(Reading time: 77 - 154 minutes)

வனும் அவளுமாய் மட்டும்.

 கதவை பூட்டியவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரேயா. அவன் முகம் பார்க்க முடியாத வெட்கம் காரணம்.

“ஏய் கேடி இவ்ளவு நேரம் கிரிமினல் லாயர் மாதிரி  கேஸ் பத்தி கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருந்த?”

 இதுக்கெல்லாம் பதில் சொல்றதுதான் இப்ப வேலையாமா?

“பேசனும்னு சொன்னியே….?”

“………………………..”

அவள் எதற்கும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என தெரிய அவளை அள்ளியவன் தங்களது மாடி அறைக்கு அவளை கொண்டு சென்றான்.

அறை மல்லிகையும் அடர் வண்ண ரோஜாவுமாய் முழு அலங்காரத்தில் மண இரவுக்கு தயாராய்…..

பெண்மைக்குள் வெட்கப் ப்ராவகம். காரணமானவன் மார்பில் இன்னுமாய் இறுக புதைந்தாள். காதல் உற்சவம் கணவன் மனைவி செயல்.

காலையில் விழிப்பு வர சுற்றிலும் பார்த்தவள் அவன் கையிலிருந்து அவசரமாக எழுந்து கொண்டாள்.

“ஹேய்….இது என்ன ரெஸ்பான்ஸ்?” இவள் எழுந்த வேகத்தில் அவன் விழித்துவிட்டான்.

“இந்த ரூம்…..?”

“அதுக்கென்ன? “

“இப்டி டெகரேட் பண்ணது யாரு?”

விசிலடித்தான் ஆதிக்.

“இதுவும் உங்க ட்ராமாவா………??” அவள் அவனைப் பார்க்க, வாய்விட்டு சிரித்தான்.

“ஏய் கேடி…” அவள் முகத்தை ரசனையாய்ப் பார்த்தவன்…

.”நேத்து நாம இங்க வர்றப்பவே இப்டி தான் டெகரேட் ஆகி இருந்துச்சு” என்றான்.

“அதான் எப்டி?”

“அத நேத்தே கேட்றுந்தா நியாயம்.. ”

அவன் சொல்ல வருவது மெல்ல உறைக்க வெட்க பூக்கள் பெண் வதனமிடத்து.

“இன்னுமா புரியலை…..சரன் அண்ணா வேலை…அநேகமா இன்னைக்கு நாம மெகா ஹனிமூன் கிளம்புவோம்…எங்கம்மா சரண் அண்ணா அம்மாட்ட நம்ம கதைய சொல்லி லீவே இல்ல பிள்ளைங்களுக்கு நேரமே கிடைகலைனு புலம்பிருப்பாங்க….சரன் அண்ணா பார்டியில  வந்தனா மேம்ட்ட நல்லா பழகிட்டாங்க…..இவங்க அவங்கட்ட எதாவது சொல்லிருப்பாங்க…..நமக்கு லீவு சாங்ஷன்ட்….”

“ஹையோ அத்தைஸ்லாம் சூப்பர்…..”

“ஓகே ஆன்டீஸப் பத்தி அப்றம் பேசலாம் கேடி….இங்க வா”

“இதென்ன கேடி…எப்ப பார்த்தாலும் இந்த மாதிரி டைம்ல கேடிறீங்க…?”

“அது டூ இன் ஒன்…..கே…. டி….. காதல் தேவதை….கேடி…. ரௌடி பொண்ணு அதாவது காதல் தேவதையாகிய என் ரௌடிப் பொண்ணு”

காலை உணவிற்கு 11 மணிவாக்கில் கிளம்பி வெளியே வர நினைக்கையில் அவளை தன்அருகில் இழுத்தவன், பாக்கெட்டிலிருந்த அந்த நெக்லஸை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான். பேங்களூரில் முன்பு வாங்கியது.

“அம்மா நேத்து எடுத்துட்டு வந்தாங்க”

அவளுக்குரியது அவளிடமே.

சுவிஸர்லாந்திலிருந்து உலகத்துல இருக்ற அத்தனை ஹனிமூன் டெஸ்டினேஷனையும் “இப்ப வேண்டாம்” என்ற இரட்டை வார்த்தையில் மறுத்துவிட்டு ஆதிக் ரேயா ஹனிமூன் போன இடம் தென்கோட்டை.

“இங்க என்னப்பா இருக்குதுன்னு கூட்டிட்டு வந்தீங்க…?” அவள் சிணுங்க

“நான் நீ அப்றம் யாருமே இல்லாத இந்த வீடு இதெல்லாம் இருக்குது…..இதுக்கு மேல டீடெய்ல் கேட்டா நான் எப்டி சொல்லவாம்?” கண்சிமிட்டினான் அவன்.

“நீங்க சொல்லவே வேண்டாம்பா…” அவன் வாயை மூடினாள் மனைவி.

சிகரன் குடும்பத்துடன் இந்தியா வந்துவிட்டான். அவனாய் வந்த பிறகு யாரும் அவனிடம் முகத்தை தூக்கவில்லை எல்லாரும் அவனை இயல்பாய் ஏற்றுக் கொண்டார்கள். ஆதிக்கை தவிர. டேவிட் ஜெயா என ஒவ்வொருவரிடமாக மன்னிப்பு கேட்டவன் ஆதிக்கிடம் மட்டும் அந்த போட்டோ மாற்றிய தவறை ஒத்துக் கொண்டான்.

“இந்தியா கூட கான்டாக்ட் வந்துட்டா ஒருவேளை இந்த விஷயம் மலர்க்கு தெரிய வந்துடுமோன்ற பயம்….அதனால தான் உன்னையும் ரேயாவயும் ஒட்டு கேட்கிறாங்கன்ன உடனே நானே வராமே அதிட்ட போய் சொன்னேன்… மத்தபடி உங்க அத்தைய அப்டி ரேயா தாத்தாட்ட பேச வச்சது எல்லாம் சூர்யாவால தான்….தாடியும் துப்பாக்கியும் கையுமா கூடவே இருந்தான்….”

போட்டாவை மாற்றியது வசிகரனாய்தான் இருக்கும் என்பது ஆதிக்கின் யூகம். அதுதான் உள்ளுணர்வில் அவன் வசிகரனை மதிக்காமல் இருக்க அடிப்படைக் காரணம்.

அதை வசிகரனே சொல்லி வருந்தி விட்டதாலும், மலர் விழியும் வசிகரனுக்காய் இவனிடத்தில் பரிந்து பேசியதோடு அல்லாமல் தன் கணவனிடம் இயல்பாய் அவள் செலுத்திய அன்பினாலும் ஆதிக்கிற்கு வசிகரன் மேலிருந்த கோப உணர்வு குறைய தொடங்கியது.

ங்கீத் கொலை வழக்கு விசாரணைக்கு வர 2 வருடங்களனது. தீர்ப்பு வரவோ மேலும் இரு வருடங்களானது.

 தற்காப்பிற்காக செய்த காரணத்தால் அதி கொலை வழக்கில் நிரபிராதி என அறிவிக்கப் பட்டாலும், சட்டத்தை ஏமாற்றி நாட்டை விட்டு ஓடியதும், நார்வே நாட்டிற்கு போலி தகவல் கொடுத்து குடியுரிமை வாங்கியதும் குற்றங்களாக உறுதிப் படுத்தப் பட்டு அதற்கு 2 ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்டு அந்த காலத்தில் அதியின் வயது மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த தண்டனை கேன்ஸல்ட். மலர்விழிக்கும், பியூலாவுக்கும் கூட இதே தீர்ப்புதான்.

வசிகரனுக்கும்  சட்டத்தை ஏமாற்றி நாட்டை விட்டு ஓடியதும், நார்வே நாட்டிற்கு போலி தகவல் கொடுத்து குடியுரிமை வாங்கியதும் குற்றங்களாக உறுதிப் படுத்தப் பட்டு அதற்கு 2 ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்டு, கேன்ஸல்ட்…ஆனால் தனது பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்ற விதம் சட்ட மீறல் என்பதால் அதற்கான வரியை இப்பொழுது கெட்டச் சொன்னதோடு 1 வருட சிறை வாசம்.

சூர்யா நேரடியாக சங்கீத் போன்ற ஒரு குற்றவாளிக்கு உதவி மறைமுகமாக அவனது போதைப் பொருள் கடத்தலுக்கு உதவி இருப்பதோடு, தன் சட்ட ஞானத்தை 4 இள வயதினரினரை மிரட்ட, அவர்களை சட்டத்தை மீறச் செய்ய பயன் படுத்தி இருப்பதால் 7 வருட கடும்காவல் தண்டணை அவனுக்கு. அதோடு அவனது சட்ட டிகிரியும் பறிக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு

டிகாரம் மணி இரவு இரண்டு என்றது.

“ஆதிப்பா….” ரேயாவின் சின்ன அழைப்பில் அருகில் படுத்திருந்தவன் சட்டென எழுந்துவிட்டான்.

“என்னாச்சுமா… எங்கயாவது வலிக்குதா…?”

“சே அப்டில்லாம் இல்ல….”

“அப்றம் என்னமா?...”

“அது ஏன்னு தெரியல பசிக்குது…”

“ஃப்யூ மினிடஸ் பொறுத்துக்கோ ரேயு பால் எடுத்துட்டு வர்றேன்…”

“இல்ல வயிறு எப்டியோ இருக்கு…பால் வேண்டாம்…..ஒரு குட்டி வாக் போலாமா?”

க்ளாக்கை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவன் “ வா ரேயு” அவள் கையை பிடித்தபடி வீட்டின் ஹாலில் நடக்க தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.