(Reading time: 38 - 76 minutes)

க மனோவின் அம்மாவிடம் “ஆன்டி குழந்தை தூங்குறான் ஆன்டி…..நான் பக்கதுல சின்னதா வாக் போய்ட்டு வந்துடுறேனே ப்ளீஸ் “ என்றபடி போய் நின்றாள்.

இப்போதும் மனோ அம்மாவுக்கு ஆச்சர்யமே….யார் பார்வையிலும் பட்டுவிடக் கூடாது என்பது போல் அடைந்து கிடந்தவளிடம் இது நல்ல மாற்றம் தான்.

“அதுக்கென்னமா போய்ட்டு வா….ஆனா கவனமா இருமா….பக்கத்திலேயே போ…” அவர் அனுமதி அளிக்க இவள் வீட்டின் படி இறங்கி…..காம்பவ்ண்டில் இருந்த கேட்டைப் பார்த்துப் போனாள். சுற்றும் முற்றும் பார்த்தபடி இவள் கேட்டை திறக்க….என்னமோ மித்ரன் ஆள் வச்சிருக்கேன் பிடிச்சுட்டு போகன்னு சொன்ன பூச்சாண்டிக்கு பயந்து இவ ஏன் அடஞ்சு கிடக்கனும்….?

இவள் கேட்டை திறந்து வெளியே காலடி எடுத்து வைத்த நொடி கண்ணில் படுகிறான் எதிரிலிருந்த இருட்டிலிருந்து வெளிப்பட்ட ஒருவன். அருகில் இருந்த டெலிபோன் போஃஸ்ட்டில் வந்து சாய்ந்து கொள்கிறான்.

“உள்ள தான இருக்க சொல்லிச்சு…? இங்க என்ன வேலை?” என்றபடி

ஒரு கணம் அவனை ஏற இறங்க பார்த்தாள் இவள்….அவன் உயரம் ஃபிட்னெஸ் அவன்ட்ட சண்டை போட்டு எதுவும் ஆகப் போறதில்லை…..இவளால இவன் கூட இப்டி நேரடியா மோத முடியாது….. இப்ப வேற திட்டம் போடனும் இவ…. அப்ப மித்ரன் சொன்னபடி இவளை அடச்சு வச்சு காவலுக்கு ஆள் போட்றுக்கான் தான்….

வீட்டின் காம்பவ்ண்டிற்குள்ளயே சிறிது நடை போட்டவள் வீட்டிற்குள் வந்துவிட்டாள். ‘எப்படி இன்பாவை காண்டாக்ட் செய்ய????’

இப்போழுது ஏர்போர்ட்டிலிருந்து மனோவின் அப்பாவும் திரும்பி வர….அவர் மனோ கிளம்பி சென்ற விதத்தை தன் மனைவிக்கு வர்ணிக்க, கேட்டிருந்த  விஜிலாவுக்குள் ஒரு வகை நிம்மதி. எப்படியும் மித்ரன் மனோ கூட போகலை….சோ இன்னும் நேரம் இருக்கு இவளுக்கு மனோவை காப்பாத்த…. ஆனாலும் இந்த மித்ரன் கொஞ்சம் வித்யாசம்தான்……மனோவை எதுக்கு கடத்துறான்?

மனோ வீட்ல எப்டியும் மேரேஜ் செய்து கொடுக்கேன்னு தான் சொல்றாங்க…… மேரேஜ் மித்ரன் நோக்கமா இல்லைனா மனோவை இப்ப அவன் மும்பைக்கு தனியா அனுப்பி இருக்க அவசியம் இல்லை….மேரேஜ் தான் நோக்கம்னா…….மனோ அப்பா அம்மாட்ட இவன் போடுற நல்ல பையன் வேஷத்தை மனோட்டயும் போட்டு கல்யாணம் செய்துறுக்கலாமே?? ஒரு கணம் ஒரே ஒரு கணம் மித்ரன் பக்கம் எதுவும் நல்லது இருக்குமோ என இவளுக்கு தோன்றுகிறது..

சே அறிவே இல்ல உனக்கு……அகதன் சொன்னதை வச்சுதானே மானோ வீட்ல எல்லோரும் மித்ரனை நம்புறாங்க…..அகதனை அடச்சி வச்சு மிரட்ட போய்தான அவர் மித்ரனைப் பத்தி நல்லதா சொல்றார்…. ஆனா தன் உயிரை காப்பாத்த தங்கச்சிய உயிரோட பலி கொடுக்ற டைப்பா அகதன்????

நம்ப முடியலை தான்…… ஆனா இவ தன் அண்ணனையும் பார்த்திருக்கிறாளே…..அவன் கல்யாணத்துக்கு பிறகு எப்டி மாறிப் போய்ட்டான் அவன்?......ஆம்ப்ளைங்க யாரை நம்ப? ஒரு வகையில் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறுன மட்டை தான் போல…..

ஆனா மனோவுமே தன் அண்ணனை காப்பாத்த இதுக்கு எப்டி ஒத்துப்பா? ஒரு வேளை அவட்ட வேற ப்ளான் எதுவும் இருக்குமோ? எப்டியும் ஷி வில் பை டைம்…அதுக்குள்ள இவ மனோவுக்கு ஹெல்ப் பண்ணி ஆகனும்…

ஆக அன்று இரவு இப்படி ஒரு முடிவில் கழிந்தது விஜிலாவுக்கு…..

இதில் அன்று இரவு மனோ தன் அம்மா அப்பாவிடம் இயல்பாய் பேசியதை கேட்கவும் இவள் மனதுக்குள் ஒருவகையில் நிம்மதி…. மனோ பாதுகாப்பாதான் இருக்கா….. மித்ரன் நிஜமாவே மேரேஜை தான் எய்ம் செய்றான் போல…..இப்டி ஒரு காதலா? வர்ஷன் சொல்றது போல அடிப்படையில் மித்ரன் நல்லவன் தானோ…..வளர்ப்பு தான் அவனுக்கு சரியா அமையலையோ??? ஆனா அதுக்காகல்லாம் மனோ லைஃபை பலியாக்க முடியுமா….? நாளைக்கு இதே மித்ரனுக்கு அவன் அண்ணன் போலயே இந்த வைஃப் வேண்டாம் அடுத்த பொண்ணு வேணும்னு தோணுமே அப்ப என்ன செய்ய? மித்ரன் வர்ஷனுக்கும் மேல…. ஏற்கனவே ஒரு டிவோர்ஸ் இருக்கே அவனுக்கு…

எது எப்டியோ இன்னைக்கு இன்பாவை இவள் கான்டாக்ட் செய்தே ஆக வேண்டும்….

 ஆக மறு நாள் அதாவது மனோ மும்பை கிளம்பிச் சென்ற மறுநாள் காலை….மனோ அப்பாவிடம் போய் நின்றாள் விஜிலா. “அங்கிள் எனக்கு ஒரு கால் செய்யனும் அங்கிள்….. நேத்து ஆன்டி மொபைல்ல இருந்து ட்ரை பண்ணினேன்…..அவுட் கோயிங் இல்லை …உங்க மொபைல்ல இருந்து பண்ணலாமா ப்ளீஸ்” என்றபடி…

கேட்டிருந்த மனோ அம்மாவோ….”அப்டியாமா நேத்து பண்ண முடியலையா…? நான் பொதுவா யாருக்கும் போன் செய்றது இல்லைமா….. இவங்க மூனு பேரும் தான் எனக்கு கூப்டுவாங்க….அதான் எனக்கு தெரியலை போல….என்னங்க அகி அப்பா உங்க மொபைல்ல எல்லாம் சரியாதான இருக்கு….” என இயல்பாய் சொல்லியபடி தன் கணவரின் மொபைலை எடுத்துக் கொண்டு வந்து விஜிலாவிடம் நீட்டினார் அவர்….

“ரூம்ல போய் பேசிட்டு வந்து தாம்மா” என்ற இன்ஸ்ட்ரெக்க்ஷனோடு…

விஜிலா அளது கணவனுடன் பேசினால் அவள் ப்ரச்சனைக்கு முடிவு வரலாம் என்பது அவரது நம்பிக்கை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.