(Reading time: 19 - 37 minutes)

ண்டிப்பாக அது சரி இல்லை. அவள் மட்டும் தனியாக இருப்பாள். வீடு முழுவதுமாய் திறந்து கிடக்கிறது. ஆக அவள் உள்ளே தான் இருப்பாளாய் இருக்கும்….. அல்லது பக்கத்தில் எங்காவது நின்று கொண்டு இருக்கலாம்.

இப்பொழுது இவன் என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை…. இதென்னடா தொல்லை….. இந்த அனு விஷயத்தில் எல்லாமே இவனுக்கு இப்படித்தான் ஆகிப் போகிறது.

இவன் என்ன செய்யலாம் என யோசித்தபடி அந்த தெருவில் அப்படியே நடக்க தொடங்கினான்….. பின்னே அவள் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு அவள் வீட்டையே முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு அது என்னதாக தோன்றும்?

ரோட்டு முனைக்கு சென்று இயல்பாய் திரும்புவது போல் இவன் திரும்பி வர, இப்போது அனு அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிகிறது.

இப்பொழுது அவளிடம் பேசலாமா கூடாதா? ஊர் வழக்கப்படி இவன் போய் அவளிடம் பேசுவது கண்டிப்பாய் தப்பாகத்தான் பார்க்கப்படும்.

ஆனால் இவனுக்கு வர்ற கோபத்துக்கு….. கூப்டுவிட்டும் வராம இப்படி ஊர் சுத்திட்டு வர்றதுக்கு….. ரெண்டு வார்த்தையாவது கேட்காம எப்படி போறதாம்???

இவன் அவளை முறைத்துக் கொண்டே அவளை நோக்கி நடக்க,  அவள் இவன் புறம் பார்வை கூட திருப்பாமல் கடந்து சென்று தன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

கடும் எரிச்சலுடன் அவளை கத்த கூட வழி இன்றி வீட்டிற்கு திரும்பினான் அதிபன். இப்ப குருவம்மாவை அனுப்பி, அந்த வெள்ளக் கோழிய கையோட கூட்டிட்டு வர சொல்லனும்….. இவன் வீட்டுக்குள்ள அவ வரட்டும்…… அப்றம் எப்படி தனியா பிடிச்சு தாழிக்கிறதுன்னு இவனுக்கு தெரியும்….

னதிற்குள் கொக்கரிக்கும் கோபத்துடன் தான் அதிபன் தன் வீட்டிற்குள் நுழைந்ததே….

“அக்கா….” இவன் குருவம்மாவை அப்படித்தான் அழைப்பான். அவரை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தால்  தரை தளத்திலிருந்த படுக்கை அறையிலிருந்து அவனது அம்மாவின் சத்தம்

“வந்துட்டியா அதி? எங்க போய்ட்ட?”

அம்மாவின் அழைப்பை கேட்கவும் அவசர அவசரமாக அம்மாவின் அறைக்கு போகிறான் இவன்.

“அந்த அனுவை கேட்டுகிட்டே இருந்தீங்கள்ல….அதான் போனேன்…”

இவன் பதிலில் ஏற்கனவே மலர்ந்திருந்த அம்மா மரகதம் முகத்தில் இன்னுமாய் மலர்ச்சி. “அவ இப்பதான்பா இங்க வந்துட்டுப் போனா…. நீ அந்த பக்கம் போயிருக்க அவ இந்த பக்கம் வந்திருப்பா போல…..”

‘ஓ வெள்ள கோழி வந்துட்டுப் போனதுக்குத்தான் அம்மா இவ்ளவு ஹேப்பியா?’ அதிபன் மனம் இதை கவனமாய் குறித்துக் கொள்கிறது.

மரகதத்திற்கு பெரிய மகனின் திருமணம் குறித்து கவலை. அவருக்கு ஏதோ எப்படியோ அனு இந்த வீட்டுக்கு மூத்த மருமகள் என தோன்றிவிட்டது.

 இன்று அவரது தாயார் தந்த நகை காணமல் போகவும் மனதிற்குள் அம்மா ஞாபகமா வச்சிருந்த நகை காணம போய்ட்டு அப்பன்னா அம்மா இருக்க இடத்துக்கே போகப் போறனோ என  மனதில் ஒரு எண்ணம் அவருக்கு வந்துவிட்டது.

அப்படின்னா அதி தனியா நிப்பானே என பயம். அபயனை அதியும் யவியும் பார்த்துபாங்க….யவிக்கு கல்யாணம் நிச்சயமாகிட்டு….எப்படியும் கல்யாணம் ஆகிடும்…. ஆனா யார் சொல்லி அதிக்கு கல்யாணம் நடக்கும்? இப்படியாய் ஒரு தவிப்பு அவர் தாய்மை பரப்பில்.

ஆக அதிபனை பத்தி மனம் அழுத்தவும் அவருக்கு அனுவை பார்க்க வேண்டும் என தோன்றிவிட்டது. அதோடு அனுவிடம் நன்றாக பழக விரும்பினார் மரகதம். அப்படியானல் தானே அவரால் அவளிடம் திருமணம் பத்தியெல்லாம் பேச முடியும்.

அதற்குத்தான் அவளை வரச் சொன்னது அவர். இதில் அவளைத் தேடித்தான் அதிபன் சென்றிருந்திருக்கிறான் என்ற செய்தி அதிபன் திருமணம் பற்றி ஏங்கி கிடந்த அவர் மனதிற்குள் ஆயிரம் சுக ஸ்தலங்களை தொட்டுக் காண்பிக்கிறது.

ஆக அவர் மன சந்தோஷம் முகத்தில் அதுவாக வந்து அமர்கிறது. ஆனால் அனு வந்துவிட்டுப் போன செய்தி அதிபனுக்குள் அலைகடல் ப்ரளயம்.

ஆக இவனை கவனிச்சுட்டே இருந்து இவன் வெளிய போனதும் உள்ள வந்துட்டுப் போய்றுக்கு அந்த வெள்ளக் கோழி!!! ஆனால் ஏன்?

அடுத்த நொடி அதற்கு பதில் கிடைத்தது அபயனிடமிருந்து…. “டேய் அதி என் பர்ஸை பார்த்தியா….? இந்த டேபிள் மேலதான்டா வச்சுட்டுப் போனேன் அதைக் காணோம்….” என.

ஆக இவன் இல்லாத நேரம் வந்து இன்னுமாய் திருடிட்டுப் போய்ருக்கு அந்த வெள்ளக் கோழி….கொக்கரித்துக் கொண்டிருந்த கோபம் இப்பொழுது கொந்தளித்துப் போனது அதிபனுக்குள்….

கோழிக்கு கொஞ்சம் கத்திய காமிக்கலைனா கதைக்கு ஆகாது!!!!!

“ஏன்டா இப்டித்தான் கண்ட இடத்துல பர்ஸ போடுறதா? இத்தனை வெளியாட்கள் வந்து போற இடத்துல வச்சுட்டு காணோம்னா என்ன அர்த்தம்?“ முதலில் தம்பியைத்தான் தான் சரி செய்து கொள்ள சொன்னான் அதிபன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.