(Reading time: 38 - 76 minutes)

முதலில் அப்படி ஃபோட்டோஸ் விடியோஸ் தரலைனா கூட…..குறஞ்ச பட்சம் இவள் அதை நம்பலைனு அந்த கல்ப்ரிட்டுக்கு தோணியதும்…..அதாவது இவ மித்ரன் ப்ராபோசலை அக்சப்ட் செய்த பிறகாவது எவிடென்ஸோட இவளை பார்த்திருக்கலாமே….. எதுவும் இல்லைனா எல்லாத்துக்கும் மேல அந்த மகிபாவை இவளுக்கு காண்பித்திருந்தால்… அவளை இவள் மீட் பண்ற மாதிரி எதாவது  செய்திருந்தால் அப்படியே இவள் மித்ரனைவிட்டு விலகி இருப்பாளே….

அதைவிட்டுட்டு எதற்கு இத்தனை தில்லு முல்லு ? அதுவும் வீடு தேடி வந்து கொலை செய்ய ட்ரைப் பண்ற அளவுக்கு…..

அதுவே இவளுக்கு புரிய வைக்கவில்லையா இவ மித்ரனை மேரேஜ் செய்றது யாருக்கோ பெரிய லாஸ்னு…..அவ்ளவு பெரிய லாஸை சந்திக்க போறவங்களால இவளுக்கு மித்ரன் கெட்டவன்னு நிரூபிக்க சாட்சி கொடுக்க எதுவும்  இல்லை…. அப்படின்னா என்ன அர்த்தம்???

அந்த கல்ப்ரிட் தான் மாட்டிக்காம மர்டர் செய்ய எடுக்ற முயற்சி அளவுக்கு,  முயற்சி பண்ணா கூட மித்ரன் கெட்டவன்னு நிரூபிக்கிற மாதிரி எவிடென்ஸ் கிடைக்காதுன்னு ஒரு அர்த்தம் வருதுல்ல…..

ஆரம்பத்துல இருந்தே அந்த கல்ப்ரிட் மித்ரன்ட்ட இருந்து இவளை தானா விலகிக்க வைக்கனும்னு நினைக்காம நேர ஷூட் செய்ய ட்ரைப் பண்ணி இருந்தா கூட…..சரி  அந்த கல்ப்ரிட்டுக்கு வயலன்ஸ்ல மட்டும்தான் நம்பிக்கை இருக்குன்னு எடுத்துக்லாம்…. ஆனா அப்டியும் இல்லை மித்ரனோட டிவோர்ஸ் பத்தி இவட்ட சொல்லி இவள ஓட வைக்கதான் முதல்ல ட்ரைப் பண்ணிருக்காங்க….அது பலிக்காது என தெரியப் போய்தான் கொலை முயற்சி…..

அப்படியானால் எந்த சூழலிலும்  இவளாக மித்ரனை விட்டு விலகும்படி   ஒரு சாட்சியைக் கூட அந்த கல்ப்ரிட்டால் கொடுக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்….

அதோடு விஜிலாவும் மித்ரனின் அம்மாவும்  மித்ரனை பற்றிய எந்த கதையையும் நேரில் பார்த்ததாக எதுவுமே சொல்லவில்லை…. விஜிலா மித்ரனை பற்றி அவனது அம்மா சொல்வதை ப்ரதிபலிக்கிறாளே தவிர மற்றபடி அவளுக்கு மித்ரனை பத்தி நேரடி அனுபவமே இல்லை….

மித்ரன் அம்மா மித்ரனைப் பத்தி நல்லவிதமாக சொல்லி இருந்தால் விஜிலாவும் நல்லவிதமாக சொல்லிவிட்டுப் போயிருப்பாள்…..ஆக விஜிலாவின் வார்த்தைகளை மித்ரனின் அம்மாவின் சாட்சி பார்ட் 2 எனதான் நினைக்க வேண்டும்…..

மித்ரனின் அம்மா…….என்னதான் மகன் மீது திருப்தி இன்மை இருந்தாலும் அதை நேரடியாக அவனிடம் பேசாமல் இப்படி இவள் வீடு தேடி வந்து இங்கு பறைசாற்றும் அவனது அம்மா…..சரி தன் மகனால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போயிடக் கூடாதுன்னு ஒரு பரந்த மனப்பான்மையில இவள தேடி வந்து சொல்றாங்கன்னு நினைக்கவும் வழியில்லை…… எப்டியும் அவனை கல்யாணம் பண்ணுனுதான் இவட்ட கேட்கிறாங்க…… கல்யாணம் செய்ய கேட்கிறவங்க எதுக்கு மித்ரனை அத்தனை குறை சொல்லனும்….ஆக மகனைப் பத்தி அடிப்படையிலேயே அவங்களுக்கு ஒரு நல்ல ஃபீல் இல்லை….

ஒரு திருப்தி இன்மையில் இருந்த அவங்கட்ட யாராவது ஏன் இவளை கொலை செய்ய ட்ரைப் பண்ற இந்த கல்ப்ரிட்டே ஏதோ காரணத்துக்காக இப்ப இவட்ட  சொல்றது போல மித்ரனைப் பத்தி  சொல்லி இருந்தா…….மித்ரன் அம்மா ஒன்னும் இவளை மாதிரி அலசி ஆராய்ஞ்சுகிட்டோ….குறஞ்ச பட்சம் மகனைக் கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்டுகிட்டு இருக்கப் போற மாதிரியோ தெரியலை…….என் மகன் அப்டித்தான் அப்டின்னு நம்பிட்டு போயிடுவாங்க…

அதுவும் ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அந்த கல்ப்ரிட் வர்ஷனாகவோ…அல்லது அவனைப் போல மித்ரனின் அம்மாவின் நன்மதிப்பை பெற்றவனாகவோ இருந்தால் கேட்கவே வேண்டாம் …..மித்ரன் அம்மா நிச்சயமாக கேள்வியே எழுப்பாமல் மித்ரனை தப்பாகத்தான் நினச்சிருப்பாங்க…

ஆக இவங்க யார் மித்ரனைப் பத்தி சொல்றதையும் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை….. உண்மையில் மகிபான்னு ஒரு பொண்னு இருக்குதுன்னு கூட நிச்சயம் இல்லை…. அப்டியே இருந்தால் கூட கண்டிப்பா அந்த பொண்ணோட மித்ரனுக்கு மேரேஜாகி இருக்க சான்ஸே இல்லை…. அப்படி இருந்தா இந்த கொலைசெய்ய ட்ரைப் பண்ற கல்ப்ரிட் அந்த மகிபாவ கடத்திக் கொண்டு வந்தாவது இவட்ட காமிச்சிருப்பான்….  ஆக இதையெல்லாம் மித்ரன்ட்ட சொல்லி அவனை இதை ஹேண்டில் பண்ண சொல்லனும்…..இவட்ட இப்படி டிவோர்ஸ் ஃபைலை யாரோ அனுப்பி வச்சிருகாங்கன்னு கூட இன்னும் மித்ரனுக்கு தெரியாதே….

இப்படியாய் நினைத்துக் கொண்டு தான் அவள் அன்று அவள் ஆஃபீஸ் ரூம் கதவை தட்டியதும்…..

தோடு அவளுக்கு மனதினுள் இன்னொரு எண்ணம்…… ஆஃபீஸில் இவளும் மித்ரனும் பலமாக கண்காணிக்க படுகிறார்கள் என்பது தான் அது……

 இவள் எந்த இடத்தில்….நிற்கிறாள்…..நடக்கிறாள் என்பது வரை நிச்சயமாய் அந்த கல்ப்ரிட்டுக்கு தெரிந்திருக்கிறது….அதானல தான அவளை அத்தனை ஈசியா அன்னைக்கு கிட் நாப் செய்ய முடிஞ்சிது…? அதனாலதான இவ எப்ப தனியா இருக்கான்னு பார்த்து அந்த டிவோர்ஸ் ஃபைலை குடுக்க முடிஞ்சிது….. அதுவும் ஒரு முக்கிய காரணம் அந்த டிவோர்ஸ் ஃபைல் விஷயத்தை ஆஃபீஸில் வைத்து அன்றே மித்ரனிடம் மனோ பேசாததற்கு……

மித்ரனுக்கும் இவர்கள் ஆஃபீஸில் கண்காணிக்கப் படுவது தெரிந்திருக்கும் என்பது இவளது புரிதல்…. அன்று இவள் வீட்டிற்கு அவன் வரவும் ….. உங்கட்ட பேசனும் மித்ரன் என இவள் ஆரம்பிக்க……அவனும்  சுற்று முற்றும் மேலும் கீழுமென எல்லாவற்றையும் பார்த்துவிட்டே பேச்சை தொடங்கினான்….இவள் வீட்டிலேயே இத்தனை யோசிக்கிறவன் நிச்சயமாக ஆஃபீஸில் அதை கவனிக்காமலெல்லாம் இருந்திருக்க மாட்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.