(Reading time: 25 - 50 minutes)

வள் அதில் உருண்டு தன்னை சமாளித்து கட்டிலின் அடுத்த  புறமாக இறங்கி கதவை நோக்கி ஓடி வரும் முன்….கதவின் அருகில் இருந்தவன் கதவை உள்ளிருந்து சாவியால் பூட்டி…அந்த சாவியை கதவிற்கு அருகிலிருந்த சுவரில் பதிந்திருந்த வாலட்டில் வைத்து……அதிலிருந்த எலக்ட்ரானிக் பட்டன்கள் சிலவற்றை தட்டி லாக் செய்திருந்தான்.

“மித்ரன் என்ன செய்றீங்க நீங்க….?.....நீங்க செய்றது கொஞ்சமும் சரி இல்லை…. கதவை திறங்க முதல்ல….…” நடப்பதை நம்பவும் முடியாமல் தவிப்பை தாங்கவும் முடியாமல் ஆரம்பித்தவள் நிஜம் புரிய கர்ஜித்தாள்…

“எனக்கு நீ வேணும் மனு….”

“ஷட் அப்…” அவனை தாண்டிப் போய் கதவை வேக வேகமாக தட்டினாள்…. “ஜோசப்……ஜோசப் சார்….” எப்படியும் அறைக்கு ஓரளவு பக்கத்தில் தானே நின்றிருப்பார் அந்த ஜோசப்….. ஆனால் இவளது எந்த கத்தலுக்கும் பதிலும் பலனும் பூஜ்யம்….

அவசர அவசரமாக தன் மொபைலை தேடினாள்….. தூக்கி வந்தவன் இவளை மொத்தமாகத்தானே சுருட்டி அள்ளி வந்தான்….. கட்டிலில் விழுந்து கிடந்தது அது. அவனை எங்கே? பேக்கை எடுக்க விடுவானா? பாய்ந்து பிடுங்குவானா?

இப்பொழுது அறையை சுற்றி பார்வையை ஓடவிட்டாள். அளவுக்கு மீறிய பெரிய அறை அது…. சாதாரண அறை போலும் அது இல்லை…. அவனோ கட்டிலுக்கு நேர் எதிரில் இருந்த சுவரில் அமர்ந்திருந்த டீவியை ஆன் செய்து கொண்டே அவனது மொபைலை குடைந்து கொண்டிருந்தான்….

வேகமாக போய் அவள் தன் பேக்கை எடுத்தாள்….

“மனு….. அகதனுக்கு கால் பண்றதுக்கு முன்ன முதல்ல இதைப் பாரு….” மித்ரனின் சத்தம்..

அவனுக்கு கீழ்படியும் எண்ணமே இல்லை என்றாலும் பார்வை அதாக அவனிருந்த புறம் திரும்ப, அங்கிருந்த டீவியில் தெரிவது அகதன்….. குப்புற விழுந்து கிடக்கிறான் அவன்…..

வாட்…? ஐயோ!!!!!

அரண்டு போய் இவள் டீவியை நோக்கி ஓட…. அவள் கையைப் பற்றி மித்ரன் இழுத்து நிறுத்த….. அகதன் மூச்சில் அவன் உடல் ஏறி இறங்குவதில் போய் நிற்கிறது இவளது பார்வை…

:”ஒன்னும் ப்ரச்சனை இல்லை…..நம்ம மேரேஜ் வரைக்கும் அவர் அங்க தான்……யாரும் எந்த தொந்தரவும் செய்ய மாட்டாங்க….. பாரு அந்த ரூமோட கீ என்ட்ட”

கையில் ஒரு கீயை எடுத்து காண்பிகிறான் மித்ரன்….

பாய்ந்து அதைப் பிடுங்குகிறாள் இவள்…. உயிர் வரை வெறி….

“வச்சுக்கோ நோ ப்ராப்ஸ்…உன்ட்டயே இருக்கட்டும்….பத்ரமா இருக்கும்…..மேரேஜுக்கு பிறகு உன்னையவே கூட்டிட்டு போறேன்…..நீயே திறந்து விடு….. நம்ம வெட்டிங்க பார்க்க முடியாட்டாலும்….உன்னை கல்யாண கோலத்தில பார்க்க உண்மையிலே சந்தோஷப் படுவார் தானே…..பாசாக்கார அண்ணனாச்சே…”

“மித்ரன் கொன்னுடுவேன் நான்….இப்ப என்னை அவன்ட்ட கூட்டிட்டுப் போறீங்களா இல்லையா…..”

“ஒன்லி ஆஃப்டர் அவர் வெட்டிங்…..”

போய் கட்டிலில் தன் தலைக்கு பின்னாக கைகளை கட்டிக் கொண்டு படுத்துவிட்டான் இவன்.

டீவியில் தெரிந்த அகதனை திரும்பவும் பார்த்தாள் இவள்…. அவன் இருப்பது ஒரு எட்டுக்கு எட்டு எனும் அளவிலான அறையாய் இருக்கும்….உள்ளே குடிக்க தண்ணீர் கூட இல்லை….

சுற்று முற்றும் அலை பாய்கிறது இவள் கண்கள்…..என்ன செய்ய வேண்டும்? எது கிடைக்கும் இவள் கைக்கு? எப்படி உதவ அகதனுக்கு…… ஒன்றும் புரியாமல்….எதுவும் இயலாமல் பத்தி வந்த ஆத்திரத்தில் படுத்திருந்தவன் சட்டைக் காலரைப் பற்றி கன்னத்தில் வைத்தாள் ஒன்று….

 “உயிர் போனாலும்……” இவள் ஆங்காரமும் அழுகையுமாய் ஆரம்பிக்க….

“தண்ணி………தண்ணி….” அகதனின் குரல்….. டீவியை திரும்பிப் பார்த்தாள்…..அவன் முனகிக் கொண்டு அசைவது தெரிகிறது.

சட்டென தன் கையை மித்ரன் காலரிலிருந்து எடுத்துவிட்டாள். தன் கண்களை துடைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் கொந்தளிக்கிறதுதான்……ஆனால் சண்டை போடும் நேரம் இதுவல்ல…..

“இப்ப என்ன? எங்க மேரேஜ்? எல்லா அரேஞ்மென்ட்டும் செய்திட்டீங்களா?” முகம் பாறையாக இருந்தது அவளுக்கு.

தொடரும்!

Episode # 08

Episode # 10

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.