(Reading time: 23 - 46 minutes)

" ண்ணி ..."

 "மித்ரா " என்று இருவருமே ஒரு நேரத்தில் கூற , பதில் ஏதும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் கூர்ந்து நோக்கினாள்  சங்கமித்ரா .. அவளது பார்வை அம்புகள் அவர்களை துளைத்து எடுத்தது என்றுத்தான் கூற வேண்டும் ..

" மித்ரா " - எழில்..

" .."

" மித்ரா ப்ளீஸ் "

" வீட்டுக்கு போயிட்டு பேசலாமா ?" என்றாள்  அவள் தீர்க்கமான குரலில்.  "அண்ணி " என்றபடி மதி ஏதோ கூற வரவும் , ரெண்டு பேரும்  இங்கயே இருங்க .. நான் சாமி கும்பிட்டுட்டு  வரேன் " என்றவாறு பதிலுக்கு காத்திராமல் கோவிலுக்குள் நுழைந்தாள்  மித்ரா ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

" திக்கற்றவருக்கு தெய்வமே துணை " ! எத்தனை உண்மையான வாசகம் ? மனிதன் மண்ணில் போராடுவதற்கு கடவுள் கொடுத்த அஸ்திரமே  மனம் .. சிலருக்கு அந்த அஸ்திரமான மனம் , இதயத்தில் இருக்கிறது .. சிலருக்கோ மூளையில்  இருக்கிறது .. மனிதன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மனதில் இருந்து உதித்தாலும் சரி , மூளையின் எண்ணத்தில் இருந்து உதித்தாலும் சரி , நிதானமும் தெளிவும் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு தோல்வி என்பது கிடையாது .. ! இருப்பினும் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போலவே , பகுத்தறிவு கொண்டவனுக்கும் தடுமாற்றம் நடக்கும் ..மனமும் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் முடிவெடுக்க முடியாமல் திணறும்போது மனிதன் தோல்வியை உணர்ந்து விடுகிறான் .. !

அவன் துவண்டு விட்ட வேளையில் அவனுக்கு துணை புரிவதே உண்மையான இறையருள் ... அங்கும் இங்கும் அலைபாயும் மனதை  அடக்குவது மட்டுமே இறைவனின் கடமை .. அமைதி அடைந்த மனதை கொண்டு மீண்டும் முடிவெடுப்பது மனிதனின் கடமை .. சங்கமித்ராவும் அதே நிலையில் தான் இருந்தாள் .. அவள் மனம் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து இருந்தது ..லேசாய் அமைதியும் அடைந்திருந்தது .. சற்றுமுன் நண்பனை அறைந்தால் என்ன ? என்று தோன்றிய கோபம் புள்ளியாய் மறைந்திருக்க , இனி என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்தவள் கோவல் வாசலில் குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்த இருவரையும் பார்த்தாள் ..

" உன் கார் எங்க அன்பு ? காரை எடு !" என்றாள்  அவள் ..

" அண்ணி " என்று மதி ஏதோ சொல்ல வரவும் ,

" நீ எனக்கு நிறைய பதில் சொல்ல வேண்டி வரலாம் மதி .. அது இப்படி கோவில் வாசலில் நடக்க வேண்டாம் .. கார்ல பேசிக்கலாம் " என்றாள்  ..  மூவரும் அன்பெழிலனின்  காரில் ஏறிக்  கொள்ள , மித்ராவிடம் கேள்வி கேட்காமல் , கடற்கரையை நோக்கி காரை செலுத்தினான் அன்பு .. வழியெங்கும் அடிக்கடி அவளின் முகத்தை பார்த்து அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயன்றான் .. ஷக்தியின்  மனைவி ஆயிற்றே ! அவனிடம் இருந்து கற்றுக்கொண்ட கலைகளில் இதுவும் ஒன்றல்லவா ? மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிக்காட்ட முடியாத முகபாவத்தை வைத்து கொண்டாள்  அவள் ..

காரை பார்க் செய்துவிட்டு அவள் பக்கமாய் திரும்பினான் அன்பெழிலன் ..

" மித்ரூ "

" நீங்க ரெண்டு பேரும்  இங்க என்ன பண்ணுறிங்க  ?" தனது பத்து விரல்களையும் ஆராய்ந்து கொண்டே கேள்வி கேட்டாள்  மித்ரா ..

" அண்ணா தான் வர சொன்னாங்க அண்ணி " எழிலுக்கு முன்னதாகவே பதில் கூறினாள்  முகில்மதி ...ஏனோ அண்ணியின் மௌனம் அவள் வயிற்றில் புளியை  கரைத்தது ..எதுவாகினும் , அவள் தன்னிடம் பேச வேண்டும் என்ற பரிதவிப்பு அதி தெரிந்தது .. அதை உணர்ந்தவலும் , சட்டென நிமிர்ந்து

" நம்பலாமா ?" என்றாள் .. அவள் தன்னை பார்த்து கேட்டதும் , " ஹப்பாடா " என்று இருந்தது முகிழ்மதிக்கு..

" ம்ம்ம் ஆமா அண்ணி ..  உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சு அண்ணா வர சொன்னாங்க .. ஆனா , அதற்குள் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு " என்றாள்  இளையவளும் விளக்கமாய் .. மீண்டும் கைகளை ஆராய தொடங்கினாள்  மித்ரா .. அடுத்த கேள்விக்கு தயாராகினர் இருவரும் ..

" உங்க ரெண்டு பேருக்கும் நடுவில என்ன நடக்குது ?" என்னத்தான் அவள் முயன்றாலும் அவள் குரலில் கடுமை சிறிதும் குறையவில்லை .. மதி , எழிலின் முகத்தை பார்க்க , இமைகளை ஒரு முறை மூடி திறந்து " உனக்கு நான் இருக்கிறேன் " என்று பார்வையாலேயே ஆறுதல் கூறினான் அன்பெழிலன் ..

அதன்பின் மித்ராவை பார்த்து

" நான் முகிலாவை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் " என்றான் .. மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து விட்டு குனிந்து கொண்டாள்  மித்ரா ..

" கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைத்தால் அப்பா ,அம்மா கிட்ட சொல்லி இருக்கலாமே ! உன் அம்மா அப்பா பத்தி எனக்கு நல்லாவே தெரியும் ..நிச்சயம் உன் விருப்பத்துக்கு மாறாய் எதுவும் சொல்ல மாட்டாங்க .. அப்பறம் எதுக்கு இந்த திருட்டு தனம் ??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.