(Reading time: 23 - 46 minutes)

" சாரி ரிஷி ..சரியாய் கவனிக்கல "

" நீ எதைத்தான் ஒழுங்கா கவனிச்ச ?"

" ப்ச்ச்ச் .. மச்சி "

" என்ன ?"

" காவியா எங்க போறா ?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

" ஏன் ?"

" சொல்லு டா ? இங்க எந்த பிரச்சனையும் இல்லையே ..அவ இங்கயே வேலை செய்யலாமே !"

" ஓஹோ காவியாவுக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்லையா ? எப்படி டா இப்படி மனசாட்சியே இல்லாமல் நடிக்கிற ? "

" ரிஷி !!!"

" கத்தாதே ..எனக்கு எதுவும் தெரியாது "

" பொய் சொல்லாத ரிஷி "

" அடேங்கப்பா , மனசுல ஒன்னு வெச்சுகிட்டு வெளில வேற மாதிரி நடிக்கிற பொழப்பு எனக்கு தெரியாதுப்பா "

" டேய் இப்போ சொல்ல முடியுமா ? முடியாதா ? " என்றான் கதிர் கறாராய் ..

" உனக்கு வேணும்னா நீயே கேட்டுக்கோ மச்சி " என்று அங்கிருந்து ரிஷி நடந்து சென்றான் ..

" பெரிய பாசமலர் சிவாஜி கணேசன் இவன் .. அவ கண்ணுல தண்ணி வந்தா , இவன் ஓவரா வெடிக்குறான்  " என்று அலுத்து கொண்டு கதிர்  , தைரியத்தை வரவழைத்து கொண்டு காவியாவின் அருகே வந்தான் .. அதே நேரம் அவர்களின் மேனேஜரும் அங்கு வந்தார் ..

" மிஸ்டர் கதிர் , இனிமே காவியா உங்க ரூம்ல தான் இருப்பாங்க .. வீ ப்ரோமோடட்  ஹேர் எஸ் டீம் லீடர்" என்றார் .. கதிர் சந்தோஷமாய் காவியாவை பார்க்க , வேலை நிமித்தமாய் லேசாய் புன்னகைத்து விட்டு , அவன் அறைக்குள் நுழைந்தாள்  காவியா ..  கதிர்தான் இன்ப அதிர்ச்சியில் இருந்தான் ..காவியா தன்னுடன் ஒரே அறையில் வேலை செய்ய போகிரளா ?  அவள் முடியாது என்றல்லவா கூறி இருப்பாள் ? அப்படி என்றால் அவளுக்கும் தன்னை விட்டு இருக்க மனமில்லை தானே ? என்று அவன் மனம் கற்பனையில் மிதக்க , ரிஷியும் அதே அதிர்ச்சியில் தான் இருந்தான் .. ஆனால் , இந்த மாற்றத்திற்கு காரணமாய் இருந்தவளோ எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்தாள்  ..

கதிர் கடைசியாய் சொன்ன வார்த்தை இன்னமும் அவளுக்குள் ஒலித்தது .. " உனக்கு கொஞ்சமாச்சும் சுயா கௌரவம் இருந்தால் கொஞ்சம் தள்ளி இரு " என்று கூறினானே ! "நான் ஏன் போகணும் கதிர் ? நீ போ !! என்னை எப்படி  காயப்படுத்திட்டு நீ பாட்டுக்கு நிம்மதியாய் வேலை பார்த்து நல்ல பேரு வாங்குவியா ? இனிமே நீ  எப்படி நிம்மதியா இருக்கன்னு நான் பார்க்குறேன் !" என்று சூளுரைத்து கொண்டாள்  அவள் ..

விருப்புக்கும் வெறுப்புக்கும் நூல் அளவு தான் வேறுபாடு .. அவர்களின் உறவை பொருத்தவரை காவியா அந்த அளவை தாண்டி இருந்தாள்  .. அவள் இதயத்தில் ஒவ்வொரு அணுவும் அவனை முற்றிலுமாய் வெறுத்தது ! அவளுக்கு வலிக்கும் வலி , அவனும் உணர வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தாள்  ..அதற்காகத்தான் இந்த இடமாற்றமே !

இதை ஏதும் அறியாதவனாய் கிடைத்த தனிமையில் அவளிடம்பேச்சு கொடுத்தான் கதிர்.

“ தர்ஷினி..”

“...”

“தர்ஷினி உன்னத்தான்”

சுற்றியும் முற்றியும் பார்த்தவள், “ நீங்க என்னை கூப்பிட்டிங்களா கதிர் சார்? பொதுவா என்னை எல்லாரும் காவியான்னு தான் கூப்பிடுவாங்க..அதான் நீங்க தர்ஷினின்னு சொன்னதும் எனக்கு தெரியல”என்றாள் அவள் நக்கலாய். அவள் சார் போட்டு பேசியதிலேயே அவளின் மனதை புரிந்து கொண்டான் கதிர்.

“ உன்னுடைய முன்னேற்றத்துக்கு என் வாழ்த்துக்கள் மிஸ் காவியா” என்றான் அவனும் விடாமல்.

“உங்களுடைய வருங்கால தோல்விகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்சார்!”

“புரியல!!”

“உங்களுக்கு புரிய வைப்பது என் கடமை இல்லைசார்...நான் இப்போ என் வேலையை பார்க்கனும் நாம அப்பறமா பேசலாமே”என்றவள் அவன் முகம் கூட பார்க்காமல் கணினியின் பார்வையை பதித்திட, அங்கேயே நின்றான் கதிர்.

“என்ன சார் வேணும் உங்களுக்கு?” என்றாள் அலுப்பாய்..

“இன்னைக்கு நீ எங்க வீட்டுக்கு வர்ர தானே?”

“மன்னிக்கனும் சார்,வேலை நேரத்துல எனக்கு வெட்டி பேச்சு பேசுறது சுத்தமாய் பிடிக்காது.. உங்களுக்கு என்னால் இப்போ பதில் சொல்ல முடியாது!” என்றுவிட்டு கணினியில் பாடலை உயிர்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.