(Reading time: 38 - 76 minutes)

க மனோ அப்பாவின் மொபைலோடு விஜிலா மாடி வந்து சேர்ந்தாள். அதிலும் அவ்ட் கோயிங் பார்ட்….

இதை கிட்டதட்ட எதிர் பார்த்தாள் தான் விஜிலா. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்த்துவிட வேண்டும் என செய்திருந்தாள்….

இப்போ ப்ளான் பி…. வீட்டு வாசல் வழியா நேரே போனாதான அந்த கிரிமினல் குண்டாஸ் இவளைப் பிடிக்க முடியும்…..? யார் கண்ணிலும் படாமல் வெளிய போக திட்டமிட்டாள் விஜிலா…. எப்படியும் இன்னும் ஒரு தெருவுக்குள்ளயாவது ஏதாவது கடை இருக்கும்…..அங்க போய் கெஞ்சி கூத்தாடியாவது இன்பாக்கு கால் செய்துட்டா போதும்….

ஆக இந்த முறை பம்மி பம்மி வீட்டின் பின் வாசல் வழியாக வெளியே போய்…..அந்த பகுதி காம்பவ்ண்ட் சுவரை ஒட்டி கட்டியிருந்த டாய்லெட் ரூமின் சுவர் மறைவில், காம்வண்ட் வால் மீது ஏறி…. வெளிப் புறமாக குதித்தாள் விஜிலா. அது அடுத்த வீடு

நல்லவேளை யாருமே இல்லை…. சுற்று முற்றும் பார்த்தாள்….வீட்டில் ஆள் இல்லை போலும்… இருந்தாலும் கவனமாக அங்கிருந்த செடி மறைவில் பதுங்கி பதுங்கி அந்த வீட்டின் முன் பகுதியை நோக்கிப் போனாள்….அதன் முன் புற கதவு இருக்கும் ரோடிற்கு போய்ட்டா கடை இருக்குமே…… அந்த வீட்டு முன் புற கேட்டில் நின்றிருந்தான் இன்னொருவன்……நேற்று நைட் இவள் பார்த்த அந்த அவனைப் போலவே இவனும்….

“வந்த வழியா திரும்பிப் போகனும்னு இல்லை….வீட்டோட முன் வாசல் வழியா போனா போதும்” என்றபடி

கட கடவென மீண்டுமாக வீட்டிற்கு வந்து விட்டாள் இவள். தப்பு இவளோடது தான்….. பகல்ங்க போய் கண்டு பிடிச்சுட்டான் போல….நைட் வரைக்கும் காத்திருக்கிறது தான் சரியா வரும்…. அப்டி எத்தனை பேரை போட்றுக்க முடியும் மித்ரனால…? மனோக்கு எப்படியும் இன்னையோட சேர்த்து ஆறு நாள் டைம் இருக்குதே…

அன்று மாலை ஒரு ஏழு மணி இருக்கும். அப்போது தான் அது நடந்தது. இவளது மாடி அறை ஜன்னலின்  மர சட்டத்தில்  ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க் என்ற சத்தத்தில் வந்த ஏதோ ஒன்று  சரக் என்ற படி குத்தி நின்றது…

எதிர் பாரா இந்நிகழ்வில் இவளுக்கு ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டாலும்…..மூச்சு நின்று மீண்டுமாய் பிறந்தாலும்….. மெல்லப் போய் அது என்ன எனப் பார்த்தாள்….. அது ஒரு விதத்தில் அம்பு போல் இருந்தது……இதை எங்கேயோ பார்த்திருக்கிறாள்….

ஓ கடல்ல சுறா….திமிங்கலம் போல பெரிய மீன்களை உயிரோட பிடிக்க அதாவது மயக்க மருந்து கொடுக்க இது மாதிரி கன் யூஸ் செய்வாங்க…. தூரத்திலிருந்து ஷூட் பண்ணதும் அதோட அம்பு போய் அந்த ஃபிஷ் மேல குத்தி மருந்தை இஞ்செக்ட் செய்திடும்…….

இப்பொழுது இங்கு இந்த குத்தி நிற்கும் அம்பிலிருந்து தொங்குகிறது ஒரு திக் அட்டை… கயிறில் கட்டி இணைக்கப் படிருக்கிறது அது அந்த அம்போடு…

மெல்ல ஜன்னலை திறந்து அந்த அம்பை எடுத்துப் பார்த்தாள்…….சுற்று முற்றும் யாராவது பார்க்கிறார்களா என பார்வையை சுழற்றியபடி…. ஒருவருமில்லை…..

அந்த அம்பை இவள் பலத்தில் ஜன்னலில் இருந்து உருவவும் முடியவில்லை….

சோ கஷ்டபட்டு அந்த கயிற்றில் ஆடிய அட்டையை வெட்டி எடுத்தாள்….

அது உண்மையில் அட்டை இல்லை…..ஒரு தடிமனான கவர்…..உள்ளே கடிதம்….. பிரித்துப் படித்துப் பார்த்தாள்…..உனக்கு உதவ நான் தயாரா இருக்கேன்…..வீட்டை விட்டு வெளிய வரதான ட்ரைப் பண்ற….அதுக்கு இந்த ஏற்பாடெல்லாம் செய்து வச்சிறுக்கேன்…..வா….. என அவள் ரகசியமாக வெளியேற செய்யப் பட்டிருந்த ஏற்பாடுகளை பட்டியலிட்டது அது…. எத்தனை மணிக்கு இதை செயல் படுத்த வேண்டும் என்றும் சொன்னது அது…..

நீ யாரை சந்திக்க நினச்சாலும் அதுக்கு நான் உதவுறேன்….….என்று முடிந்தது கடிதம்…

இவளுக்கு இதை இந்த கடிதத்தை எப்படி எடுத்துக் கொள்ளவென தெரியவில்லை….. இதை ஏன் நம்பனும் இவள்? இதில் இவளுக்கு என்னென்ன ஆபத்து இருக்கிறதோ? குழந்தையை இங்கு விட்டுவிட்டு யார் என்றே தெரியாத இந்த முகமில்லா கடித்தகாரனுடன் செல்வதா? ஆனால் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடவும் மனம் இல்லை….இவளுக்கு தேவை ஒரு பேலன்ஸ் உள்ள வொர்க்கிங் சிம் கார்டுதான்….அதை அனுப்பி இருந்தாலே போதும்…. இப்போ இவ என்ன செய்யனும்….?

‘உன்னை நான் ஏன் நம்பனும் ?’……அதோட எனக்கு தேவை ஒரு ஆக்டிவேட்டட் சிம்கார்ட் மட்டும்தான்’ என ஒரு காகிதத்தில் எழுதி…. இவள் சாப்பிடுவதற்காக அறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த ஆப்பிளை அந்த காகிதத்தில் பொதிந்து அம்பு நின்ற விதத்தை வைத்து அது எந்த திசையிலிருந்து வந்திருக்கும் என தோராயமாக யூகித்து வீசி வைத்தாள்…..

அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருந்தாள்….வெகு நேரம் எதுவுமே நடக்கவில்லை…

நேரம்  விரயமாகிறது என்று ஒருபக்கம் தவிப்பாய் இருக்கிறது என்றால் இப்படி யார் யாரோ இந்த வீடை சுற்றிக் கொண்டிருக்கும் நேரம் இவள் எந்த நம்பிக்கையில் வெளியே போவதாம்? கையை பிசைந்த படி இவள் அறைக்குள் அங்குமிங்கும் நடக்க….. 11 மணி அளவில் இப்போது இன்னொரு விஷ்க்….சரக்…..

அடுத்த அம்பில் வந்து சேர்ந்திருந்த கவரில் இருந்தது ஒரு மொபைல்….. இப்பவே பேசிட்டு இப்பவே மொபைலை திருப்பி அனுப்பு…இல்லைனா உனக்கு ஆபத்து என்ற செய்தியோடு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.