(Reading time: 38 - 76 minutes)

ம்ளைங்கன்னா அப்டி பெரிய ஆகாச சூரர்களாமா? அவங்கன்னா அப்டியே எல்லாத்தையும் செஞ்சு சாதிச்சுருவாங்க…..பொண்னுங்கதான் விஷயம் தெரிஞ்சா தாங்க முடியாம அப்டியே எமோஷனாலாகி சொதப்பிடுவோம்ன்ற மாதிரி இதென்ன ஆட்டிட்யூட்…???

இதுவரைக்கும் உள்ளதுக்கே இந்த மித்ரன் காரணம் சொல்லலை……இதுல இப்ப எல்லாம் முடிஞ்சிட்டுதானே……இல்லைனா அகிய இங்க வர விட்றுப்பானா என்ன? ஆனா இப்ப கூட இவட்ட எதுவும் சொல்லாம……ஏன்…. நான் போறேன்னு கூட சொல்லாம கிளம்பி போயிருக்கான்…? அதுக்கும் இந்த அகியும் மண்டைய ஆட்டி வச்சுருக்கான்…...

இவங்கட்ட இதுவரைக்கும் பொறுமையா போனதே தப்பு போல…. சரி இவ்ளவா ப்ளான் செய்துருக்காங்க விஷயம் கண்டிப்பா சின்னதா இருக்காதுன்னு வாய மூடிட்டு அவன் சொன்னதெல்லாம் செய்தா ரொம்ப தொக்கா போயிட்டு போல……

நடந்தவைகளை நினைத்தபடி பொறுமிக் கொண்டிருந்தாள் மனோகரி. வரட்டும் இந்த மித்ரனுக்கு….எப்டியும் என்ட்ட தான வந்து நிக்கனும் …..என்ட்ட எதையும் சொல்லாம, ஒன்னும் மனசுவிட்டு பேசாம செய்தல்ல…. நானும் உன்ட்ட பேசாமா காயபோடுறேன்….அப்பதான் தெரியும் எனக்கு எப்டி இருந்துச்சுன்னு…..

இவள் இப்ப்டி எண்ணிக் கொண்டிருக்க அன்று இரவு வரை மித்ரன் வரவே இல்லை…. ஆனால் “மித்ரன் உன்ட்ட பேசனும்னு நினைக்கார் மகி…ப்ளீஸ் என்னையதான் பேசவிடலை அவர் என்ன சொல்றார்னாவது கேளேன்” என்று கெஞ்சியபடி அகதன் தான் மொபைலுடன் வந்து நின்றான்.

அசைந்து கொடுக்கவில்லை இவள். கிட்நாப் பண்ணாத குறையா கொண்டு வந்துட்டு…..சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போய்ட்டு…..வெறும் மொபைல் கால்ல கவுத்த பார்க்கியா நீ….?

ஆரம்பத்துலே உன்னை திருத்தாம விட்டுட்டா கடைசி வரைக்கும் நான் இந்த கக்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும்…எதுனாலும் உன் இஷ்டத்துக்கு செய்துட்டு….உன் நல்லதுக்குத்தான் செய்தேன்னு வந்து சாக்கு சொல்லுவ….அதை நான் சகிச்சுகிட்டு போகனும்னு எதிர் பார்க்கவும் செய்வ…… 

சோ கண்டிப்பா இப்போதைக்கு நான் உன்ட்ட பேசப் போறது இல்லை…

இப்படி இவள் வைராக்கியமாக இருக்க அடுத்து அவள் மித்ரனை முகமுகமாக பார்த்தது அவளது திருமணத்தில் தான்….

“Friends  இந்த எபிசோட்ல கண்டிப்பா கல்யாணத்தைக் கொண்டு வந்துடனும்னு நினச்சேன்….பட் அதை ரொம்ப எலாப்ரேட்டா எழுத ஆசையா இருக்குது…..எபி இப்பவே 10 பக்கம் கிட்ட வந்துட்டுது…..ஆக அடுத்த எபில டீடெய்லா எழுதுறேன்….வெட்டிங் எதிர் பார்த்தவங்க தயவு செய்து மன்னிச்சிடுங்க…நெக்‌ஸ்ட் வீக் மனு வெட்ஸ் மனு தான்.”

Episode # 11

Episode # 13

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.