(Reading time: 25 - 49 minutes)

"பைரவி .. இந்த மாத கடைசியில் நான் இந்தியா போக தீர்மாணித்து இருக்கிறேன்.. என் தந்தை இறக்கும் முன்னர், தன் குடும்பத்தை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.. அவரது குடும்பத்திடம் நான் தொடர்பு கொள்ள வேண்டும், என்று அவரது டயரியில் எழுதி எனக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.. இத்தனை நாட்களாக நான் அதையெல்லாம் பெரியதாக நினைக்கவில்லை.. அதற்கு என நேரமும் இல்லை.. ஆனால், இப்பொழுது உன்னுடன் பழக தொடங்கியதிலிருந்து எனக்கு என்னவோ உன் குடும்ப சூழல், என்னை என் வேர்களை தேட தூண்டுகிறது. நான் இந்தியா சென்று, என் உறவினர்களை தேடப் போகிறேன்.. உனக்கும் இந்தியாவை பார்க்க வேண்டும் என்றாயே??.. யோசித்து சொல்.. என்னுடன் வருகிறாயா?" என்று கேட்டான் அஜய்.

"தெரியவில்லை அஜய்.. என் பேரண்ட்ஸ் ஒத்து கொள்வார்களா??.. எனக்கும் ஆசையாகதான் இருக்கிறது.. நானும் என் சங்கீதம் சம்மந்தமாக கொஞ்சம் நாட்கள் இந்தியாவுக்கு போகலாம் என்று நினைத்திருந்தேன்.. பார்க்கலாம்..அம்மா சம்மதிக்க வேண்டும்.. அது என்னவோ அவர்களுக்கு நான் இந்தியா என்று பேச்சை எடுத்தாலே பிடிப்பதில்லை.. எனக்கும் அவர்களை கேட்க தயக்கமாக இருக்கிறது"

"இதற்கு தான் சொன்னேன், உன் இஷ்டப்படி வாழ முடிகிறதா பார்.. இந்த பாச, பந்தம் இதெல்லாம் நமக்கு கால்கட்டு தான்.. நம்மை கட்டி போடுகிறது.. பேசாமல் எல்லாவற்றையும் உதறி விட்டு என்னோடு வந்து விடு.. சேர்ந்து இந்தியா செல்வோம்.. நாம் இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம்"

"உனக்கு புரியாது அஜய் ..என்னால் என் பெற்றோரை மீறி எதுவும் செய்ய முடியாது.. அவர்கள் மாதிரி தான் நானும் ஒற்றுமையாக, காதலுடன் ஒருத்தனோடு கருத்து ஒருமித்து வாழ ஆசை படுகிறேன்.. ஒருவனுக்கு ஒருத்தி அதான் என் பாலிசி.. இப்ப கூட ஒன்றுமில்லை, நீ சொல்லு , நாம் திருமணம் செய்து கொள்ளலாம், எனக்கும் உன்னை பிடிக்கும் தான்.. ஆஸ் அ ஃப்ரெண்ட்..ஆனால் உன்னை காதலிக்கத் தோன்றவில்லை..அதனால் தான் கல்யாணத்தை மனம் நாடுகிறது..மே.. பீ.. கல்யாணம் முடிந்தால் நமக்குள் காதல் வருமோ என்னவோ.. நீ இப்ப சொல்லு..அதற்கு பிறகு நீ எங்கு கூப்பிட்டாலும், உன்னோடு வரத் தயார்." என சிரித்தாள் பைரவி.

அவள் சிரிக்கும் அழகில் மயங்கியவன், ஏன் இவளை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று ஒரு நிமிடம் யோசித்தவன், தலையாட்டி, "அம்மா தாயே..நீ என்னோட இந்தியா வருவதற்காக எல்லாம் என்னால் திருமணம் செய்ய முடியாதம்மா.. என் பாலிசி, பிடித்திருந்தால் சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.. பிடிக்கும் என்பதற்காக வாழ்னாள் முழுதும் இன்ப சுமையாக இருந்தால் கூட அதை முதுகில் ஏற்றிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை..அடுத்து குழந்தை குட்டி என்று என்னை ஒரு கூட்டுக்குள் நினைத்துப் பார்க்கவே சுத்தமாய் பிடிக்கவில்லை..அதற்கு நான் தயாரும் இல்லை.. மே பீ.. நான் வளர்ந்த சூழல் கூட காரணமாய் இருக்கலாம்..ஏதோ என் அப்பா தமிழை எனக்கு சொல்லிக் கொடுத்தார் பேசுவதற்கும் எழுதுவதற்கும்..அவ்வளவுதான் என் தமிழ் பண்பாடும் நாட்டுப் பற்றும்..மற்றபடி நம் கலாசாரம், பழக்க வழக்கம் என்பதில் இதுவரை எந்த ஈடுபாடும் இல்லை..இனிமேல் வருமா என்றும் தெரியாது.."

இந்த இரண்டு எதிர்மறை துருவங்களும் வாழ்க்கையில் இணைவார்களா??.. காத்திருப்போம்.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.