(Reading time: 38 - 76 minutes)

ப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும் என இவளுக்கு தெரியவில்லை….இவள் அறிந்த வரை இன்பா இந்நேரம் கண்டிப்பா தூங்கி இருப்பாங்க….

சட்டென தோன்ற….அவசர அவசரமாக மொபைலில் இருந்து சிம்மை பிரித்து எடுத்து அதன் எண்ணை குறித்துக் கொண்டு….பின்னால இது யார் இப்டி இவளுக்கு உதவுறாங்கன்னு கண்டு பிடிக்க உதவுமே…..

பிறகு மொபைலில் இன்பாவிற்கு அழைக்க எண்ணினாள். முயன்று பார்க்கனும் கண்டிப்பா….…. தூங்கும் போது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைப்பது இன்பாவின் வழக்கம். ஆன்ல இருந்தா அதிர்ஷ்டம்.

இவள் அழைக்க போன நொடி திடும் என ஒரு பயம்…..இந்த மொபைல் அனுப்பினவனுக்கு இவள் யாரை அழைத்தாள் என தெரிந்து கொள்ளமுடியும் தானே…அப்றம் அவன் இன்பாவை தொந்தரவு செய்தா????

இப்பொழுது இவள் என்ன செய்யவென தெரியாமல் முழித்துக்  கொண்டு நிற்க….. கீழே வீட்டிறு வெளியே எதோ சர சர கச டொம்…ஷ்….விஷ்க் என சத்தங்கள்…… “அண்ணி குட்டிப்பையனை எடுத்துட்டு தரையில படுங்க” என்ற மித்ரனின் சத்தம் பலமாக காதில் கேட்டது இவளுக்கு….

இப்பொழுது மித்ரன் நல்லவனா கெட்டவனா என அதையும் யோசிக்க தோணவில்லை இவளுக்கு….குழந்தையை அள்ளி எடுத்தபடி தரையோடு தரையாக பம்மினாள் விஜிலா……மீண்டும் மித்ரன் இவள் எதிரில் வந்து நின்று “இப்ப ஒன்னும் ப்ராப்ளம் இல்லை அண்ணி….கல்ப்ரிட்ட அரெஸ்ட் செய்துட்டோம்” என சொல்லும் வரையும் இவள் எழுந்திருக்கவே இல்லை…. 

காண்பது கனவா? இல்லை நிஜம் தானா? கண்ணை கசக்கிவிட்டு மனோகரி பார்க்க…. “நான் தான் மகி….. நைட்டே வந்துட்டேன்…. நீ தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பலை…..”

படுக்கையிலிருந்து மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.

“இப்பவும் தூக்கம் வந்தா தூங்கு மகி…..இன்னைக்கு உனக்கு எந்த வேலையும் இல்லையாம்…..இன்ஃபேக்ட் இங்க எல்லா வேலையும் முடிஞ்சுட்டாம்….சோ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு…..”

சுற்று முற்றும் தேடிப் பார்த்தவள் கட்டில் அருகில் கிடந்த தன்  ஸ்லிப்பரை மாட்டிக் கொண்டாள்.

 “அம்மாட்ட பேசினேன் அவங்க சொன்னாங்க இப்ப அவள நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு…..அப்பதான் வெட்டிங் அப்ப பார்க்க ஃப்ரெஷ்ஷா இருப்பான்னு….”

கட்டிலில் இருந்து இறங்கிப் போய்  தான் மடித்து வைத்திருந்த டவலை எடுத்துக் கொண்டாள்.

“ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு……ப்ரெஷ் பண்ணிட்டு வந்து குடிக்கிறியா?”

போய் பாத்ரூமிற்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டாள்.

அவள் ப்ரெஷ் செய்து முகம் கழுவி மீண்டும் வெளியே வரும் போதும் அங்கே அவள் முகத்தை எதிர் பார்த்து அவன்.

“நீ இன்னும் போகலையா…..ஒழுங்கு மரியாதையா போய்டு சொல்லிட்டேன்…” வெடித்தாள் அவள்.

“என்ன மகி நீ….அதான்…”

அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க விடவில்லை இவள்.

“அகி இதுக்கு மேல எனக்கு பொறுமை இருக்காது பேசாம போயிடு சொல்லிட்டேன்….”  அவள் கொந்தளிப்பை தனக்குள் அடக்குவது அகதனுக்கு புரிகிறது தானே

“அதான் எல்லாம் ட்ராமான்னு முதல்லயே உன்ட்ட ஹிண்ட் கொடுக்கதான செய்தோம் மகி குட்டி…..அப்றம் என்னடா இதுக்கெல்லாம்…..” கெஞ்சலும் ஆறுதலுமாய் அவன் குரல் இறங்கி வந்திருந்தது. இப்பொழுதும் மனோ இடையிட்டாள்….

“வர்ற கோபத்துக்கு கொல்லப் போறேன் பாரு…. ஹிண்ட் கொடுத்தியா….எங்க உன் மாப்ளைக்கு இன்னும் நாலு அடி விழுந்துடும்கிற பயத்துல நீ எல்லாம் ட்ராமான்னு காமிச்ச…..எனக்காகவா காமிச்ச….?” இதுவரை கொதித்துக் கொண்டு வந்த குரல்

“ இன்னைக்கு வந்த அவர் உனக்கு முக்கியமா போய்ட்டார்…..நான் உனக்கு ரெண்டாம் பட்சம் ஆகிட்டேன் என்ன?...போ….போய் அவர் கூடவே இருந்துக்கோ…என்ட்ட பேசாதே….” என அவள் தொடர்ந்த போது இறங்கிக் கொண்டு போய்… இப்பொழுது அவளையும் மீறி அவள் கண்களில் நீர் துளிர்க்கிறது…

மூச்சு முட்டும் முழு கோபமும் நீராடும் கண்ணுமாய் தங்கையை பார்க்க கரைந்து கொண்டு போகிறது அகதனுக்குள்….

“அறிவு…. அவருக்காகத்தான் எல்லாம் செய்தேனா நான்….அப்டின்னு நீ நிஜமா நினைக்கிறியா….உனக்காக இல்லையாமா?..... ” சொல்லியபடி இவள் அருகில் வந்து இவள் கண்ணில் வழியும் நீரை அவன் துடைக்க…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.