(Reading time: 28 - 56 minutes)

"ய்யயோ என்னங்க ஆச்சு... பார்த்து வரலாம்ல (அட கொடுமையே இவங்க மதிய பார்த்து கேக்கற கேள்வியா இது )...இப்படி அடி பட்டு தலைல ரத்தம் வேற வருது "என்றவாறு தன் இடுப்பில் சொருகி இருந்த கைக்குட்டையை எடுத்து அவன் நெற்றி காயத்தை துடைத்து விட்டாள்.

சைக்கிளை கண்டபடி ஓட்டிட்டு வந்து என் மேல விட்டுட்டு இப்போ ரத்தம் வராம தக்காளி சட்னியா வரும் என்று கேட்க நினைத்து வாயை திறந்தவன், அந்த பெண்ணின் பூ முகத்தை கண்டான்.

" பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

சிவந்த கன்னங்கள் ரோசாபூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகை பூ."

அந்த பெண்ணின் தொடுகையிலும் அவள் கண்ணில் கண்ட தவிப்பிலும் , அடிபட்ட இவனே கலங்காத போது அவள் கண்கள் கலங்குவதையும் கண்டவன் பேச்சை மறந்து அந்த பெண்ணின் முகத்தையே பார்த்தான்.

“சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ”

அவன் நெற்றி காயத்தை துடைத்து விட்டு சுற்றும் முற்றும் எதையோ யாரையோ தேடினாள்.  அவள் தேடுவதை கண்ட அவன் "ஏங்க என்ன தேடுறிங்க " என்று கேட்க, "இல்லைங்க பக்கத்துல பசங்க யாராவது இருந்தா பேன்ட் எய்ட் வாங்கிட்டு வர சொல்லலாம்னு தான்" என்றாள்.

"அட இவ்வளவு தானா.. என் பைக் முன்னாடி ஒரு கவர் இருக்கு. அதுல பர்ஸ்ட் எய்ட் கிட் இருக்கும். கொண்டு வாங்க" என்றான்.

"ஒஹ்ஹ் அப்போ நீங்க இப்படி தான் அடிக்கடி கீழ விழுவீங்களா... அதான் பார்ஸ்ட் எய்ட் கிட் கூடவே வர்ச்சுருக்கிங்க...வெரி குட் வெரி குட் " என்றபடி அந்த கிட்டை திறந்து ஆயின் மென்ட் இட்டு பஎண்டஜும் ஒட்டி விட்டாள்.

எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு, சைக்கிளை நோக்கி சென்றவளையே இவன் பார்த்தவாறு நிற்க, சைக்கிளின் அருகே சென்றவள் அவனை திரும்பி பார்த்து விட்டு "சாரி என்னால தான். டேக் கேர்." என்று கை அசைத்து விட்டு சைக்கிளை எடுத்து சென்று விட்டாள்.

“அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்”

அந்த பெண் அழகாக இருந்தாள் ஆனால் எந்த விதமான செயற்கை பூச்சும் இல்லை அவளிடம்... அவளின் முகத்திலும் சரி வார்த்தையிலும் சரி...

அவளின் உடையும் அவள் அணிந்திருந்த நகைகளும் சொல்லியது அவள் செல்வ செழிப்பில் மிதப்பவள் என்று.. ஆனால் அந்த கர்வம் அவளிடம் துளியும் இல்லை.. அவளின் முகத்தில் இருந்த குழந்தைத்தனமும் அவளின் பேச்சில் இருந்த அப்பாவித்தனமும், யாரென்றே தெரியாத ஒருவனுக்கு அடிபட்டவுடன் பதறிய அவள் குணமும் அவனை கவர்ந்தது. இது காதல் என்று யாரவது சொல்லியிருந்தால் நிச்சயம் இல்லை என்றே சொல்லியிருப்பான். பார்த்த 10வது நிமிடத்தில் காதல் வருமா என்று எதிர் கேள்வி கேட்டிருப்பான்

இது ஒரு பப்பி லவ் இல்லை என்றால் ஜஸ்ட் அன் இன்பாக்சுவஷன் என்று சொல்லி இருப்பான். ஆனால் அதன் பின் அவனிடம் காதல் சொல்லிய பெண்களிடமும் அவனை இம்ப்ரெஸ் பண்ண நினைத்த பெண்களிடமும் இதோ இப்போது அவனுக்கு திருமணத்திற்கு என்று பார்க்கும் பெண்களிடமும் இவன் அவளை தான் தேடினான் அவனறியாமலே... பார்த்த 10வது நிமிடத்தில் இல்லை அவள் முகம் பார்த்த அந்த நொடி அவள் அவன் மனதில் நுழைந்து விட்டதை அவனே அறியவில்லை

"ஹலோ ஹலோ கொழுந்தனாரே.... டேய் மதி .... தம்பி தம்பி ..." எங்கேயோ தூரமாக தன் அண்ணன்களும் அண்ணியரும் அம்மாவும் அப்பாவும் விளிப்பதை போலொரு பிரம்மை. (சுத்தம் வெளங்கிடும் .. இது முத்தி போய்டுச்சு போல இருக்கே....)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.