(Reading time: 25 - 50 minutes)

வனுக்கு எதிரா இருக்றவங்க இன்னைக்கு இவன் இவட்ட ப்ரபோஸ் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறாங்கன்னு புரிஞ்ச பிறகுதான் அவள் அவனது ப்ரபோசலை ஏற்றுக் கொண்டதும்…..

ஆனால் இப்போது விஜிலா சொல்வதைப் பார்க்கும் போது இவளது புரிதல் எவ்வளவு சரி என்ற  அடிப்படையையே அடிக்கும் கேள்வி வருகிறதே….. அஸ்திவாரமே ஆடிப் போகிறதே….. மித்ரன் இவளை கல்யாணம் செய்றது யாருக்கோ பிடிக்கலைனுதான் இந்த டிவோர்ஸ் டிராமான்னு இவள் நினைத்தது….. ஆனால் இவள் மித்ரனை பார்க்கும் முன்பாக கூட அவனது வீட்டில் இதே ப்ரச்சனை இருந்திருக்கிறதே…..அதுவும் ஒரு தடவை ரெண்டு தடவைனு இல்லாம…..அப்பப்ப இப்டித்தான்னு விஜிலா சொல்ற அளவுக்கு….. அப்போ யார் எதுக்காக அவ்வளவு தடவை ட்ராமா போட்றுக்கனும்…. ஏன்?

சொந்த அம்மாவே மகனை இப்படி சொல்ற அளவுக்கு அவங்களுக்குள்ள என்ன? எல்லாம் ட்ராமான்னா மித்ரன் ஏன் அவனோட அம்மாட்ட இதெல்லாம் பத்தி பேசலை?

அவனோட அம்மா மோசம்னு எடுத்தா….அவர் மூத்த மகன்ட்ட நல்லாத்தான் இருந்திருக்கிறார்…….விஜிலா சொல்றதை வச்சுப் பார்க்கும் போதும் அப்படித்தான் இருக்குது….. மித்ரனை மட்டும் காரணமில்லாம பிடிக்காம போகுமா? உண்மையில் மித்ரனை எதுக்குப் பிடிக்கலை? இவன் என்ன செய்தான்?

பூனம் கிருபாகரன் நிகழ்ச்சியையும்…..இவளிடம் மித்ரன் நடந்து கொள்ளும் விதத்தையும் தவிர வேறு எல்லா விஷயமும் மித்ரனுக்கு எதிராகத்தானே நிற்கிறது!!!!!! ஏன்?????????

இந்த வர்ஷன் ஒரு வேளை ப்ராப்பர்ட்டிகாக ட்ராமா ஆடிட்டு இருப்பானோ? அம்மாவுக்கு அடுத்த மகனை பிடிக்கலைனா எல்லாம் தனக்கு வந்துடும்ன்ற மாதிரி…. அவன் தன் சொந்த வைஃபையே ஒழுங்கா நடத்தலை அதனால அவன் தம்பிட்ட மட்டும் நியாயமா நடந்துப்பான்னு நினைக்க முடியாதுதான்…. ஆனால் இதெல்லாமே இவளது ஆதாரமில்லாத யூகம் தானே…...இதுக்கெல்லாம் மித்ரன்ட்ட என்ன பதில் இருக்கும்??

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்…… போய் மித்ரனிடம் அனைத்தையும் பேசிவிடுவது தான் நல்லது…..

டகடவென ஒரு சல்வாரில் கிளம்பி தயாரானவளை அழைத்துப் போக வந்து நின்றது அவளுக்காய் மித்ரன் ஏற்பாடு செய்திருக்கும் கார் அவளுக்கான செக்யூரிடி ஆஃபீஸர் ஜோசப்புடன்.

ஆஃபீஸை அடையவும் மித்ரனிடமிருந்து அழைப்பு….. “வர்ஷன் ரூம்க்கு வந்துடு மனு”

லிஃப்டில் இவளும் ஜோசஃப்பும் ……. மித்ரனிடம் பேச வேண்டிய ஒவ்வொன்றும் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது இவளுக்கு….

அந்த ஃப்ளோரில் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தாள்….. இந்த தளம் முழுவதுமே சி இ ஓ க்கு உடையது என்பதால் யாரும் இல்லை. அவன் சொல்லும் அறை எது என்பது இவளுக்கு தெரியுமே முதல் நாள் அவனைப் பார்த்துவிட்டு திரும்பி ஓடி வந்த அறை…. ஜோசஃப் இதற்கு மேல் இவளுடன் தொடராமல் நின்று கொண்டான்.

எதிரில் தெரிந்த அந்த கதவை தட்ட……”வா மனு”  என்றபடி கதவை திறந்தது மித்ரன். லைட் ப்ளூ ஷர்டிற்கு மேல் ஃபார்மல் வெயிஸ்ட் கோட் வெண்ணிறத்தில்… ஃபுல் ஸ்லீவை ஓரளவு மடக்கி வேறு விட்டிருந்தான்….. இன்ஃபார்மலாய் ஒரு ஃபார்மல் லுக்…. முரட்டுத்தனமான ஒரு மென் வசீகரம்…. அசையாமல் இவளுக்குள் அலை செய்ய இவனால் மாத்திரம் முடிகிறது…..

சின்னதாய் அவனைப் பார்த்து ஒரு புன்னகை இவள் புறம். அவன் கண்ணில் அதை ஏற்றி ப்ரதிபலித்தான். கண்ணால மட்டுமாய் சிரிக்க தெரிகிறதா என்ன இவனுக்கு?

“உட்கார் மனு…” அங்கிருந்த டேபிளுக்கு எதிரில் கிடந்த நாற்காலியைக் காண்பித்தவன் அதற்கு நேர் எதிர் புறமாக கிடந்த சி இ ஓ இருக்கையில் போய் அமர்ந்தான்.

அறையை சுற்றி பார்வையை ஓடவிட்டபடி அவன் காட்டிய நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் மனோஹரி. அறையின் வலப்புறம் சுவரில் ஓரு பெரிய வட்ட வடிவ ட்ரோபி வைக்கப்பட்டிருக்கிறது .அதை தவிர எதுவுமில்லை….

அடுத்து அவனுக்கு பின்னாக இருப்பது முழுக்கவும் கண்ணாடியிலான புத்தக ஷெல்ஃப்…. அந்த நீள சுவர் முழுவதும் கண்ணாடி ரேக்கில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் வித வித புத்தகங்கள்….இல்லை சுவர் முழுவதும் இல்லை….அந்த ஷெல்ஃபின் இட ஓரத்தில் ஒரு மூடிய கதவு தெரிகிறது…ரெஃஸ்ட் ரூம் போலும்…. வலப்பக்க சுவரை முழுவதுமாக மறைத்திருக்கிறது அந்த திக் கர்டெய்ன்…… அப்படின்னா அது சுவரில்லையோ…… ?

“ரூம் எப்டி இருக்கு?” இதற்குள் அவன் கேள்வியில் தன் கவனத்தை அவன் மீது கொண்டு வந்தாள் இவள்.

“ம்….” திரும்பவும் முதலில் காண்பித்த புன்னகை… இதுவா இப்ப பேச வேண்டிய விஷயம்….?

“சரி ஒரு முக்கியமான விஷயம் பேசனும் மனு….. நம்ம மேரேஜை உடனே வச்சுகலாம்னு நினைக்கிறேன்….நெக்‌ஸ்ட் வீக்னாலும் ஓகே…. அரேஞ்ச்மென்ட்ஸ்லாம் ஆராம்பிச்சுட்டேன்…” அவன் சொல்லிக் கொண்டு போக இவளுக்குள் ஒரு எரிச்சல் முனுக்கிடுகிறது …

இத்தனை நடந்திருக்கிறது…… இவளிடம் எதற்கும் எந்த விளக்கமும் சொல்லாமல் இது என்ன வேலை?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.