(Reading time: 23 - 46 minutes)

ண்கள் ரெண்டும் மூடச் சொல்லி காதல்கவிதை சொன்னாயே

கண்ணீர் மட்டும் மிச்சம் விட்டு நீயும் சென்று விட்டாயே

கண்ணீர் இங்கு மிச்சமில்லையே..

பிரிந்தோம் நிரந்தரமாய்

மடிந்தேன் காதலினால்

மறந்தேன் மறந்தேனே உன்னை நான் மறந்தேனே!!

தேடாதே இனி என்னை நீ ,பாடாதே  என் கவிதை நீ!

எழுதாதே இனி கடிதங்கள், எழுதாதே இனி என்னை நீ!

போதும் போதும் உந்தன் வேஷமே..போதும் போதும்!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பாடல் வரிகளை உணர்ந்தபடி காவியாவின் பார்வை அவனை துளைக்க, பதில் ஏதும் பேசாமல்மேஜையில் தலை வைத்து படுத்து கொண்டான் கதிர்...

“கண்ணு கட்டுதாகதிர்??? இனிமே இப்படித்தான் ..!” என்று கசப்பாய் புன்னகைத்தாள் காவியதர்ஷினி..

அன்று மாலை..ஷக்தியின் வீட்டில், நடிப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தனர் ஐவரும்..அவர்களில் ஷக்தி மட்டும்தான் இயல்பாய் இருந்தான்.. எழில் இறுகி போய் இருந்தான்.. முகிலா துவண்டு போயிருந்தாள்..கதிர் வாடி போயிருந்தான்..காவியாகொதித்திருந்தாள்...மித்ரா மட்டும் காதலிலும் குழப்பத்திலும் இருந்தாள். இருப்பினும் ஒருவரை ஒருவர் விட்டுத்தராமல்புன்னகத்து சமாளித்து கொண்டு இருந்தனர்.

“ சாப்பாடு ப்ரமாதம் ஷக்தி..நல்ல வேளை,இந்த லூசு சமைக்கல” என்று வழக்கம் போல தோழியை சீண்டினான் அன்பெழிலன்.. ஷக்தியின் முன்னிலையில் அவள் சகஜமாய் பேசுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.. அதை பொய்ப்பிக்கும் வண்ணம் “ சமைச்சதே மிதுதான்”என்று ஷக்தி பதில் கூறினான்...

“ சாம்பார் ரசம் மாதிரியே இருக்கவும்,இது மித்ரா தான் பண்ணி இருக்கனும்னு நினைச்சேன்” என்றபடி இப்போது கதிர் பேச்சில் இணைய,

“ உன் சமையலை சாப்பிட்டு காவியா புலம்பியதை நான் இன்னும் மறக்கல” என்றாள் மிது.. காவியா ,கதிர் இருவருமே  அன்றைய நாட்களை நினைத்து பார்த்தனர்.. அவர்களுக்குள் நல்ல நட்பு மட்டும் இருந்த வேளையில் ஒருவரின் சமையலை ஒருவர்ன் ரசித்து உண்டு கேலி பேசிய நாட்களவை.

“அன்பு ரொம்ப அழகான விஷயம்ன்னு சொல்லுறாங்க..ஆனா,அதுவே அதிகமாகும்போது சாபமாய் மாறிடுதே ! ஒரு அளவோடு பழகி தொலைச்சிருந்தால், இவனோட சுடும் சொல்ல கேட்டிருக்க வேண்டாமோ? அவனுடைய சுயனலத்திர்காக என் மனசை காயபடுத்திட்டானே.. இதோ இவனுக்கும் ஒரு தங்கை இருக்காளே..இதேமாதிரி மதியின் மனதை…” என்று மனதிற்குள் புலம்பியவள் தன் மனம் போன போக்கை எண்ணி தன் மீதே கோபமானாள்.. “ ச்ச, இவன் பண்ண தப்புக்கு இவன் தங்கச்சி என்ன பண்ணுவா?” ..மீண்டும் கதிரின் மீதே கோபம் எழுந்தது..

ஏனோ தானோ பேச்சுக்களுடன் அன்றைய மாலைகழிய, காவியாவை வீட்டில் விடுவதாய் கதிர் முன்வர,அவள் மறுத்துவிட்டாள்.. “இல்லை,எழில் என் வீட்டுலதான்  தங்குவான்..நான் அவன் கூட போறேன்” என்று கூறினாள்.. முகில்மதியின் முகத்தை கூடபார்க்க முடியாத அளவு மனபாரத்தில் இருந்தவனும் இதுதான் நல்ல வழி  என்ற தீர்மானத்தோடு அவளை அழைத்து கொண்டு கிளம்பினான்..

அவன் செல்லும்கடைசி நொடி வரை அவன் முதுகையே வெறித்தபடி நின்றாள் மதி.. “ஹ்ம்ம்ம்ம் அவ்வளவு தானா நீ ?” என்று மனதிற்குள்சுமை ஏறியது.. கதிருக்கும் தனிமை தேவைப்பட,அவன் தனது ஹாஸ்டலுக்கே கிளம்பினான்.. இறுதியாய் ஷக்தி, மிது, மதி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

“மாமா எனக்கு தூக்கம் வருது..நீங்க ரெண்டு பேரும் பால் குடிச்சிட்டு தூங்குங்க..” என்று முகில்மதி பக்கம் அர்தமுள்ள பார்வையை செலுத்திவிட்டு சென்றாள்…அதுவரை ஷக்தி மனதில் ஓடி கொண்டிருந்த சந்தேகங்கள் இப்போது நிரூபனம் ஆகியது..

ஷக்தியை பார்த்தாலேமகிழ்ச்சியுடன் துள்ளும் முகில்மதி அமைதியாய் இருந்தாள்.. அவன் உறங்கும்வரை கண்விழித்து கொண்டிருக்கும் அவனின் மனைவியோஎன்றும் இல்லாதிரு நாளாய்,இன்று உறங்க செல்கிறாள்..அவள் தனக்கும்தன் தங்கைக்கும் தனிமையைக் கொடுக்கிறாள்என்பதை அவனால் உணர முடிந்தது..

“மதி”

“என்ன அண்ணா?”

“ ரொம்ப ஃபுல்லா இருக்கு… குட்டி வால்க் போகலாம் வர்ரியா?”

“ம்ம்ம்” என்றபடி அவனுடன் நடக்க தொடங்கினாள் முகில்மதி. அவனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று யோசித்தாள் அவள்.. அதே நேரம், ஷக்தியின் அதே குழப்பத்தில் தான் இருந்தான்.. அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கும் ? என்று அனுமானிக்க முயன்றபடி பேச்சு கொடுத்தான்..

“வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க மதி”

“ம்ம்ம் நல்லா இருக்காங்க அண்ணா”

“நல்லா படிக்கிறியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.