(Reading time: 38 - 76 minutes)

னால் பின்பும் ஏன் இன்று இங்கு வரச் சொல்லி இருக்கிறானாம்? அதுவும் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என….. எதுவாக இருந்தாலும் வெளியே எங்காவது சென்று தான் பேச வேண்டும் என்ற முடிவுடன்தான் அந்த அறைக்குள் நுழைந்தாள் இவள்….

அவனோ  இவள் உள்ளே நுழையவும் நம்ம மேரேஜுக்கு அரேஞ்ச்மென்ட் செய்ய ஆரம்பிச்சுட்டேன் என தொடங்கியதும் இவளுக்கு எரிச்சலாகிப் போனது….அதன்ன விளக்கம் சொல்றேன் வான்னு தானே வரச் சொன்னான்? அதுவும் மேரேஜ் பத்தி இவட்ட இவ பேரண்ட்ஸ்ட்டன்னு எதுவுமே கேட்காம அவனா எப்டி முடிவு செய்துகிடலாம்?

அடுத்தும் இவள் இப்போதைக்கு மேரேஜ் வேண்டாம் ப்ரச்சனை சால்வ் ஆன பிறகு செய்யலாம் என சொன்னதை அவன் இந்த மேரேஜே வேண்டாம் என்பது போல் இவள் சொன்னதாக எடுக்க இன்னுமாய் கூடுகிறது கடுப்பு.

ஆனால் பின்னால் யோசித்துப் பார்க்கும் போது அவளை எரிச்சல் படுத்தவே அவன் அப்படி ஒவ்வொன்றாய் தூண்டி இருக்கிறான் என்பதும் புரிகிறது….

இவள் வாய திறந்து சொல்றதுக்கு முன்னமே இவள் என்ன நினைக்கிறான்னு புரிஞ்சுகிறவன்….இவள் வாய்விட்டு சொன்னதை அதுவும் அத்தனை தெளிவாக சொன்னதை எப்படி தப்பாக புரிந்தானாம் என்று அப்பொழுது யோசிக்க வரவில்லை…

ஆக எரிச்சலில்  இவள் அந்த டிவோர்ஸ் டிராமா ஃபைலை அவனிடம் இதப் பாருங்க என சொல்லி கொடுத்தாள்…..இல்லைனா கண்டிப்பா ஆஃபீஸில் வைத்து இந்த பேச்சையே எடுத்திருக்க மாட்டாளே…..

அப்பொழுதும் அந்த ஃபைலை அவனிடம் கொடுத்ததின் ஒரே நோக்கம்……இப்டி ஒரு ப்ரச்சனை இருக்கு மித்ரன்….அதை முதல்ல கவனிப்போம் என சொல்லத்தானே தவிர….. இவள் அதைப் பற்றி அங்கு அவனிடம் விளக்கம் கேட்கவெல்லாம் நினைக்கவில்லை…..அவனும் விளக்கம் சொல்வான் என இவள் எதிர் பார்க்கவும் இல்லை….…...

அவனுக்கும் ஆஃபீஸ்ல இவங்க மானிடர் செய்யப் படுறாங்கன்னு தெரியும்ல….ஃபைலைப் பார்த்துட்டு இந்த மேரேஜ் இப்ப வேண்டாம்னு இவ ஏன் நினைக்கான்னு புரிஞ்சுப்பான்…..ஆனா அதைப் பத்தி இங்க வச்சு பேச மாட்டான்….. எனதான் இவள் நினைத்தாள்.

அவனோ இவள் சற்றும் எதிர்பாராத வகையில் மகிபா என் பாஸ்ட் எனவும் உயிர் போய்விட்டது இவளுக்கு….. அத்தனை நிச்சயம் இருந்தது அவளுக்கு மகிபா ஒரு கட்டுக் கதை என அந்த நிமிடம் வரை…..ஆனால் அவன் வாயால் இப்படி கேட்ட பிறகு எப்படி ரியாக்ட் செய்வதாம்…..

அந்த ஷாக்கில்…..அவள் மறந்து போன முதல் விஷயம் அவர்கள் கண்காணிக்க படுகிறார்கள் என்பதைத்தான் தான்….. அடுத்து அவள் மகிபா கட்டுக்கதை என ஏன் இதுவரை நம்பி இருந்தாள் என்ற காரணத்தையும் தான்….அதோடு இங்கு வைத்து எதையும் மனம் திறந்து பேசக் கூடாது என்ற நினைவையும் தான்….

அவனது மகிபா எனது பாஸ்ட் நீ என் ப்ரெசெண்ட் என்ற வார்த்தைக்கு  மகிபா என் ஃபர்ஸ்ட் வைப் என்ற அர்த்தம் தவிர வேறு எதுவும் அர்த்தம் இருக்க கூடும் என்று கூட அவளுக்கு அப்போது தோன்றவில்லை…. வெடித்துவிட்டாள்……

இப்படி அவளை தேவையான அளவு எரிச்சல் படுத்தி  எதையும் யோசிக்க விடாம செய்து…..என்ன செய்தா இவ கல்யாணம் வேண்டாம்னு கத்துவாளோ அதையெல்லாம் செய்து……அதை காரணம் காட்டி அவளை ரூம்ல அடச்சுப் போட்டு அகதனை காட்டி மிரட்டி அவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க கேட்பது போல் கேட்டு…..சில நிமிடங்கள் தான் என்றாலும் இவளை மொத்தமாய் உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டு…. .

அந்த நொடி வரை நிஜமாக இவளுக்கு நடப்பது நாடகம் என புரியவில்லைதான்……மித்ரன் ஏன் இப்டி நடந்து கொள்கிறான் என நினைக்க தோன்றவும் இல்லைதான்…..ஆனால் இவள் மித்ரனை அறைந்த அந்த நொடி அகதன் தண்ணி தண்ணி என கேட்க இவள் திரும்பி டீவியைப் பார்த்தாள்…..அவன் இவளது அண்ணன் அகதன்….தன் ஷர்ட் காலர் பக்கத்தில் உள்ளே தள்ளி வைத்திருந்த கறுப்பு நிற சிறு மைக்கை மெல்ல இன்னுமாய் வெளியே எடுத்து தண்ணி தண்ணி என்றபடி இவளை அதாவது அவனை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமிராவை நிமிர்ந்து பார்த்தான்…. மைக்லாம் செட் பண்ணி எல்லாம் ட்ராமா போட்டுகிட்டு இருக்கோம் என்பதாக…

அதோடு  இப்பொழுது சத்தமே இல்லாமல் உதடசைத்து “மாப்ளய அடிக்காத….மேரேஜுக்கு சரின்னு சொல்லு” என்றுவிட்டு….மீண்டுமாக படுத்து தண்ணி தண்ணி என அவன் தொடர...

முதலில் இவளுக்கு புரிந்தது என்னவெனில் அகதன் விஷயம் லைவ் டெலிகாஸ்ட்….. ரிக்கார்டட் விடியோ கிடையாது அது….. அகதனும் இங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்….இல்லைனா இவ இப்ப மித்ரனை அடிச்சது அவனுக்கு தெரிய சன்ஸே இல்லையே……அப்படின்னா நடப்பது ட்ராமா……

ஆஃபீஸில் இவங்களை கண்காணிக்றவங்களை ஏமாத்த போடுற ட்ராமா…. சிசிடீவி கேமிராவோ எதுவோ இந்த அறையில் இருந்தால் கூட அதில் இந்த டீவியின் சத்தம் கேட்கலாமே தவிர டீவி திரையில் வரும் காட்சியின் சின்ன சின்ன அசைவுகளெல்லாம் சீசீடிவியில் தெளிவாய் தெரிய வாய்ப்பில்லை…..ஆக அகதன் இப்படி வெளிப்படையாக இவளுக்கு குறிப்பு கொடுக்கிறான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.