்கா ராஜியும் மலர்விழி மேம்க்கு ஹெல்ப் செய்ய ட்ரை பண்ணாங்க…..பியூலா மாதிரி ராஜி ஒடி ஓடி  எதையாவது செய்து சுத்தி இருக்றவங்க ப்ரச்சனைக்கு சொல்யூஷன் கொண்டு வர்ற டைப் கிடையாது….அவங்க அப்ரோச் கொஞ்சம் வித்யாசமா இருக்கும்…எந்த சூழ்நிலையில உள்ளவங்களும் மனசால நிம்மதியா இருக்க ஹெல்ப் செய்ற டைப்….

ஜெயில்ல இருக்றவன் கூட கவலை இல்லாம சந்தோஷமா பாடிகிட்டு இருந்தா அவன் விடுதலையா இருக்கான்னுதான் அர்த்தம்….ஐயோ என்ன செய்யன்னு தெரியலையேன்னு முழிக்றவன் சிம்மாசனத்துல உட்கார்ந்திருந்தா கூட மனசளவுல கைதிதான்னு சொல்ற டைப் ராஜி… சோ அவங்களுக்கும்  மலர்விழி மேம்க்கும் ரேப்போ டெவலப் ஆனதும் அவங்க பார்த்துப்பாங்கன்னு நாங்க மலர்விழி மேம்மைவிட்டு விலகிக்கிட்டோம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.