(Reading time: 28 - 56 minutes)

"ன்னை எல்லாம் எவண்டி இந்த கம்பெனில செலக்ட் பண்ணுனது ..சரியான லூசு "-திவ்யா

தலையை தேய்த்தவாறே எழுந்து ஓட ரெடி ஆக நின்று கொண்டே,"எல்லாம் உன் கனவு கண்ணன் விநாயக் தான் " என்றவாறு மீண்டும் ஒரு குட்டு வாங்காமல் ஓடி தன் சீட்டில் அமர்ந்தாள் மது.

கோயம்பத்தூரில்

அந்த பெருமாள் கோயிலின் முன்பிருந்த மரத்தடியில் டிரைவரை காரை நிறுத்த சொல்லி, அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு கோவிலின் உள்ளே சென்றார் மங்களம்.

"சாமி, இந்த கவரை அந்த பெருமாள் பாதத்துல வெச்சு பூஜை பண்ணி கொடுங்க. அப்படியே, மது , திருவாதிரை நட்சத்திரம் , மிதுன ராசிக்கு ஒரு அர்ச்சனை பண்ணி கொடுங்க" என்றவாறு அர்ச்சனை தட்டை குருக்களிடம் கொடுத்தார்.

மனமுருக தன பெண்ணின் வாழ்க்கை சந்தோசத்துடனும் சகல சௌபாக்கியதுடனும் அமைய அந்த பெருமாளையும் மாஹலக்ஷ்மியைஉம் வேண்டி கொண்டார்.

அர்ச்சனை தட்டையும் ஜாதக கவரையும் பெற்றுக் கொண்டு கோவிலை சுற்ற தொடங்கியவர் கண்ணில் பட்டது "இங்கு ஜோதிடம் மற்றும் ஜாதக பலன் பார்க்கப்படும் " என்ற விளம்பரம்.

அங்கே ஒருவர் அப்போது தான் தரையில் துணியை விரித்து அமர்ந்தார். அதை கண்ட மங்களத்திற்கு தன பெண்ணின் ஜாதக பலனை கேட்கலாம் என்ற எண்ணம் தோன்றவே அவர் அருகில் சென்றவர், "ஐயா, என் பொண்ணுக்கு குரு பலன் வந்துடுச்சானு கொஞ்சம் பார்த்து சொல்றிங்களா? மாப்பிளை பாக்கலாம்னு இருக்கோம். அதான்" என்றவாறே அவரிடம் மதுவின் ஜாதகம் இருந்த கவரை நீட்டினார்.

"தாராளமா பாக்கலாம் . உக்காருங்க அம்மா " என்ற படி அந்த ஜாதகத்தை வாங்கி கண்ணில் ஒற்றி கொண்டு  பிரித்து கட்டங்களை பார்க்க தொடங்கினார்.

"இந்த பெண் பிறந்த வேளை உங்கள் செல்வ வளம் கூடியிருக்கும். கொஞ்சம் பிடிவாத குணம் உண்டு. ஆனால் படிப்பில் கெட்டி காரியாக இருந்திருப்பாள். " என்றவர் சற்று நேரம் அமைதியாக அந்த ஜாதகத்தில் இருந்த கட்டங்களை ஊன்றி கவனித்தார். பின்பு சில விரல்களை கூட்டி ஏதோ கணக்கிட்டார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை இதையே செய்தவர் நெற்றியில் லேசான சுருக்கங்கள் தோன்றின.

தன் மகளை பற்றி கூறுவதை பெருமையுடன் கேட்டு கொண்டிருந்த மங்களம் ஜோதிடரின் முகத்தில் தோன்றிய குழப்பத்தையும் சிந்தனை கோடுகளையும் கண்டு, சற்று கவலையுடன் "ஐயா எதாவது பிரச்சனையா? இன்னும் குரு பலன் வரலையா? எதாவது தோஷம் இருக்கா?" என்று தொடர்ந்து கேள்விகளாய் கேட்க,

சட்டென சுதாரித்த ஜோதிடர்,"இல்லையம்மா ஒரு சிறு குழப்பம், வேறொன்றும் இல்லை. இந்த பெண்ணின் ஜாதகத்திற்கு இன்னும் திருமண வேளை கூடி வரவில்லை. ஆனாலும் நீங்கள் மாப்பிளையை பார்க்க ஆரம்பியுங்கள். இந்த பெண்ணிற்கு திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது இவளுக்கு பார்க்கும் முதல் மாப்பிளை உடன் தான் நடக்கும். முடிந்தவரை ஒவ்வொரு வெள்ளியும் இங்கிருக்கும் அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்."  என கூறி ஜாதகத்தை கவரில் இட்டு அவரிடம் கொடுத்தார்.

"சரிங்க ஐயா. தட்சணை எவ்வளுவுனு சொன்னிங்கனா ....?" என்றவரிடம்

"உங்கள் பெண் திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராய் வந்து எனக்கு தட்சணையை கொடுக்க சொல்லுங்கள். அது போதும் " என்றவாறு அடுத்து நின்றிருந்தவரிடம் பேச தொடங்கினார்.

சிறு குழப்பத்துடனே கோவிலை விட்டு வெளியே வந்தார் மங்களம்.

வீட்டிற்குள் நுழையும் போதே பேச்சு குரல் கேட்கவும், தன்னுடைய குழப்பங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தார் மங்களம்.

அங்கே குடும்பமே ஒன்றாக அமர்ந்து தரகரிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

மங்களம் உள்ளே நுழைவதை கண்ட சிவஷன்முகம் , "வா மங்களம் , நம்ம தரகர் வந்துருக்கார். நம்ம பாப்பாக்கு நல்ல வரன் வந்துருக்காம்" என்றவர், கண்ணில் குழப்பதுடன் நிற்கும் தன் மனைவியை புரிந்தவராய், "பாப்பா போட்டோவையும் ஜாதகத்தோட ஒரு காப்பியையும் கொண்டு வாம்மா" என்றவாறு அவருடன் இணைந்து நடந்தவர், அறைக்குள் நுழைந்ததும், "மங்களம், நம்ம தரகர் காலைல நீ கோயிலுக்கு போனதும் இங்க வந்தார். நம்ம கந்தசாமி தெரியும்ல. நம்ம மில் ஓனர் சங்க தலைவர். அவரோட மூணாவது பையனுக்கு நம்ம மதுவை பாக்கலாம்னு சொன்னாரு. நீ வேற காலைலேயே நம்ம மதுக்கு மாப்பிளை பாக்கலாம்னு சொன்னாயா.. எனக்கு ஒரே குழப்பம். அதான் நீ வர வரைக்கும் அவருகிட்ட பேசிட்டு இருந்தேன். " என்றார்.

"சரிங்க, பேசி பாக்கலாம். எனக்கும் கந்தசாமி சாருடைய குடும்பத்தை தெரியும். நம்ம சனங்க கல்யானங்கள்ள அவங்க மனைவியும் மருமகள்களையும் பார்த்துருக்கேன். நல்ல மாதிரி தான் இருந்தாங்க. சரி பேசி பாப்போம்.நீங்க போங்க. நான் போட்டோவும் ஜாதகமும் எடுத்துட்டு வரேன்."

"இப்போ கொண்டு வந்துருவா" என்றவ்று வெளியில் சென்று மற்றவரோடு அமர்ந்தார் சிவசண்முகம்.

"இந்தாங்க இதுல போட்டோவும் ஜாதகமும் இருக்கு . " என்று தரகரிடம் ஒரு கவரை கொடுத்தார் மங்களம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.