(Reading time: 25 - 50 minutes)

னோ சத்தம் போடாம மாடி கதவ பூட்டிட்டு கீழ இறங்கு….. குட்டிப் பையன் விழிச்சுட கூடாது….பாவம் இப்போதான் அம்மாவும் பிள்ளையும் தூங்குறாங்க…..” கீழ் படியில் நின்ற அம்மா சிறு குரலில் சொல்ல…எப்படியும் விஜிலாவை எழுப்பி கதை கேட்க முடியாது ஆகையால்….. ஆழ்ந்து விஜிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடி கதவு ஒழுங்காக பூட்டி இருப்பதை உறுதி செய்து கொண்டு கீழே இறங்கினாள் மனோஹரி….

மறுநாள் காலை மீண்டுமாக இவள் தேடிச் செல்லும் போது….. விஜிலா தூங்க தொடங்கி இருந்த குழந்தையை மடியில் கிடத்தியபடி உட்கார்ந்திருந்தாள்.

இப்போ பேசுனா குழந்தை விழிச்சிடுவானே….. சின்ன புன்னகையுடன் இவள் திரும்ப…விஜிலாவோ…… “மனோ அவங்க அம்மா உன்ட்ட பேசுனதை நான் கேட்டேன்…. தூங்கி விழிச்சு கீழ வரலாம்னு பார்க்கிறப்ப அவங்க சத்தம்…..அதான் நான் கீழ வரலை…..அவங்கள  பார்க்கவோ பேசவோ எனக்கு எதுவும் இல்லை….அதுக்காக அவங்க என்னை கொடுமை படுத்தினாங்கன்னுலாம் நினச்சுகாத……நேசன் விஷயத்தை இவங்கட்ட பேசுறதால என்ன ஆகிடப் போகுதுன்னு தான் நான் விலகுறது…. மத்தபடி அவங்க மித்ரன் பத்தி சொன்ன அத்தனையும் உண்மை….. இப்டி விஷயமாதான் அப்பப்ப மித்ரன் பத்தி நியூஸ் வரும்….. நிறைய பொண்னுங்க கூட கன்னா பின்னானு ஒரு லைஃப்…… உனக்கு புரியும்னு நினைக்கிறேன்….. அப்ப திடீர்னு அவருக்கு கல்யாணம்னாங்க……அவங்க அம்மா அப்ப உண்மையிலே சந்தோஷப் பட்டாங்க...இத்தனைக்கும் கல்யாணத்துக்கு அவர் அம்மாவையே கூப்டலை……தெரிஞ்சவங்க தான் விடியோ அனுப்பி இருந்தாங்க….. அடுத்து கொஞ்ச நாள்ள டிவோர்ஸ் பேச்சு ஆரம்பிச்சுட்டு….. அவர்  அம்மா  பொய் சொல்றாங்கன்னுலாம் நினச்சுடாத….. தயவு செய்து மித்ரன் வேண்டாம் மனோ…..” என்றபடி இவள் முகம் பார்த்து கெஞ்சினாள்… இதற்குள் குழந்தை மீண்டுமாய் சிணுங்க தொடங்க…..

மனோ ஒரு தலையாட்டலுடன் இறங்கி வந்தாள் தரை தளத்திற்கு.

ந்த மகிபா விவாகரத்து….. இதில் மனோ புரிந்து வைத்திருக்கும் விதம் உண்மையில் சரிதானா????? விஜிலாவின் பேச்சில் பொய் இருப்பதாக தெரியவில்லையே….அவளது வலியும் தவிப்பும் உண்மையிலும் உண்மையாகத்தான் இருக்கிறது….. விஜிலா ஒன்றும் திட்டம் போட்டு இங்கு வந்திருக்கவும் வழி இல்லை….. வலுகட்டாயமாக இங்கு கூட்டி வந்தது இவளல்லவா? விஜிலாவின் வார்த்தைகள் இவளது புரிதலுக்கும் ஒத்துப் போகவில்லையே…..

நேற்று ஆஃபீஸில் இவளைப் பார்க்க தன் அறைக்கு வரச் சொன்னது மித்ரன் தான். ஆக அவன் அப்போது அவளை 7த் ஃப்ளோரில்தான் எதிர்பார்த்திருப்பான். இவள் தான் இடையில் ஒரு நிமிடம் போய் திரவியாவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என க்ரவ்ண்ட் ஃப்ளோரில் இருந்த இவர்ளது அறைக்குப் போனது. அங்கு திரவியா இல்லையெனவும் எதேச்சையாய் இவள் பக்கத்து காரிடாரில் எட்டிப் பார்க்கும் போது மித்ரன் அங்கு நின்றிருக்க அவன் லாயரிடமிருந்து டிவோர்ஸ் பத்தி கால்.

மேலும் அது மித்ரனின் சொந்த விவாகரத்து என்று இவள் உணர முடியாத படியான ஒருவகை  பேச்சு அது…..

இவள் அங்கு நிற்கிறாள் என்பது மித்ரனுக்கு தெரியாது……ஏன் இவளே முந்திய நொடி வரை அங்கு செல்லும் எண்ணத்தில் இலை தானே……ஆனால் வேறு யாரும்…ஏன் அந்த லாயருக்கே தெரிந்திருக்குமோ….??? இவள் அங்கு வரும் நேரம் பார்த்து அவனுக்கு அப்படி ஒரு கால்…. யோசித்துப் பார்த்தால் அது அவனது விவாகரத்து என்றே நினைக்கும்படியான ஒரு பேச்சு வார்த்தை….??!!!!!!

இப்படி  இவளை நினைக்க வைத்த விஷயம் இவளை தேடி வந்து சேர்ந்த அந்த டிவோர்ஃஸ் ஃபைல்.

அந்த விவாகரத்து ஃபைலைப் பார்க்கவும் முதலில் இவள் குழம்பி, பதறி, என்ன நினைக்க என புரியாமல்  தவித்தாலும் அவளுக்கு சட்டென புரிந்தது ஒன்று…..  அத்தனை பேர் மித்ரனை சூழ்ந்திருக்க…..ஏதோ உரிமையற்றவள் போல் விலகி உட்கார்ந்திருந்த இவளைத் தேடி எங்கிருந்து வந்து சேர்ந்ததாம் இந்த விவாகரத்து ஃபைல்…? அதுவும் மித்ரனின் அத்தனை பெர்சனல் டாக்குமென்ட்ஸுடன்….

டீடெய்ல்ஸ் வேணும்னா ஆஃபீஸ்ல வந்து வாங்கிக்கோங்க என மித்ரன் லாயரிடம் ஃபோனில் சொன்னான் தான்…..ஆக அவன் கையில் அந்த டாக்குமென்ட்ஸ் இருந்தது என வைத்துக் கொண்டாலும், யாராவது அப்படி டாகுமென்ட்ஸை ஆஃபீஸுக்கு தூக்கிகிட்டு அலைவாங்களாமான்றது அடுத்த விஷயம்…..

மித்ரன் கொண்டு வந்தான் என நினைத்துக் கொண்டாலும்…. தன் பேக்கை காருக்குள்ளேயே வைத்துவிட்டுப் போவது அவன் வழக்கம் என்பதை அவள் பார்த்திருக்கிறாள்…. தன் கார் சாவியைக் கொடுத்து அதிலிருந்து இந்த ஃபைலை யாரையோ மித்ரன் எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் தரச்சொன்னான் என யூகித்துக் கொண்டாலும்…..  அத்தனை தூரம் தன் பெர்சனல் பொருட்களில் மித்ரன் நம்பும் ஒரு நபர்…. காத்திருந்து கொடுக்க பொறுமையின்றி .ஃபைலை  இவளிடம் கொடுத்துவிட்டு போவாராமா? இவளது அனலிடிகல் ப்ரெய்ன் இப்படியாய் யோசித்துக் கொண்டிருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.