(Reading time: 14 - 28 minutes)

'னிதா, நந்தினி, நீங்க ரெடியாகலே?' என்று கேட்டாள் வித்யா,

'ரெடியாகிக்கிட்டுதான் இருந்தோம், அதுக்குள்ளே இங்கு சிரிப்புச் சத்தம் வந்துவிட்டோம்,'என்று கூறி அவர்கள் போய்விட்டார்கள்

'நீ கூட ரெடியாகு வித்யா, டைம் ஒன்றரை ஆகுது பார், நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா,'என்று கேட்டாள் சித்ரா

அதெல்லாம் நான் சிம்பிள் லா தான் டிரஸ் பண்ணுவேன், எனக்கு அதான் பிடிக்கும் என்றாள், சரி உள்ளே வாங்க, நான் ஒரு சாரி எடுத்துண்டு மிச்சதை கொடித்திடறேன்,'

‘இல்லை, நீ ரெண்டு சாரி வச்சுக்க உங்க அண்ணனே சொன்னாரில்ல, ரெண்டு எடுத்துக்க,’ என்றாள் சித்ரா

‘இல்லை அண்ணி,’ என்று அவள் ஆரம்பிக்க,

‘அண்ணி அண்ணிங்கற, ஆனா சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்கிற,'

'சாரி, அண்ணி நீங்க மனசு வருத்தப் படற மாதிரி ஏதாவது பேசியிருந்தா, மன்னிச்சிருங்க, ப்ளீஸ்,'

'ஏய், என்னது இது, உன்னை ஒத்துக்க வைக்க நான் சும்மா சொன்னேன் கண்ணா! பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதே, ப்ளீஸ், சரி நீ குளிச்சு ரெடியாகு!'

சித்ரா, வித்யா எடுத்துக்கொண்ட புடவைகள் தவிர மீதி இருந்ததை, எடுத்துக் கொண்டு ருத்ரா ரூமுக்குப் போனாள்,

அங்கு ருத்ரா இவளுக்காக காத்திருந்தான், 'நீங்க வெளியே போயிருக்கீங்கன்னு நினைச்சேன், இங்கிருக்கீங்க?' என்று கேட்டாள்

'ம்ம், எங்கேயும் போகல, நீ ரெடியாகு,' என்று அவளை இழுத்து அணைத்தான், நீங்க இப்படி என்னை கட்டிக் கொண்டிருந்தா, நான் எப்படி ரெடியாகிறது,’ என்று கேட்டாள்

அவன், அவள் வாயை தன் வாயால் கவ்விப் பிடித்தான், சிறிது நேரம் விடவேயில்லை, ருசிகண்ட பூனை, அவளை விட மனசு இல்லை, அவளைப் பதம் பார்த்துவிட்டுத்தான் விட்டான், அவள் போய், குளித்து ரெடியாகும் வரை கீழே போய் எல்லோரும் ரெடியாகிறார்களா என்று பார்த்தான், சமயலறைக்கு போய் டிபன் காபி ரெடியாகிறதா, என்று பார்த்தான், மத்த எல்லாவற்றையும் பார்த்து திருப்தி ஆனவுடன், சிதம்பரம் நம்பருக்கு போன் செய்தான், அவரும் ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவோம் ருத்ரா,’ என்றார்

“சரி சார், அப்ப, பார்க்கலாம் என்றான் ருத்ரா’

அங்கிருந்து தாத்தாவையும் அப்பாவையும் பார்க்க போனான், அவர்களிடம் விஷயத்தை கூறிவிட்டு அம்மாவைப் போய்ப் பார்த்தான், நல்ல அழகாக பட்டும் புடவையும், அளவான நகைகளும், தலை நிறைய பூவும் மிகவும் அழகாக இருந்தாள்.

சிவேஷ் நல்ல உயரமும் அழகும் சேர்ந்து இருந்தார், அதே தான் ருத்ராவும், வித்யாவும் அப்பாவைக் கொண்டிருந்தார்கள், கற்பகமும் நல்ல அழகு ஆனால் இரு பிள்ளைகளும், அப்பாவைக் கொண்டிருந்தனர், அம்மாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான், ருத்ரா

'என்னப்பா ருத்ரா, இப்படி என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாய், ஏதாவது கேட்க வேண்டுமா?' என்று கேட்டாள் கற்பகம்

'இல்லை அம்மா, நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய், அதான் பார்த்துக் கொண்டிருந்தேன்,' என்று அவன் சொல்லவும் அம்மாவுக்கு வெட்கம் வந்தது, ' போடா, போக்கிரி,' என்று அவனை விரட்டினாள், அவனும் அம்மாவின் கன்னத்தை தட்டி விட்டு அங்கிருந்து தங்கையைப் பார்க்க போனான்

கதவை தட்டி,' வித்யா, ரெடியா?' என்று கேட்டான்

அவள் கதவைத் திறந்து, 'அண்ணா, அண்ணியை கொஞ்சம் அனுப்பேன், இந்த புடவையை அழகா அவங்க கட்டி விடட்டும்,'

'சரி, அவளை அனுப்புகிறேன் நான்,' என்று அங்கிருந்து நகன்றான்

தன் ரூமுக்குப் போனான், அங்கு சித்ரா ரெடியாகிவிட்டாள், அந்த புடவையும், அவள் நகைகளும் அவளின் அழகைக் கூட்டின, அவனுக்கு அவளைக் கட்டிக் கொள்ளவேண்டும், என்று ஆவல் இருந்தாலும், அவள் பாவம் நன்றாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள், அதை கலைக்கக் கூடாது என்று, 'சித்து, நீ ரொம்ப அழகாயிருக்க,' என்று அவன் கூறுவது எங்கிருந்தோ பேசுவது போலிருந்தது,

'சித்து, நம்ம விது உனக்காக வெயிட் பண்ணறா, புடவை கட்டி விடணுமாம் நீ, போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணும்மா,' என்றான்,

அவன் பார்வையில் பேச்சில் ஒரு மாதிரியாக இருக்கவும் அவளுக்கு வருத்தம், அவன் தன் அழகைக் கண்டு, தன்னை அலாக்காக தூக்கி ஒரு சுற்று சுற்றி, தனக்கு முத்தம் கொடுப்பான் என்று எதிர்பார்த்தாள், ஆனால் அவனோ அது எதுவும் இல்லாமல் தன்னிடம் பேசுவதை அவளால் தாங்க முடியவில்லை.

'என்ன ஆச்சு, இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்?' என்று கேட்டாள் *

'அதெல்லாம் ஒன்றுமில்லை, சித்து, நீ போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணு, நான் ரெடியாகி வரேன், மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி விட்டார்கள்' என்றான்

'சரிங்க இப்போ போறேன் ' என்று அவள் போய்விட்டாள்

அவனும் தன்னை ரெடி செய்துக் கொள்ள போய்விட்டான்

வித்யாவும் ரெடியாகி விட்டாள், சித்ரா அவளுக்கு ஹெல்ப் செய்தாள்,

Episode # 12

Episode # 14

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.