(Reading time: 25 - 50 minutes)

ப்போதுதான் அவன் தானிருந்த அறையை திறந்து கொண்டு அந்த அஃபீஷியல் நட்பு பட்டாளம் சூழ வெளியே வந்தான் மித்ரன். அவன் கண்கள் இவளைத் தேடி இவள் பாதுகாப்பை உறுதி செய்து அவன் மனதில் தோன்றும் நிம்மதியை விழிவெளியில் நடிப்பின்றி வெளிப் படுத்த அவனது இவள் மீதான அக்கறை உண்மை என்பது ஒரு பக்கம் இவளுக்குப் புரிந்தாலும்…. அவனைக் கண்டதும் அதுவாய் இவள் மனம் குடையாய் விரிந்தாலும்….

இவள் பார்வையில் படுகிறது  மித்ரன் அவனது கார் கீயை  pants இன் வலப்பக்க பெல்ட் லூப்பில் மாட்டி இருந்த காட்சி…… அவன் கம்பீரத்திற்கு அது இன்னும் கம்பீரம் சேர்க்கும் விஷயம்….

கார் கீயை அவன் எப்போதும் அப்படித்தான் வைத்திருப்பான் என்பதை இவள் முன்பே கவனித்திருக்கிறாள்……இப்பொழுதும் கார் கீ அவனிடம் இருக்க காரிலிருந்து ஃபைல் இவளிடம் வந்தது எப்படியாம்???

மற்றபடி தன் அண்ணனோட ஆஃபீஸ்ல அதுவும் ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக வந்திருக்கிற இடத்துல தன் பேக்கை கூட வேற எங்கயும் வைக்க விரும்பாத மித்ரன், இப்படி ஒரு பெர்சனல் ஃபைலை வேற எங்கயாவது கொண்டு வந்து வச்சிருக்க முடியுமா என்ன? ஆக எப்படி யோசித்துப் பார்த்தாலும் இந்த மித்ரன் டிவோர்ஸ்ன்ற ட்ராமாவை யாரோ எதுக்கோ செய்றாங்க….. மித்ரனுக்கு இன்னைக்கு பிறந்த நாள் இன்னைக்கு இதப் பத்தி பேச வேண்டாம்……

அதோட இந்த மித்ரனுக்கு டிவோர்ஸ்ன்ற விஷயம் தான் ட்ராமாவே தவிர மித்ரனுக்கு தெரிஞ்ச யாருக்கோ டிவோர்ஸ் ஆகுதுன்றது நிஜம்….. ஃபோன்ல மித்ரன் எதோ ஒரு டிவோர்ஸ் நடந்தா எனக்கென்னனு சொன்னான் தானே…..அதைப் பத்தி அவனுக்கு நிஜமாவே அக்கறையில்லை….. அதை இவள் மித்ரனை கவனிக்க சொல்ல வேண்டும்…..  குடும்பம்ன்றது ஒரு முக்கியமான விஷயம்னு அவனுக்கு தோணுற மாதிரியே இல்லையே….. அது நல்ல விஷயம் கிடையாதே… இதையெல்லாம் அவனிடம் பேச வேண்டும்…… மித்ரன் டிவோர்ஸ் டிராமவும் சரி ….. இந்த யாரோட டிவோர்ஸும் சரி…..கசப்பான விஷயம்…..உணர்வுகள் சம்பந்தப்படடது….இன்னைக்கு பேச வேண்டாம்….. ஒரு நாள்ல ஒன்னும் மாறிடாது ….நாளைக்கு பேசிக்கிடலாம்…. ஆனால் என்னதான் மித்ரன் டிவோர்ஸ்ன்றது ட்ராமான்னு தோணினாலும் அவன்ட்ட அதைப் பத்தி பேசாமா இவளோட யூகத்தை மட்டும் வச்சு மேரேஜுக்கு ஓகே சொல்றது சரி கிடையாது…… ஆக இன்னைக்கு இவங்க மேரேஜ் பேச்சையும் அவன் பேசாம இருந்தா நல்ல இருக்கும்…..அவன் பேசினாலும் இவள் பதில் சொல்ல டைம் கேட்க போகிறாள்தான்….. இப்படித்தான் மனோ அந்த நிமிஷம் முடிவு செய்தாள்.

ஆனாலும் அடுத்து நேராக இவளிடம் வந்த மித்ரன்….அடுத்துவர்கள் யாரையும் உள்ள அலவ் பண்ணாதீங்கன்னு ஜோசப்ட்ட சொல்லிட்டு இவளை அந்த கேபினுக்கு கூட்டிப் போய் பேசத் தொடங்கிய போது அவள் கண்கள் அவனது ஷர்டில் பதிந்த போதுதான் அவளுக்கு வேறு ஒரு விஷயமே உறைத்தது…..

து அவளது ஃபேவ் ஷர்ட்…. அவன் இதற்கு முன்னும் இதை போட்டிருக்கும் போதும் இவள் பார்த்திருக்கிறாள்…..இவள் மனதில் அவன் வரும் போதெல்லாம் பெரும்பாலும் இதில் தான் தரிசனம் தருவார் சார்….

இன்றும் அதே ஷர்ட்….அவன் இயல்பாய் கிளம்பி வந்திருக்கிறான்……பிறந்த நாள் என்ற எந்த ஸ்பெஷல் ஃபீலும் அவனுக்கு இல்லை…..பெர்த் டே கொண்டாடும் எந்த நோக்கமும் அவனுக்கு இருந்ததாக தோன்றவில்லை…. ஆனால் அவனது அண்ணனது ஆஃபீஸில் அது அறிவிக்கப் பட்டிருக்கிறது….. ஒவ்வொருவராய் வந்து வாழ்த்துகிறார்கள்…..அதுவும் இவன் இவளிடம் ப்ரபோஸ் செய்ய போற நேரம் வந்து கூட்டமா கூட்டிட்டுப் போய்ட்டாங்க…….

அடுத்து இவ கைல டிவோர்ஸ் ஃபைல் வந்து உட்காருது……

இதுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்??

அடுத்தும் மித்ரன் சொல்கிறான் பெர்த்டே லிஸ்ட்ல என் நேமையும் இன்க்ளூட் செய்துட்டாங்கன்னு…….அது வழக்கமா மார்னிங் வர்ற மெயில்….என்ன கொஞ்சம் லேட்டா வரும் ….. இன்னைக்கு சீக்கிரம் வந்திருக்குது…. அதுவும் ஹயர் அஃபீஷியல்ஸுக்கு பெர்சனலா இன்ஃபார்ம் ஆகி இருக்கனும்….அப்பதானே அவங்க இப்ப இங்க வந்து நிக்க முடியும்….. ஆக இவன் இன்னைக்கு ப்ரபோஸ் செய்றதை தடுக்கத்தான் இவ்ளவு ஏற்பாடுமா??

 மித்ரனை குறி வைக்கிறவங்களுக்கு மித்ரன் இவளிடம் இன்று ப்ரபோஸ் செய்யக் கூடாதுன்னா…… மித்ரன் இன்னைக்கு இவட்ட ப்ரபோஸ் செய்றது தான் சரி….. மித்ரன் பக்கம் கண்டிப்பா தப்பு இல்லை….எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு சாட்சியாவது வேணும்னு சொல்வாங்க…..இங்க இவனை குற்றவாளியா இவட்ட காமிக்க சதி நடக்குதுன்றதுக்கு இரண்டுக்கு மேலயே சாட்சி இருக்குது…..

ஆக மித்ரனிடம் அடுத்து அவளுக்கு அக்கறைதான் கூடியது……காதல் உள்ளமல்லவா இவளது…. அவன் பெர்த் டேயை அவனே கண்டுக்கலை…… அவன் குடும்பம் கூட அவனுக்கு நல்ல உறவு இருக்காதுன்னு ஒரு புரிதலும் இவளுக்கு இருக்கிறது தானே….யாராவது அவன் மீது அக்கறைப் பட்டிருப்பார்களா? ஒரே ஒருத்தராவது அவன உண்மையா இன்னைக்கு வாழ்த்திருப்பாங்களா? அவன் பிறந்த நாளை கூட அவனுக்கு எதிரா யூஸ் செய்யத்தான் ஆள் இருக்குது…… இன்னைக்காவது இவன் காலைல சாப்டானாமா?

மனம் அவன் பக்கமாக கனிந்து கொண்டு வர அதைக் கேட்டே விட்டாள்.

மித்ரனும் இதில் இவளது இந்தக் கேள்வியில் தான், அவனே மனதளவில் இந்த பெர்த்டே செலிப்ரேஷனுக்கு பிறகு அவள் மூடு சரி இல்லை…இன்னைக்கு ப்ரபோஸ் செய்ய வேண்டாம், என செய்து வைத்திருந்த முடிவை மாற்றி, தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த அந்த அறைக்கு அவளைக் கூட்டிப் போனான் என்பது கூட மனோவுக்கு அப்போது புரிந்தது தான். அதில் அவனை இன்னுமாய் பிடித்ததுதான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.