(Reading time: 28 - 56 minutes)

ல்லாரையும் விட மங்களத்தை நன்கு அறிந்தவர் அவர் கணவர் அல்லவா.... வெளியே முள்ளை போல சற்று கடுமையுடன் நடந்து கொண்டாலும் அந்த குடும்பத்தின் தூண் அவர் தான். இந்த காலகட்டத்தில் கூட்டு குடும்பமாக எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் இருக்க அந்த வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் மீதேனும் எல்லாருக்கும் பாசமும் மரியாதையும் சேர்ந்து இருக்க வேண்டும். இதில் ஒன்று இல்லை என்றாலும் கூட்டு குடும்பம் கால போக்கில் சிதறிவிடும். இந்த குடும்பத்திற்குள் சிவ சண்முகத்தின் மனைவியாக மங்களம் காலெடுத்து வைக்கும் பொது அவருடைய வயது 17. கோயம்புத்தூரின் மிக பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ரத்தினசாமி அவர்களின் குமாரத்தி. ஒரே ஒரு தமையன். வீட்டில் எல்லோருக்கும் செல்லம். அந்த ஊரே வியக்கும் படி சீர் செனத்தியோடு அவருக்கு மணமுடித்து வைத்தார்கள். அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் புத்திசாலியான மங்களம் குடும்ப பொறுப்புகளை ஒவ்வொன்றாய் கையில் எடுத்து கொண்டார். அவருடைய மாமனாரும் மாமியாரும் இதே போன்ற மருமகள்கள் தன மற்ற இரு பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தனர். ஆனால் திருமணம் முடிந்து 2வது வருடம் மாமனார் மாமியார் இருவரும் சில பல உடல் உபாதைகளால் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட, தொழிலை கவனிக்கும் பொறுப்பு சிவா சண்முகத்தையும் குடும்பத்தையும் தன் கொழுந்தனார்களையும் கவனிக்கும் பொறுப்பு மங்களத்தையும் சேர்ந்தது. அதற்காக அவர் பூட்டி கொண்ட முகமூடி தான் கண்டிப்பு. ஒரு தாயை போன்ற பாசத்தையும் தந்தையை போன்ற கண்டிப்பையும் தன் கொளுந்தனார்களுக்கு வழங்கினார். காலபோக்கில் அதுவே அவருடைய இயல்பாக மாறி போயிற்று. ஆனால் இந்த முகமூடி எதுவும் இல்லாத மங்களத்தை சிவசண்முகம் மட்டுமே அறிவார். காதல் மனைவியாக அன்பான தாயாக ,சாய தோள் கொடுக்கும் தோழியாக , ஆலோசகராக, எல்லாமுமாக இருக்கின்றவர். இதை எல்லாம் தாண்டி மிக மென்மையான உள்ளத்தை கொண்டவர். அவர் கண் கலங்கிய பொது அவருடைய உணர்வுகள் அவருக்கு புரிந்தது.  அவருடைய இந்த கண்ணீரை துடைக்கும் வழியும் அவருக்கு கைவந்த கலையாயிற்றே.

"ஏம்மா ஒரு எட்டுனா இந்த ரூம்ல இருந்து அந்த ரூம்க்கு தான் போக முடியும். அவ்வளவு பக்கமாவா பாக்க சொல்ற.."என்று கேட்க, கணவரின் முயற்சியை புரிந்தவராய் அவரும் மெல்லிதாக முறைக்க முயன்று தோற்றவராய் சிரித்தார்.

"உங்களை...சரி இருங்க நான் பர்ஸ்ட் கோயிலுக்கு போயி பாப்பா பேருல ஒரு அர்ச்சனையும் அப்படியே இந்த ஜாதகத்தை சாமி பாததுலயும் வெச்சு வாங்கிட்டு வந்தறேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கு சூடா காபி கொண்டு வரேன். இது ஆறிடுச்சு என்றவாறே சமையலறையை நோக்கி சென்றார் மங்களம்.

பெங்களூரில்

  ஏய் கும்பகர்ணனுக்கு தங்கசியாடி நீ...எழுந்து தொலை... உன்னோட ஒரே ரோதனையா போய்டுச்சு ... இந்த ஒரு மாசமா நானும் உன்னை திருத்திடலாம்னு பார்த்தா எப்ப பாரு இதே கூத்து தான்... எந்திருடி எருமை... ப்ளீஸ் டி, எழுந்திரு" என்ற படி மது அங்கே போர்வைக்குள் ஒளிந்திருந்த திவ்யாவை உருட்டி கொண்டிருந்தாள்.

"ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா தூங்க விடறியா?" என்ற படி போர்வைக்குள் நெளிந்து கொண்டிருந்தவளை பார்த்து திட்ட தொடங்கினாள் மது.

"என்னது அஞ்சு நிமிஷமா? அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம்னு சொல்லி முப்பத்தஞ்சு நிமிஷம் ஆச்சு.. ஷார்ப்பா 10க்கு ஆபீச்லே இருக்கணும்... இல்லேன்னா அந்த மேக்னா காய்ச்சி எடுத்துரும்.."

“அந்த மேனா மினுக்கி மேக்னாவ பார்த்து எல்லாம் ஏண்டி பயப்படற...”

"அவ மேனா மினுக்கியோ இல்லையோ நீ இப்போ எழுந்திரிக்கலை இந்த பெங்களுரு குளிரில் நீ வெடவெடக்கும் கோழி ஆகிவிடுவாயடி என் தோழி " என்றாள் மது.

"அய்யோ இவ என்னமோ பிளான் பண்ணிருக்கானு நெனைக்கிறேன் என்று எண்ணியவாறே தலையை சற்றே போர்வையிலிருந்து விலக்கி வெளிய எட்டி பார்த்தாள்.

அங்கே கையில் தண்ணீர் பக்கேட்டோடு நின்று கொண்டிருந்தால் மது.

அய்யயோ இதுக்கும் மேல விட்டா தண்ணியை நிச்சயம் தலையில் ஊத்திடுவா என்று எண்ணியவாறே "இருடி மது குட்டி, எழுந்தாச்சு.. ஐ வில் பி ரெடி இன் 5 மினுட்ஸ்" என்றவாறு வாரி சுருட்டி கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள் திவ்யா.

இருவரும் அந்த லேடீஸ் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறினர்.

திவ்யா, மதுவின் கிளாஸ்மெட். அதனாலேயே அவள் இருந்த ஹாஸ்டலில் மதுவை தங்க வைத்தனர். அவளும் வசதியான வீட்டு பெண். இந்த பெங்களூரின் நாகரிகத்தில் கலந்து விட்டவள். மதுவிற்கு முன்பே இந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டாள்.  அவளும் மதுவும் ஒன்றாகவே போய் வருகிறார்கள். ஊருக்கு போகும்போது அவளுடனே வரவேண்டும் என்பது அவள் வீட்டினரின் கட்டளை.

அலுவலகத்திற்குள் கால் எடுத்து வைத்ததும் "ஹேய்ய்ய் , என் ஆளு இன்னைக்கு சூப்பரா வந்துருக்கு" என்றாள் திவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.