(Reading time: 77 - 154 minutes)

னா அதே டைம்ல ராஜி மலர்விழி மேம் சூசைட் அட்டெம்ட் செய்த மாதிரி தோணலை…… ஒரு வேளை என்னை யாரோ மர்டர் செய்ய விரிச்ச வலைல தெரியாம வந்து மலர்விழி மேம் மாட்டிருக்கவும் சான்ஸ் இருக்குது…என் வீட்ல குடிச்ச தண்ணில பாய்சன் இருந்திருக்கலாம்னு ஒரு சந்தேகத்தை கிளப்புனாங்க….

வீட்ல இருந்து கிளம்பின நேரத்துல இருந்து எதுவும் சாப்டலை…தாகத்துல தண்ணி மட்டும் தான் அதுவும் அதி சார் வீட்ல தான் குடிச்சேன்னு மலர்விழி மேம் சொல்லிருந்தாங்களாம் ராஜிட்ட…எனக்குமே அந்த மர்டர் அட்டெம்ட் கொஞ்சம் ஒத்துக்ற மாதிரி இப்போ பட்டுது….

ஏன்னா மலர்விழி மேம் வீட்ல இருந்தே பாய்சன் சாப்டுட்டு வந்திருந்தாங்கன்னா அவங்க சாப்ட்ட பாய்ஷன்க்கு  என் வீடு வர்றவரை தாங்கி இருக்க மாட்டாங்க….அடுத்தும் தான் பாய்ஷன் சாப்டுறுக்கேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா பியூ என்னை விரும்புறான்னு தெரிஞ்ச பிறகும் ராஜிட்ட நின்னு கதை அடிச்சுட்டு இருந்திருக்க மாட்டாங்க…ஹாஸ்பிட்டல் போய்ருப்பாங்க தானேன்னு ஒரு தாட்…

அதோட கொஞ்ச நாளா என்னை யாரோ ஃபாலோ செய்ற மாதிரியும் ஒரு ஃபீல் இருந்துச்சு….ஆக ஒரு சேஃப்டிகாக என் க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ்ட்டயும் இந்த விஷயத்தை சொல்லிருந்தேன்…எல்லோரும் வசி’ஸ் விஷயத்துல ரொம்ப கவனமா இருக்க சொன்னாங்க… ஏன்னா அங்க மட்டும் தான் நான் அந்த டைம்ல ப்ராப்ளத்துல இன்வால்வாகி இருந்தேன்…அதோட அல்மோஸ்ட் எல்லா நேரமும் என் கூடவே இருந்தாங்க….

அப்பதான் ஒரு நாள் வசி சார் எனக்கு கால் செய்து தனக்கு ஒரு ஹெல்ப் வேணும்…ஆஃபீஸ் வரை வர முடியுமான்னு கேட்டார்…...

 என் ஃப்ரெண்ட்ஸுக்கு என்னை தனியா அனுப்ப இஷ்டம் இல்லை….நாங்க இதுக்கும் அந்த டெட் பாடி கடத்தலுக்கும் எதோ லிங்க் இருக்கும்னு நினச்சோம்… சோ ஒரு ப்ளான் செய்தோம்… நானும் என் ஃப்ரெண்ட்ஸ் 5 பேரும்….. சூர்யா, பவன், கிருபாகர்,…” அதி சொல்லிக்கொண்டு போக

“ ரத்தினமணி, வினித்….” ஆதிக் அந்த லிஸ்ட்டை தொடர் செய்து முடித்தான். பவன் கிருபாகர் ரத்தினமணி, வினித் இவர்கள்தான் ஆதிக்கின் அப்பா டேவிட்டிடிடமிருந்து வசிகரனுக்கு கடன் கொடுத்திருப்பதாக சொல்லி பணம் வசூலித்தவர்கள்.

“எஸ் அவங்க தான்….நாங்க எல்லோரும் வசிகரன் சார் சொன்ன டைம்க்கு ரொம்ப முன்னாலயே அங்க போய்ட்டோம்…..அதுவும் கேட் வழியா போகலை….சீக்ரெட்டா சுவறேறி குதிச்சு….

என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் கைல  பிஸ்டல் …..அதோட டூப்ளிகேட் புல்லட்ஸோட இன்னொன்னு வினித்ட்ட… எனக்கு முன் கோபம் அதிகம்னு ராஜ் அண்ணா பிஸ்டல்க்கு பெரிய நோ சொல்லிருந்தார்….வினித் வீட்ல ஷூட்டிங் ப்ராக்டிஸ்க்கு மட்டும் தான் அவனுக்கு பிஸ்டல் கொடுப்பாங்க…இப்டி டூப்ளிகேட் புல்லட்ஸோட…..ஆனா அவன்ட்ட இருந்த அந்த பிஸ்டலை காமிச்சு மிரட்ட யூஸ் செய்துக்கலாம்னு அவன் அதைக் கொண்டு வந்திருந்தான்……எங்க எல்லாருக்கும் அப்ப ஏஜ் 18, 19 க்குள்ள தான்னு நீங்க புரிஞ்சுக்கனும்…..சூர்யாக்கு மட்டும்தான் 25.

உள்ளே போய் வசி சார் ரூம்னு இல்லை எல்லா ரூமையும் குடஞ்சோம்…பிகாஸ் அன்னைக்கு ஆஃபீஸ் லீவ் போல யாருமே இல்லை…..அந்த டைம்ல எங்களுக்கு வசிகரன் சார் ரூம்ல அதாவது என்னை மீட் பண்றேன்னு அவர் சொன்ன இடத்துல ஒரு பிஸ்டல் கிடச்சுது… ஃபுல்லி லோடட்.

 எதுக்கு ரிஸ்க்குன்னு டூப்ளிகேட் புல்லட் இருந்த வினித் பிஸ்டலை அந்த இடத்துல வச்சுட்டு அந்த ஒரிஜினல் புல்லட்ஸ் இருந்ததை தான் எடுத்துகிட்டான் சூர்யா… அவன் எப்பவும் ஷார்ப்…கிரிமினல் லாயர் பை ப்ரஃபஷன்…பட் இன்டென்ஷன்லி ஹார்ம்லெஸ்

கூடவே, பேசுறப்ப நான் எங்க உட்காரனும்னு சொல்லி…அங்க என் ஹேண்ட் ரீச்ல ஒரு ஒரிஜினல் புல்லட்ஸ் உள்ள பிஸ்டலை ஒளிச்சு வச்சான் அவன்….இன் கேஸ்…என் சேஃப்டிக்காகனு..

கொஞ்ச நேரத்துல அங்க மத்தவங்கல்லாம் ஒளிஞ்சுகிட்டாங்க….யார் எங்க இருக்கான்னு பார்த்துகிட்டு நான் கிளம்பி சுவறேறி குதிச்சு வெளிய போய் என் காரை எடுத்துட்டு அப்பதான் உள்ள வர்ற மாதிரி வந்தேன்….அதாவது என் சேஃப்டிக்கு உள்ள ஒரு டீமை செட் செய்துட்டு வசிகரன் சார்க்கு டவ்ட் வராத மாதிரி கேஷுவலா உள்ள வரனும்னு ப்ளான்…

உள்ளே வந்தா ஒரு டிஸ்டன்ஸுக்குப் பிறகு செக்யூரிட்டி அலவ் பண்ண மாட்டேன்னு சொன்னான்….நான் வசிகரன் சார் வரச் சொன்னாங்கன்னு சொல்லவும், அவன் வசிகரன் சார்க்கே கால் செய்தான்….

அப்ப அவர் இவ்ளவு சீக்ரம் வந்துட்டீங்களா…ஓகே கொஞ்சம் வெய்ட் செய்ங்க ப்ளீஸ்னு சொல்லிட்டு செக்யூரிட்டியை என்னை உள்ள அலவ் செய்ய சொன்னார்….அப்ப வசிகரன் சார் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்ற மாதிரி தோணினாலும் அவர் என் இயர்லி விசிட்ல பானிக் ஆகலை…சோ அவர் தப்பான இன்டன்ஷன்ல வரச்சொல்லலையோன்னு யோசிச்சுகிட்டே உள்ளே போனேன்…

வசிகரன் சார் சொன்ன இடத்துல நான் போய் இருந்தேன்…

கொஞ்ச நேரத்துல யாரோ உள்ள வர்ற சத்தம்….வந்தது வசி’ஸ்ஸின் டெபுடி எம்டி சங்கீத்…. அவன் வசீகரன் சார்க்கு படு க்ளோஸ் ஃப்ரெண்ட்….வசீகரன் சார்க்கு அடுத்து வசிஸ்’ல அவன்தான் எல்லாம்… உள்ள வந்தவன் எனக்கு சந்தேகப் பட கூட டைம் குடுக்காம சூர்யா மாத்தி வச்சிருந்த வினித் பிஸ்டலை எடுத்து என்னை செஷ்ட்ல ஷூட் செய்தான்…..சட்டுன்னு அந்த செகண்ட் தோணிச்சு ஆக்ட் செய்யனும்…சோ தட் உண்மைய கண்டு பிடிக்கலாம்னு….அப்டியே குப்புற விழுந்துட்டேன்… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் அது ஆக்ட்னு நல்லா தெரியும்..சோ அவங்களும் என் தாட்டை புரிஞ்சுகிட்டாங்க….

அதே நேரம் வசிகரன் சாரும் அங்க  வந்து சேர்ந்தார்.  அவரை அந்த நேரம்  சங்கீத் எதிர் பார்க்கலை போல…..நீ இப்ப வருவன்னு எதிர் பார்க்கலை…பட் வந்ததும் நல்லதுக்குத்தான்…உன் கூடதான் முக்கிய டீலே….அதுக்குத்தான் இப்ப ஃப்ரெஷ்ஷா இவனை கொன்னுருக்கேன்னு அவன் ஆரம்பிச்சான்….அந்த சங்கீத் பேசப் பேசத்தான் எங்களுக்கு நிறைய விஷயம் புரிஞ்சிது…

வசிஸ் மெயின்லி ஃபார்மஸ்யூட்டிகல் கம்பெனிதான்….ஆனா அந்த பேக்ரவ்ண்ட்ல இந்த சங்கீத் அவனுக்கு ஒரு பாஸ் அனனியாஸ் அண்ட் ஒரு டீம் எல்லோரும் சேர்ந்து நிறைய பேன்ட் கெமிகல்ஸை, ட்ரக்‌ஸை ஸ்மகிள் செய்துருக்காங்க….

அதுக்குதான் அந்த டெட் பாடிசூம் கூட..…பாடிக்குள்ள இதை ஸ்டோர் செய்துட்டு அது பர்டிகுலர் நேஷன்ல உள்ள ஒரு பேர்சனோட ரிலடிவ்ன்ற மாதிரியும்……அவங்கட்ட பாடியை ஹேண்ட் ஓவர் செய்ய இங்க இருந்து அனுப்ற மாதிரியும் காமிச்சு….பாடியை அந்தந்த நட்டுக்கு கொண்டு போய் அங்க வச்சு அந்த ட்ரக்‌ஸை எடுத்துகிட்டு பாடியை டிஸ்போஸ் செய்திருக்காங்க…..

அதோட நான் இந்த ஸ்மக்ளிங் விஷயத்தை துருவுறேன்னும் அந்த கேங்குக்கு தெரிய வந்திருக்கு….அதனால என்னை ஃபினிஷ் பண்ண ப்ளான் செய்துருக்காங்க அவங்க. அதனால அந்த கேங் என் வீட்ல வாட்டர்ல பாய்சன் மிக்‌ஸ் செய்ய அரேஞ் செய்திருக்காங்க….

அதுல அனெக்‌ஸ்பெக்டடா மலர்விழி மேம் வந்து மாட்டிறுகாங்க….அவங்க அதுல தப்பிச்சுட்டாலும் அது சூசைட் அட்டெம்ட்னு ரிக்கார்டாச்சுதா….அதை அந்த சங்கீத் அன்ட் கோ பெரிய லெவல்ல யூஸ் செய்ய ப்ளான் செய்துட்டாங்க…..

ஏன்னா கல்யாணத்துக்கு முன்னால மாப்ளை ஃபோட்டோன்னு என் ஃபோட்டா மலர்விழி மேம்க்கு போயிருக்குது…அதுல வசிகரன் சார்க்கும் மலர்விழி மேம்க்கும் இடையில் ஒரு சின்ன குழப்பம் கல்யாணத்துக்குப் பிறகும் இருந்திருக்குது….

இந்த டைம்ல என் ரூம்ல வந்து மலர்விழி மேம் சூசைட் அட்டெம்ட் செய்த மாதிரி ஒரு சீன் டெவலப் ஆகிட்டு..  அதை உண்மைனு நம்பி வசிகரன் சார் அவங்க மேரேஜ் லைஃபை காப்பாத்த என்னை மர்டர் செய்துட்ட மாதிரி எல்லா எவிடென்ஸும் ரெடி செய்துட்டு என்னை இந்த சங்கீத் &கோ மர்டர் செய்துட்டு….பழியை வசிகரன் சார் மேல போட்டுடுவேன்னு மிரட்டி அவர்ட்ட இருந்து வசிஸை எழுதி வாங்கிடலாம்னு ப்ளான் செய்துருக்காங்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.