(Reading time: 77 - 154 minutes)

சோ சித்தி உங்க கூடத்தான் இருக்காங்களா சித்தப்பா…?”

போஸ்ட் மார்ட்டம் ரிப்போட்டிற்கு பின்  அதி உயிரோடு இருக்கிறான் எனற யூகம் வந்த போதே, தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என எழுதிவைத்துவிட்டு காணாமல் போன  பியூலாவும் அதியுடன் தான் இருப்பாள் என்ற எண்ணம் மனதில் வந்திருந்தாலும், அதை அதி வாயால் உறுதிப் படுத்திக் கொள்வது, ஏதோ ஒரு வகையில் ரேயாவிற்கு மனதிற்கு இதமாக இருக்கிறதுதான்.

“ஆமா கண்ணா….உடனே மேரேஜ் செய்துட்டோம்…..ரெண்டு கிட்ஸ் இருக்காங்க….தயா, இனியான்னு பேர்…” தன் பர்ஸிலிருந்து தன் குடும்ப ஃபோட்டோவை எடுத்துக் காண்பித்தான் அதி.

“ரெண்டு பேரும் அவங்க அப்பா சாயல்…உங்களுக்கு இவ்ளவு பெரிய பொண்ணுங்க இருக்காங்கன்னா யாருமே நம்ப மாட்டாங்க சித்தப்பா….” சொல்லிக் கொண்டே அந்த ஃபோட்டாவை ஆதிக்கிடம் காண்பித்தாள் ரேயா.

அதி முகத்தில் நிறைவான புன்னகை.

“A complete family” சொன்ன ஆதிக் முகத்திலும் புன்னகை.

“இப்டி வசிகரன் சார் ஃபமிலியும் நாங்களும் இங்க வந்துட்டோம்… வசிஸை அங்க ப்ராப்ளம் வராத மாதிரி க்ளோஸ் செய்ற வேலையை சூர்யாவும் என் ஃப்ரண்ட்ஸும் செய்தாங்க…” அதி நடந்ததை தொடர

 “இவ்ளவு தூரம் ஒரு ட்ரெக் கேங் ட்ரை பண்ணி  பிடுங்கிகிற அளவு வசிஸ்ல என்ன ஸ்பெஷல்…? இஸ் இட் ஒர்த்…என் அப்பா அதை வித்ததா சொன்ன விலை ஒன்னும் அவ்ளவு பெரிய அளவு கிடையாதே…? ” ஆதிக் க்ளாரிஃபை செய்து கொள்ள முனைந்தான்.

“அதுக்கு காரணம் வேற மாப்ள…வசிஸ் ஒர்த் ரொம்பவே அதிகம்….இப்ப அதுதான் ஏடிஎஸ் ஸா வளந்து நிக்குது….”

ரேயா முழுக் கண்ணளவுமாய் விழித்தாள்.

“யூ மீன்…” ஏடிஎஸ் உலக அளவிலான பார்மசூட்டிகல் சாம்ராஜ்யம் என்பது அவளுக்குத் தெரியும்.

“ஆமா….உண்மையில் எனக்கு இந்த ப்ளான் பத்தி அப்ப எதுவும் தெரியாது…லேட்டர் தெரிய வந்தப்ப கஷ்டமாவும் இருந்துச்சு….பட் எல்லாம் வேற வழி இல்லாம செய்ததுதான்….

வசிஸை நேரடியா சூர்யா பேருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துட்டு வசிகரன் சார் காணாம போய்ட்டார், அப்றம் டெத்னு நியூஸ் வருது…அப்டின்னா உங்க பேரண்ட்ஸ்  சூர்யா வசிகரன் சாரை மர்டர் செய்துட்டு வசிஸை பிடுங்கிக்கிட்டதா சந்தேகப் படுவாங்க இல்லையா?

அப்றம் போலீஸ் கேஸ் ஃபைல் செய்தாங்கன்னா, எல்லாத்தையும் குடைவாங்க…. நாங்க எதுக்காக ஓடி மறஞ்சமோ அத்தனையும் ப்ரயோஜனமில்லாம போய் நாங்க மாட்டிப் போம்…

அடையாளமே தெரியாம வசிஸை காலி செய்யனும் …அதோட வசிகரன் சார் காணம போனதை அவர் அக்கா வீட்ல நம்பனும்….ஏத்துகிடனும்…தேடி போலீஸ்ட்ட போக கூடாது… அதோட வசிகரன் சாரோட மத்த ப்ராப்பர்டிய வித்து பணம் வாங்றதும் அவங்களுக்கு சந்தேகம் வரக் கூடாது….

அதனால வசிகரன் சாருக்கு பெரிய அளவுல கடன்னு சொல்லிட்டு, வசிஸ் தவிர வசிகரன் சாரோட மத்த எல்லா ப்ராப்பர்டியையும் வசிகரன் சாரே விக்ற மாதிரி வித்துட்டு ஊரைவிட்டு ஓடிடனும்… அப்றம் அவங்கள டெத்னு காமிச்சுட்டு,

வசிகரன் சாரோட டெத் வில் வழியா டேவிட் சார்க்கு வசிஸ்கம்பெனியை கொடுத்துடனும். அப்படி கம்பெனி உங்கப்பா பேருக்கு மாறினா யாருக்கும் சந்தேகம் வராது….

அப்றம் வசிகரன் சாரின் மத்த ப்ராப்பர்டிஸை வித்த பணத்த வச்சு சூர்யா, உங்கப்பாட்ட  வசிஸை முறைப்படி வாங்கிற மாதிரி வாங்கிட்டு வசிஸை டிஸ்போஸ் செய்துடனும்.

ஆக எந்த சந்தேகமும் இல்லாம உங்கப்பா அம்மா கடன் தொல்லையால வசிகரன் சார் ஓடிட்டார்னு நம்பிடுவாங்க….வசிஸை டிஸ்போஸ் செய்றப்ப அதுல தலையிடவும் மாட்டாங்கன்றது எக்‌ஸ்பெக்டேஷன்….

அதோட வசிஸை வித்த  பணத்தை டேவிட் சார் வசிகரன் சாரோட கடனடைக்க குடுப்பார்.   என் ஃப்ரெண்ட்ஸ் ரத்னம், வினித், பவன், கிருபா எல்லோருக்கும் வசிகரன் சார்க்கு கடன் கொடுத்தவங்கன்னு டாகுமென்ட் காமிச்சு அந்த பணத்தை உங்கப்பாட்ட வாங்கிடனும்.

 தென் அவங்க எல்லோரும் அதை வசிகரன் சார்கே ட்ரான்ஸ்ஃபர் செய்துட்டனும்…..இதுதான் ப்ளான். சோ வசிகரன் சாரோட மத்த ப்ராப்பர்டிய எவ்ளவுக்கு விக்க முடியுமோ அவ்ளவுதான வசிஸோட விலையா ஃபிக்‌ஸ் செய்ய முடியும்…? அதான்  உங்களுக்கு அதோட சேல் ரேட் கம்மியா தெரிஞ்சிருக்கும்….” தன்னால் முடிந்த வரை விளக்கினான் அதி.

“அப்டி டேவிட் சார் விக்க ட்ரை செய்றப்ப, அவர் அதை வேற யாருக்கும் வித்றாதபடி மத்தவங்க டீலை கலச்சுவிட்டு சூர்யா மட்டும் வாங்ற மாதிரி பார்த்துகிட்டா ப்ரச்சனை சால்வ்ட்…..அதோட பண விஷயத்துல டேவிட் சாரை முழுசா நம்பலாம்…கண்டிப்பா கடனடைக்க குடுத்றுவார்ன்றது வசிகரன் சாரோட நம்பிக்கை…. “

சொல்லிய அதியை கசப்பாகப் பார்த்தான் ஆதிக்….”.நீங்க உங்க அண்ணாவுக்கு எதுவும் ப்ரச்சனை ஆகிடக் கூடாதுன்னு இப்டி ஓடி வந்திருக்கீங்க…ஆனா உங்க வசிகரன் சார் மட்டும் தன் அக்கா வீட்டை இப்டி மாட்டிவிட்டுட்டு போயிருக்காரே…அதுவும் என் அப்பா ட்ரெஸ்ட் ஒர்த்தின்னு தெரிஞ்சதால அவரை ஏமாத்தலாம்னு நினச்சது எவ்ளவு மோசமான விஷயம்…?”

அதி அமைதியாய் ஆதிக்கைப் பார்த்தான்.

“நடந்ததுல எதுவுமே என் மனசுக்கு ஒத்துப்போற விஷயம் கிடையாது மாப்ள….அன்னைக்கு ஆரம்பிச்ச பொய்…இன்னைக்கு வரை எல்லாத்லயும் பொய்….பொய்யான பேரு, பொய்யான சிட்டிசன்ஷிப்..பொய்யானா கதை….என் பிள்ளைங்கட்ட கூட என் கடந்த காலத்தைப் பத்தி சொல்ல முடியலை….உண்மையிலேயே அந்த சங்கீத் என்னை கொன்னுருந்தா நான் எவ்ளவோ சந்தோஷமா போய்ருப்பேன்னு நினைக்காத நாள் கிடையாது….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் அப்டி கொடுமையா இருக்குது…

பொய் சொல்றதால கிடைக்ற பலன் அந்த நேரத்துக்கு பார்க்க நல்லா தெரிஞ்சாலும் கண்டிப்பா லாங் ரன்ல நரகாமாகிப் போகுது….எந்த ஃபேமிலி நல்லா இருக்கனும்ங்கிறதுக்காக நான் இந்த பொய்க்கெல்லாம் ஒத்துகிட்டனோ அந்த என் அண்ணன் ஃபேமிலி அதே பொய்யால எதையெல்லாம் இழந்துட்டு நிக்குது…?இன்னைக்கும் உங்க அம்மாவுக்கு ரேயாவ பிடிக்காம போறதுக்கும்…உங்க ரெண்டு பேருக்குள்ள ப்ரச்சனை ஆகிறதுக்கும் கூட என் பொய்தான காரணம்….?

பொய்யோட வீரியத்தை, குரூரத்தை முழுசா அறிஞ்சவன் நான்….என்னால உங்க வசி மாமாவப் பார்த்து இரக்கம் தான் பட முடியும்…ஏன்னா அவரும் என்னை மாதிரி தீக்குள்ள விழுத்துட்டு உயிரும் போகாம, அந்த தீய விட்டு வெளிய  வரவும் முடியாம மனசளவுல துடிச்சுகிட்டுதான இருப்பாரு….

அதோட தப்பு செய்யாதவன் தான் அடுத்தவன  குற சொல்லலாம்… ஆனா பொய் சொல்லி ஏமாத்திட்டு நிக்ற நான்…… இன்னொருத்தரைப் பார்த்து எப்டி குற சொல்ல முடியும்?” ஆதிக்கை நேருக்கு நேராய்ப் பார்த்தான் அதி.

“நாங்கல்லாம் செத்துட்டோம் மாப்ள …இன்னும் சாக ஒன்னுமேயில்லை…” விரக்தி முழுமை பெற்று இருந்தது அதியின் வார்த்தையில்.

ஆதிக்கிற்கு அதியின் மேல் இரக்கம் வந்தது. ஆனால் வசிகரனை நினைக்கும் போது. நிச்சயமாய் அப்படி உணர முடியவில்லை. ஏன் அவன் தன் தந்தையை ஏமாற்றியதாலா? தன் கையை இறுக்கமாய் பிடித்தபடி அருகில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்தான்.

அவளும் தானே இந்த அதியால் இழப்பை சந்தித்திருக்கிறாள்…அதுவும் இவனுக்காவது தன் தந்தை இகழப்பட வழி செய்துவிட்டு போய்விட்டான் வசிகரன், ஆனால் அவளுக்கோ அவள் அம்மாவை அல்லவா காவு வாங்கிவிட்டது இந்த நாடகம்….ஆனால் அவளால் எப்படி இந்த அதியை ஏற்க முடிகிறது இவனைப் போலவே…?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.