(Reading time: 38 - 76 minutes)

டுத்த படியா புரிஞ்ச விஷயம் ….. அகதனால இவ ஒரு டிவோர்ஸிய மேரேஜ் செய்றதை எந்த சூழலிலும் ஒத்துக்க முடியாது……அதை இவளால் 100% நம்ப முடியும். அவனே இவளை மேரேஜுக்கு சம்மதிக்க சொல்றான்னா….. இந்த மகிபா விஷயம் கட்டுக் கதை…

எல்லாத்துக்கும் மேல நேத்து நடந்த ஷூட் அவுட்க்கு பிறகு இன்று இப்படி ஒரு ட்ராமா என்றால் நிச்சயம் விஷயம் படு சீரியஸ்….

ஆக அடுத்த நொடி மேரேஜுக்கு சரி என்று விட்டாள்.

ஆனால் இப்பொழுதும் இவளுக்கு கொழுந்து விட்டு எரிகிறது கோபம்…… அதென்ன அகதனும் மித்ரனுமாக பேசி முடிவு செய்து கொள்வது……என்ன ப்ரச்சனைனு ஏன் இவட்ட சொல்லலை? ஆனாலும் அதையெல்லாம் இப்ப இங்க வச்சு  கேட்க முடியாது..

இதில் மேரேஜ் இன்னும் 7 நாள் கழித்து என்றான் மித்ரன்….

அப்டின்னா 7 நாளும் இவள் இங்க அடஞ்சு கிடக்கனுமா? என்று ஒருபக்கம் எரிச்சல் ஆகிறது என்றால்…. அப்ப அகி அங்க தண்ணி இல்லாம 7 நாள் இருக்கனும்னு அர்த்தம் ஆகுமே…..இந்த ட்ராமாவை நிஜம்னு யாரு நம்பனுமோ அவங்களுக்கு அது லாஜிகலி உதைக்காதா??  என்ற கேள்வியும் வருகிறது….

ஆக அதை சுட்டிக் காட்ட “ அது வரைக்கும் அகி அங்க தண்ணி கூட இல்லாம இருப்பானாமா?...” என சீறினாள்…. மித்ரனும் அதைப் புரிந்து பதில் சொன்னான் தான்.

அடுத்தும் இதில் இவள் ஆஃபீஸை விட்டு வெளியேற தீவிரம் காட்ட மித்ரனோ இயல்பான வேகத்தில் கிளம்ப….. இவர்களது ட்ராமாவை நிஜம் என்று நினைக்க வேண்டியவர்கள்…… இவள் அண்ணன் தண்ணிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் போது இவள் எப்படி இப்படி நிதானமாக இருக்கிறாள் என நினைக்க மாட்டார்களா என தோன்ற…..

“என்ன நீங்க….அகி அங்க எவ்ளவு நேரம் தண்ணி கேட்டுட்டு இருப்பான்….. யோசிக்க மாட்டீங்களா?” என மித்ரனுக்கும் அது புரியட்டும் என்ற எண்ணத்தில் அத்தனை எரிச்சலாய் கேட்ட பின்புதான், இவளுக்கு தானும் மித்ரனுடன் சேர்ந்து நடிக்க தொடங்கிவிட்டோம் என்பதே உறைக்கிறது….

நிஜ வாழ்க்கையில் எதற்காகவும் நடித்து பழக்கமில்லாத அவளுக்கு……சட்டென தன்னை இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்திவிட்டானே என்ற உணர்வு…..எதுவும் செய்ய முடியாமல்…..செய்ய வழி இல்லாமல் அழத்தொடங்கிவிட்டாள்…..

அவளது இந்த அழுகையில் மித்ரனும் அரண்டு போனான் தான்….. முதலில் அந்த அறையில் அவள் கோபம் கொதிப்பு என எல்லாம் அவனும் எதிர்பார்த்திருந்திருப்பான் தான்… ஆனால் இப்பொழுது எல்லாம் ட்ராமா என தெரிந்த பின் இவள் அழுவாள் என அவன் எதிர் பார்த்திருக்க மாட்டான் தானே….

முதலில் இவள் கண்ணீரில் ஆடிப் போனவன்…பின் ஒருவாறு சூழ்நிலையை சமாளித்து……இவள் கேள்விக்கு இவளுக்கு புரியும் வண்ணமும்…..நாடகத்திற்கு லாஜிகலி பொருந்தும் வண்ணமும் ஏற்ற பதில் சொல்லி….. இவளை கையைப் பிடித்தபடி காருக்கு கூட்டி வந்துவிட்டான்…. ஆஃபீஸிற்குள் இருக்கும் வரைக்கும் எப்படியும் இவர்கள் கண்காணிக்க பட வாய்ப்பு அதிகம் தான்….

ஆனால் காருக்கு வந்த பின்னாவது…..வெளியே கிளம்பி வந்த பின்னாவது…. மித்ரன் விளக்கம் சொல்வான் என இவளுக்குள் ஒரு சிறு எதிர்பார்ப்பு…..கூடவே அப்படி சொல்ல நினைக்கிறவன்,……அகதனோட சேர்ந்து ப்ளான் போட்டப்பவே இவட்டயும் சொல்லியிருப்பானே என்றும் தோன்றுகிறது….

ஆக இவன் இப்போதைக்கு எந்த விளக்கமும் சொல்வதாய் இல்லை… என்று புரிகிறது… இவள் வீட்டில் இதெல்லாம் எப்படி புரிஞ்சுக்க போறாங்க என்ற தவிப்பு இப்பொழுது இவளுக்கு….அதோடு அம்மா அப்பா இப்படி திடீர் கல்யாணத்துக்கு ஒத்துக்கனுமே என்ற படபடப்பு…..இல்லைனா இந்த மித்ரன் ப்ளான்….என்னதான் இவளுக்கு அவனா ப்ளான் போட்டுடான்னு கோபமென்றாலும்….அது சொதப்பிடுமே…..அது நிச்சயம் நல்லதிற்கில்லை என்று இவளுக்கு தெரிகிறதுதானே….  

அடுத்து பத்திரிக்கை ஆஃபீஸில் போய் மித்ரன் இவர்கள் திருமண அறிவிப்பு விளம்பரம் கொடுக்கவும்…. அப்பா அம்மாவிடம் மேரேஜ் பத்தி பேசுறதுக்கு முன்னமே இப்படி செய்தால் எப்படியாம் என ரொம்பவும் டென்ஷனாகிப் போனது மனதிற்க்கு…..கூடவே அடிமனதில் அகதன் இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பான் என்ற எண்ணம் சற்று அமைதியை தந்தாலும் கூட….அப்படி என்ன யோசித்திருக்க முடியும் என  தெரியாமல் ஒரு பதற்றம்தான் வீடு சென்றடையும் வரையும்….

வீட்டிற்குள் போன நொடி இவளுக்கு புரிந்து போன விஷயம் …..இந்த ட்ராமால இவள் பேரண்ட்ஸ் மனகக்ஷ்டபட்டுறக் கூடாது என மித்ரனும் அகதனும் ஏராளமான எஃபெர்ட் எடுத்திருக்கிறார்கள்  என….

ஆனால் அதுக்காகல்லாம் அகதனை பொய் சொல்ல வச்சிருக்கான் என இவளுக்குள் மித்ரன் மேல் முதலில் கொதிக்கிறது……எப்டியும் ப்ளான் மித்ரனோடதான இருக்கும்…? அதோடு அதற்கு ஒத்துக் கொண்ட அகதனுக்கும் மண்டையில ஒன்னு போட்டா என்ன என இவளுக்கு தோன்றுகிறதுதான்….. கூடவே அவளுக்கு இன்னொன்றும் புரிகிறது……அகதனால் பொய் சொல்ல முடியாது…அதிலும்  அப்பாவிடம் பொய் சொல்ல அவனால் முடியவே முடியாது……அதோடு அவனது ஒவ்வொரு பார்வையையும் அப்பா புரிஞ்சுப்பாங்க…இதுல அவன் எப்படி அப்பாட்ட பொய் சொல்ல?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.