(Reading time: 77 - 154 minutes)

நேரடியா எழுதி வாங்கிட்டு வசிகரன் சாரை மர்டர் செய்துட்டா….எப்டியும் மர்டர் கேஸாகும் தான் மாட்டிடுவோம்னு அவங்களுக்கு பயம் இருந்திருக்கு முன்னால, ஆனா இப்ப இப்டி என்னை வசிகரன் சார் மர்டர் செய்த மாதிரி எவிடென்ஸ் கிரியேட் செய்துட்டு அவரை மிரட்டி எழுதி வாங்கிட்டு அவரை துரத்தி விட்டுட்டா எந்த ப்ராப்ளமும் வராதேன்னு அவங்களுக்கு தோணி இருக்குது…

 சங்கீத்தோட நிஜ முகம் தெரியாம அன்னைக்கு, தன் மேரேஜ் லைஃப்ல உள்ள ப்ராப்ளத்தை வசிகரன் சார் அந்த சங்கீத்ட்ட சொல்லிருக்கார். அவனும் ஆன்ட்ரூ அவன் வாயால நானும் பியூலாவும் விரும்புறோம்னுன்னு மலர்விழி மேம்ட்ட சொல்லிட்டா குழப்பம் தீர்ந்திடும், அப்டி உன் வைஃபை போய் பார்த்து பேசுன்னு நீ நேரடியா ஆன்ட்ரூட்ட கேட்டா நல்லாருக்காது….நான் உனக்காக கேட்கிறேன்….அவனை இங்க வரச்சொல்லுனு சொல்லிருக்கான்.

 நான் இதே விஷயத்தை மலர்விழி மேம்ட்ட பேசிட்ட விஷயம் வசிகரன் சாருக்கு அப்ப தெரிஞ்சிருக்கலை….

ஆனா அந்த சங்கீத் சிச்சுவேஷனை யூஸ் செய்து என்னை வசிகரன் சாரை வச்சே வர வச்சு…செக்யூரிட்டிட்ட நான் வசிகரன் சாரை பார்க்க வந்தேன்னு என்ட்ரி செய்ய வச்சு உள்ள வர வச்சுருக்கான். சங்கீத் வர்றப்ப ரகசியமா யார் கண்ணிலும் படாம வந்திருக்கான்….அடுத்து இப்ப வசிகரன் சார் வேற செக்யூரிட்டிப் பார்க்க உள்ள வந்திருக்கார்… என்னை கொன்னது வசிகரன் சார்னு ஆகிடுமே….

இத வச்சு வசிகரன் சாரை அந்த சங்கீத் மிரட்டவும் அவர் மிரண்டுட்டார்….

எதிர்பார்க்காத நேரத்துல வசிகரன் சார் அந்த சங்கீத் கைல இருந்த பிஸ்டலை…அதாவது டூப்ளிகேட் புல்லட்ஸ் உள்ள பிஸ்டலை தட்டிவிட்டு அதை தன் கைல எடுத்து அந்த  சங்கீத்தை சுட, சங்கீத்க்கு அது டூப்ளிகேட்னு தெரிஞ்சு போச்சு…

அவன் உடனே சுதாரிச்சுட்டு தன் பாக்கெட்ல இருந்து இன்னொரு பிஸ்டலை கைல எடுத்தான்….நான் விழுந்து கிடக்கிறதும் ஆக்டிங்னு அவனுக்கு தெரிஞ்சிருக்குமில்லையா… அந்த மீன் டைம் இதுக்கு மேலயும் நான் அங்க விழுந்து கிடக்றது ரிஸ்க்குனு  எந்திரிச்சேன்….அவனுக்கு இன்னுமே வசி சாரை தன் இஷ்டப்படி வளைக்க முடியும் நான் செத்துட்டான்னு தோணிச்சு போல….அந்த சங்கீத் அவன் கைல வச்சிருந்த பிஸ்டலை வச்சு என்னைத்தான் ஷூட் செய்தான்….……”

வாட்…??”

அதிர்ந்தாள் ரேயா…

“ம்…பட் ஷாட் இறங்கினது என் ஷோல்டர்ல…” தன் இடது தோளை தட்டிக் கொண்டான் அதி.

“பக்கத்துல வச்சு வேற ஷூட் செய்துட்டானா பயந்துட்டேன்…அப்டி ஒரு பெய்ன்…நான் செத்துட்டேன்னே எனக்கு தோணிட்டு…அவன் அடுத்த ஷாட் போறதுக்குள்ள நான் எதாவது செய்தாகனும்…

.சூர்யா இப்ப லாஃப்ட்ல இருந்து சங்கீத் காலை குறிவச்சு ஷூட் செய்தான் பட் மிஸ்ஸாகிட்டு…….ஸைலன்ஸர் ஷாட்..சங்கீத் சூர்யா ஷூட் செய்ததை கவனிக்க கூட இல்லை… இப்ப இதுக்குள்ள சங்கீத்தோட ரெண்டாவது ஷாட் குனிஞ்ச என் தலை முடிய உரசிகிட்டு மேல போகுது….

அந்த சங்கீத் என்ன கொல்லாம விடப் போறது இல்லனு தெரிஞ்சிட்டு…..சட்டுனு என் கை ரீச்ல டேபிள்ள சூர்யா மறச்சு வச்சிருந்த பிஸ்டல் தான் ஞாபகம் வந்துச்சு…அடுந்த செகண்ட் அதை குனிஞ்சு எடுத்தேன்,.நெக்‌ஸ்ட் மொமன்ட்  அந்த சங்கீத்தை ஷூட் பண்ணிட்டேன்…

அதுவும் அவன் காலைத்தான் ஷூட் செய்ய நினச்சேன்…நான் செல்ஃப் டிஃபன்ஸ் மூட்ல இருந்தேன்…பட் சங்கீத் அவனோட வியூல யோசிச்சுட்டான் போல… என் கைல பிஸ்டலைப் பார்த்தவுடன் நான் அவனைக் கொல்லப் போறேன்னு நினச்சு, தரையில படுத்துட்டா தப்பிச்சுடலாம்னு தரையில விழுந்தான்…என் ஷாட் டைரக்ட் ஹிட் அவன் நடு நெத்தியில …. இவ்ளவும் ஃப்யூ செகண்ட்ல நடந்து முடிஞ்சுட்டு…”

தரையைப் பார்த்தபடி அமைதியாகிவிட்டான் அதி.

“உயிரைக் காப்பாத்த டாக்டராக ஆசைப் பட்டேன்……” மீண்டும் ஒரு மௌனம் அவன் புறம்.

“உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் உங்களுக்கு ஹெல்புக்கு வரலையா சித்தப்பா…?” ரேயா தான்

அவளை நிமிர்ந்து பார்த்தான்…

“வந்தாங்கடா…சூர்யா மட்டும்தான்  லாஃப்ட்ல என் டைரக்ட் வியூல இருந்தான்…….வினித் அண்ட் ரத்னம் உள்ள இருந்த ரெஸ்ட் ரூம்ல…மத்தவங்க நெக்‌ஸ்ட் ரூம்ல…..கூப்டா வர்ற தூரத்துல…..ஏன்னா ஒளிஞ்சுகிட வழி வேணும் இல்லையா….அதோட நாங்க வந்தது வசிகரன் சார் மேல உள்ள எவிடென்ஸ் இல்லாத டவ்ட்ல தான…

வசிகரன் சாரை அந்த சங்கீத் மிரட்டினப்ப கூட நான் உட்பட எல்லோரும் விஷயத்த தெரிஞ்சுக்கிற ஐடியால தான் வெயிட் செய்தோம்….ஏன்னா சங்கீத் கைல இருந்த அந்த பிஸ்டல் ஹார்ம்லெஸ்னு எங்களுக்கு தெரியும்…..

அந்த நாய் எல்லாத்தயும் உளறி முடிக்கவும் எந்திரிச்சு நல்லா நாலு மொத்து மொத்தனும்னு நினச்சுகிட்டு இருந்தேன்…என் ஃப்ரென்ட்ஸும் அதைத்தான் சொன்னாங்க……வசிகரன் சார் பிஸ்டலை பிடுங்கவும் தான் எல்லாரும் சீன்மாறப் போகுதுன்னு  அவங்க ப்ளேஸ்ல இருந்து நாங்க  இருந்த இடத்துக்கு ஓடி வந்தாங்க….அதுவும் அடி பிடி சண்டையை எதிர் பார்த்து வந்தவங்க….அதுக்குள்ள அந்த சங்கீத் பிஸ்டலை எடுக்கவும்…கதை மாறிப் போச்சு….

ப்ச்….இதுல மூனு பேரு மெடிகல் ஸ்டூடண்ட்ஸ்… நாங்க எல்லோரும் அந்த நாய காப்பாத்த தான் நினச்சோம்…ஆனா நாங்க பக்கத்துல போய் பார்க்கப்பவே அவன் செத்துறுந்தான்…..ஷூட் ஆன இடம் அப்டி….

ஹாஸ்பிட்டல்ல டெத்தைப் பார்த்திருப்போம்தான்…பட் மர்டர் இஸ் க்ரூயல்….”

மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான் அதி.

“வசிகரன் சார் கொஞ்சம் பயந்த சுபாவம் போல….அவர் வாய்விட்டு அழுதார்…நாங்க எல்லோரும் ஸ்டண்ட்..…சூர்யா தான் சூழ்நிலைய ஹேண்டில் செய்தான்…நீங்க அழுது இன்னும் ஆள கூட்டிடாதீங்க….செல்ஃப் டிபன்ஸ்ல ஷூட் செய்ததால கேஸை ப்ராப்பரா ஹேண்டில் செய்து ப்ரச்சனை இல்லாம சால்வ் செய்துடலாம், அவன் வசிகரன் சாரை மிரட்டின டாகுமென்ட்ஸ், மத்த ட்ரக் ஸ்மகிளிங் டீடெய்ல்ஸ்கான எவிடென்ஸை நாம சேஃப் காட் செய்தா போதும்னு சொன்னான்….எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதி ஆச்சுது….

அப்பதான் அந்த சங்கீத்ட்ட இருந்த டாகுமென்ட்ஸை குடஞ்சோம்…அந்த சங்கீத் &கோ பயங்கரமா ப்ளான் செய்திருந்திருக்காங்கன்னு அப்புறம்தான் எங்களுக்கு புரிஞ்சிது….அஸ் பெர் த டாகுமென்ட்ஸ் அன்ட் ரிகார்ட்ஸ் வசிஸ்ல ப்ரடூயூஸ் ஆன அத்தனையும் வசிகரன் சார்க்கு தெரிஞ்சி அவர் அப்ரூவல்ல தான் ப்ரடியூஸ் ஆகி இருந்துது….இன்க்ளூடிங் அந்த ட்ரக்‌ஸ்….

 அதாவது இன் ஷார்ட் வசிகரன் சார் தான்  ட்ரெக் ப்ரடியூஸ் செய்ற மாதிரியும்…அதை அவர் என் மூலமா எங்க ராஜ் அண்ணா ஷிப்பிங் வழியா  வேல்டு முழுக்க ட்ரான்ஸ்ஃபர் செய்ற மாதிரியும் எவிடென்ஸ் பக்காவா செட் செய்து வச்சிருந்தாங்க…..முதல்ல வசிகரன் சார் மட்டுமா செய்த மாதிரியும் லேட்டர் அவர் கூட நானும் டீம் சேர்ந்துட்ட மாதிரியும்…ஒரு செட் அப் செய்திருந்தாங்க

சங்கீத் மர்டர் கேஸ் ரெஜிஸ்டர் ஆகி போலீஸ் துருவ ஆரம்பிச்சா ட்ரெக் ப்ரொக்டஷன் கேஸ்ல  வசிகரன் சாரும்… ஸ்மக்ளிங்ல நானும் ராஜ் அண்ணாவும் ஷ்யூர் ஷாட்டா மாட்டுவோம்ன்ற மாதிரி நிலமை…”

“வெறும் fake டாகுமென்ட்ஸ்தான சித்தப்பா…அத fakeனு ஃப்ரூஃப் செய்ய முடியாதா?” ரேயாவுக்கு இப்பொழுது அப்பாவை நினைத்தும் பயம் வருகிறது.

“இல்லடா….அந்த டாக்குமென்ட்ஸ் எல்லாம் உண்மை….உள்ள இப்டி ட்ரெக் இருந்துச்சுன்னு மட்டும் தான் யாருக்கும் தெரியாது….அதோட நான் வசிஸ்குள்ள வசிகரன் சாரைப்  பார்க்க வந்தமாதிரி செக்யூரிட்டி மூலமா எவிடென்ஸ் கிரியேட் செய்திருந்தான் தெரியுமா…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.