(Reading time: 19 - 37 minutes)

ப்ச்….என் விபரம் தெரிஞ்ச காலத்துல இருந்து இங்கதான் எல்லாத்தையும் வச்சு எடுக்றேன்….எப்பவும் எதுவும் காணாம போனது இல்லை….இப்பதான் புதுசா எல்லாம் போகுது… அப்ப உள்ளவங்க தான் இப்பவும் வேலைக்கு இருக்காங்க….திடீர்னு என்னாச்சுன்னு தெரியலை…” சொல்லிக் கொண்டே அவன் வெளியே போய்விட்டான். இவன் இதயத்திற்குள்தான் கோப கொந்தளிப்பு முழு மொத்த மூர்க்கத்திற்கு போயிருந்தது.

இந்த கோழிய என்ன செய்யலாம்?????

டகடவென வீட்டை விட்டு வெளியில் வந்தான். அனுவை எப்படி தனியே பிடிக்க என இவனிடம் திட்டம் என்று எதுவும் அதுவரை இல்லை தான்…. ஆனால் காலியாக ஆள் அரவமற்று கிடந்த தெருவைப் பார்க்கவும்……விடுவிடுவென அனுவின் வீட்டிற்கே சென்றுவிட்டான்.

கிராம வீடுகளைப் போல மொத்தமாய் திறந்து போட்டுதான் வைத்திருந்தாள் வீடை …..  ஆனால் உள்ளே அவள் இல்லை…. என்ன செய்ய என இவன் நினைத்து நின்ற நேரம் வீட்டின் பின் பக்கம் சத்தம்.

இது இன்னும் வசதி……

சத்தமின்றி பின் பக்கம் சென்றான்.

அவள் ஒருபுறமிருந்த தொட்டியிலிருந்து குடத்தில் நீர் எடுத்து மறு புறமிருந்த குளியலைறை தொட்டிக்குள் கொண்டு அதை ஊற்றி வைத்துக் கொண்டிருந்தாள்.

 ஓ குளிக்க போகுது கோழி!!!

தொட்டியிலிருந்து நீர் மொண்டு திரும்பிய அனு அப்பொழுதுதான் அங்கு நின்ற அவனைப் பார்த்தாள். பார்த்த நொடி தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு….யாரையும் அந்த நேரத்தில் அவள் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லையே….

“என்ன….எ..என்னாச்சு தீபன்?”

அவள் என்ன நடக்கிறது என முழுதாய் உணரும் முன்னாக கூட இவனுக்கு இருந்த கோபத்தில் அவள் கையிலிருந்த குடத்தை பிடுங்கி தூர வீசி இருந்தான் அவன்.

தடால் என்ற சத்தத்தோடு விழுந்து உண்டு ஓடியது அது உள்ளிருந்த நீரை தரைக்கு வார்த்துக் கொண்டே…

“தீபன்ன்ன்ன்” இதை சற்றும் எதிர் பார்த்திராத அவள் அலறியபடி  துள்ளி பின் வாங்கினாள். முகமெங்கும் கலவரம்.

“இந்த குடத்திலிருந்து இங்க நீ யூஸ் செய்ற ஒவ்வொன்னும் எங்க வீட்ல இருந்து அன்புங்குற அடிப்படையில கொடுத்தது…..ஆனா நீ எங்க வீட்லயே வாலாட்டுற என்ன?....” பல்லை கடித்துக் கொண்டு சீறினான் அவன்.

“என்ன சொல்றீங்க தீபன்….? வாலாட்டுறதா…? அப்டின்னா? ஆடு மாடு நாய் இதுதான வாலாட்டும்….. நான் எப்டி? “ மிரண்டு நடுங்கியபடி படு சீரியஸாக கேட்டது  வெள்ளைக் கோழி.

ங்கு நிலவினி ஆழ்ந்து அகழ்ந்து யோசித்து படுபக்காவாக ப்ளான் ரெடி செய்துவிட்டாள். கடவுளே என் கூட இருக்கார்…..கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது என நினைக்கும் அளவுக்கு எல்லாமே அவளுக்கு ஃபேவராகவே அமைந்து வந்தது அவளுக்கு எக்கசக்க நிம்மதி.

முதல் வேலையாக நைட்டோடு நைட்டாக உட்கார்ந்து தமிழ் மேட்ரிமோனியில் பணம் கட்டி, அதில் ஆயிரக்கணக்கான பொண்ணுங்க ப்ரஃபைலை அலச இவள் எதிர்பார்த்த மாதிரி ஒரு பொண்ணு ப்ரொஃபைல் இவளுக்கு கிடைத்தது.

முன்பு திட்டமிட்டது போல் இன்னொரு பெண் ப்ரொஃபைலைத் தான் கொடுக்கப் போகிறாள் யவ்வன் வீட்டுக்கு….. ஆனால் அதை அவர்கள் கன்சிடர் பண்ண இப்போது இன்னுமொரு வலுவான காரணம் உண்டு செய்யப் போகிறாள்.

அதுக்கு ஐடியா கொடுத்தது ஆல் இன் ஆல் அக்கா தமிழினிதான். யெஸ்ஸு அவளுக்கு தெரியாமலே இவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டா அக்கா….

“ ஏய் நிலு தட்டுமாத்துனதும் வீட்ல ஏதாவது மோசமா நடந்தா  இந்த சம்பந்தம் வேண்டாம்னு கிராமத்துலலாம் நினைப்பாங்க… அதனால கைய கால வச்சுகிட்டு சும்மா இரு……உன் அவரையும் சும்மா இருக்க சொல்லு….. “ நிலவினிக்கு புல்லட் ரைட்  என்றால் ஏனோ எப்போதும் ஆசை…..மத்த எல்லாத்துக்கும் இவளுக்கு கைகால் உதறும் ஆனால் இது அவளுக்கு சின்ன வயதிலிருந்து பழக்கம்… அப்பா கூட புல்லட்டில் போய் போய் இது படு இஷ்டம்.

இன்று இவளைப் பார்க்க இவள் ஃப்ரெண்ட் ரெஜினா வந்திருக்கிறாள். ரெஜினா இன்னும் பைக் ரேஸில் கலந்து கொள்ளாதது மட்டும்தான் பாக்கி. பைக் பிரியை. பக்காவாக ஓட்டுவாள்.

இவளைப் பார்க்க வந்தவள் இவள் வீட்டு வாசலில் நிற்கும் இவளது அப்பா புல்லட்டைப் பார்க்கவும் “நீயும் வர்றியாடி ஒரு ரைட் போகலாம்” என கேட்க

இவளுக்கும் ஒரு மூட் சேஞ்சுக்கு போய்ட்டு வரலாம் என தோண….. அதுக்குதான் அக்கா அப்படி ஒரு அட்வைஸ்.

அடுத்து அக்கா சொன்ன அட்வைஸை நினைக்கவே இவளுக்கு பிடிக்கலைதான்….ஆனாலும் அதுதான் இவளது ஐடியாவின் அஸ்திவாரம் தந்த அட்வைஸ்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.