(Reading time: 19 - 37 minutes)

நான் ஏதேச்சையா மாடியிலிருந்து பார்த்தேன் ….அவர் உன்னைப் பிடிக்கிறதும்….நீ அவர் கன்னத்த தொடைக்கிறதும்….. நம்ம குடும்பத்துல இதுலாம் சரியா வராது நிலு…. அந்நேரம் பார்த்து உன் பீரங்கி அத்தை….( லோக்‌ஃஸொடொன்டாவுக்கு அக்கா வச்சிறுக்கிற பெயர்….) அவங்க வேற அந்த பக்கமா வந்தாங்க பாரு….எனக்கு சகலமும் ஆடிப் போச்சு…அதான் அடிச்சு பிரண்டு ஓடி வந்து அவங்களை பெர்ஃபியூம் தாரேன்னு சொல்லி கூட்டிட்டுப் போய்ட்டேன்……உனக்குன்னு கொண்டு வந்த சாக்லேட், பெர்ஃபியூம் எல்லாத்தையும் அவங்க கொண்டு போய்ட்டாங்க….ஆனா பாரு சாக்லேட்டோட போச்சுன்னு வச்சுக்கோ…..அவங்க மட்டும் பார்த்திருந்தாங்களோ…. வீட்ல தீ பிடிச்சுட்டு…. விருந்துக்கு வந்த மாடு செத்து போச்சுன்னு ஏதாச்சும் சொல்லி இந்த கல்யாணம் வேண்டாம்னு கல்யாணத்தை நிப்பாட்ட கங்கணம் கட்டி இருப்பாங்க…. யாரு சந்தோஷமா இருந்தாலும் அவங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்தான….

அதான் சொல்றேன்….உன் அவர கல்யாணம் வரைக்கும் மீட் பண்ணாத….தேவை இல்லாத கண்ணுல விழுந்து வம்பை இழுக்காத…” அக்கா சொல்லிக் கொண்டு போக…. பறி போன சாக்லேட்டை நினைத்து ஒரு பக்கம் அடைத்துக் கொண்டு வருகிறது என்றாலும் அசத்தலான ஐடியா ஒன்னு அவளுக்கு அப்படியே கிடைக்குது….

 யவ்வன் வீட்டில் ஒரு ஆர்டிஃபீஷியல் அசம்பாவிதம் செட் செய்யனும் அதுவும் தட்டுமாறுன அடுத்த நாளுக்குள்ள……இதுதான் ப்ளானின் முக்கிய ஸ்டெப்….. யவ்வன் வீட்டு ஆட்கள் கதி கலங்கி நிக்கிறப்ப…..  பேசி முடிச்ச கல்யாணம் நல்லதுக்கு இல்ல….அப்படி இப்படின்னு அந்த ஊர்ஜனம் பேசிக்கிறப்ப

அடுத்த பொண்னு ப்ரஃபைலை அனுப்பி வச்சுட்டு…. கூடவே அங்க ஒரு நல்ல விஷயத்தை நடத்தப் போறா நம்ம நிலு….யெஸ் யெஸ் அதுக்கு கடவுள் இவளுக்கு ஹெல்ப் இப்பவே செய்து வச்சுறுக்கார்.

மாப்பிள்ள வீட்டுக்காரங்கல்லாம் போனபிறகு அங்க சோஃபா இடுக்குக்குள்ள விழுந்து கிடந்த மாங்கா மாலை இவள் கண்ணுலதான் பட்டுறுக்குது……வேற யாரு கண்ணுலையும் படலையே …அதுக்கு என்ன அர்த்தம்…..? கடவுள் கூடவே இருக்கார்னு அர்த்தம். ஃபோட்டோஸை வைத்து கன்ஃபார்ம் செய்தாச்சு அந்த மாலை யவ்வன் அம்மா தான் முதல்ல போட்டுறுக்காங்கன்னு…. ஆக இப்ப கைமாறுனதும் ஏற்கனவே நகை காணமல் போய்ட்டுன்னு ஒரு ஃபீல்ல இருப்பாங்க

இப்ப இவ போய் அவங்களுக்கு ஏதோ ஃபார்ம் இருக்குன்னு சொல்லிருக்காங்களே, அங்க உள்ள ஆடு மாடுகளை கொஞ்சம் தூரம் தள்ளி கொண்டு போய் இவங்க வடக்கு தோப்புல அதை அடச்சுட்டா  போதுமே…… இவங்க  வடக்கு தோப்பு கொண்டல்புரத்துக்கு பக்கத்துலதான இருக்கு  தோப்புக்கு முழுக்க வேலி…கேட்டை பூட்டிட்டா மாடுல்லாம் எங்கயும் போக முடியாது….

தோப்புக்கு சுத்து வட்டாரத்துல யாரும் எதுவும் கிடையாது…. ஆக யாரும் கண்டு பிடிக்க முடியாது…உள்ள நிறைய புல்லு….மாடுகளும் ஜாலி…இவளும் ஜாலி…. ஒரு வாரம் கழிச்சு திருப்பி அனுப்பிகிடலாம்…. ஒரு மாடு காணாமல் போனாலே கிராமத்துல பதறுவாங்கன்னு இவளுக்கு தெரியும்….ஒரு கூட்ட மாடு காணமல் போய்ட்டுன்னா???

    அவங்க ரொம்பவே அரண்டுடுவாங்க…..இந்த இடம் வேண்டாம்னு எல்லோரும் பேசுவாங்க……அதே நேரம் அடுத்த பணக்கார பொண்ணு ப்ரஃபைல் அனுப்பிட்டு….இந்த மாங்கா மாலைய அவங்க வீட்ல உள்ளவங்க கண்ணுல படுற இடத்துல போட்டு வச்சுட்டா…. பொண்னு பத்தின தகவல் வரவும் காணாம போன நகை கிடைக்குதுன்னு …..அந்த பொண்ணுதான் அவங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணுனு நினச்சிடுவாங்க…. எப்பூடி?

அதிலும் இன்னைக்குப் பார்த்து ரெஜினா வந்து நிற்கிறாள். ரெஜினாவுடனும் சரி பவிஷ்யாவுடனும் சரி  பக்கத்தில் இருக்கும் ஆன்னீஸ் குழந்தைகள் இல்லம் போகும் வழக்கம் நிலவினுக்கு உண்டு. அது மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கானது. போய் முடிந்தவரை குழந்தைகளை பராமரிக்க உதவிவிட்டு வருவது  இவள் பழக்கம்.

ஆன்னீஸிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவுதானாம் கொண்டல்புரம். ஆக ஆன்னீஸ் போவது அப்படியே கொண்டல் புரத்தில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு திரும்பி வருவது என்ற திட்டத்தில் ,அம்மாவிடம் ஆன்னீஸ் போவதாக சொல்லி ரெஜினாவுடன் பவிஷ்யாவைப் பார்க்க போய்விட்டாள்.

ரெஜினாவுக்கு கொண்டல்புரம் எதற்கு போகிறோம் என சொல்லவில்லை. மாப்பிள்ளை ஊர் என்றதுமே அவள் “ஐ ஜாலி “ என கிளம்பி வந்துவிட்டாள். ஆனால் பவிஷ்யாவிடம் சொல்லாமல் முடியாது. ஆக இவள் சொல்ல அவள்

“அடப்பாவி…ஒரே நாள்ள எப்டிடி நீ இப்டி கேடியான? மாடு திருட போறேன்னு கிளம்பி நிக்குற….” என அலற

“சீ…லூசு மாதிரி பேசாத…. கவ்ஸையெல்லாம் பிக்னிக் கூட்டிட்டுப் போறோம்…. திரும்ப சேஃபா அனுப்பி வைக்க போறோம்….இது சேவை…சர்வீஸ்….பவி….இதை மட்டும் வேண்டாம்னு சொல்லாத….இந்த பளான்ல பாரு…. வேற எந்த கெடுதலும் இல்லை …ப்ளீஸ்…. ப்ளீஸ்டா என் சோள கொல்ல பொம்மல்ல சொன்னா கேப்பல்ல….”  என கொஞ்சி கெஞ்ச…. பவிஷ்யாவும் இவளுடன் கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்ப காரணம் கவ்ஸை கடத்த இல்லை….. இவள் போகாவிட்டாலும் நிலவினி போய் எதையாவது வம்பு இழுத்து வருவாள் என தோன்றிவிட்டது பவிஷ்யாவிற்கு ……ஆக நிலவினியை காப்பத்த…அதோடு முடிந்தால் யவ்வனைப் பார்த்து ப்ரச்சனையை தீர்க்க வழி சொல்வதற்கு….. யவ்வன் நம்பரை இந்த நிலு தந்தால் எவ்ளவு நல்லா இருக்கும்??

சோ இப்ப கொண்டல்புரம் கிளம்புறதுன்னு முடிவாகிட்டு….. அதுவும் எப்படி கிளம்புனாங்க தெரியுமா?

தொடரும்!

Episode # 06

Episode # 08

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.