(Reading time: 23 - 46 minutes)

 

ம்ம்ம் படிக்கிறேன்”

“அப்பபோ என்னை மாதிரி அரியர் வெச்சுக்கோ மதி..அரியர் இல்லாத காலேஜ் லைஃப் ரொம்பவேஸ்ட்” என்றான்.

“ அய்யோ அதெல்லாம் எனக்கு வராது அண்ணா..அதுவும் பைனல்யெர் சோ சின்சியரா படிக்கிறேன்” என்றாள் இளையவள்.

“ அப்போ படிப்பில் பிரச்சனை இல்லை.. வீட்டிலயும் ஒன்னும் இல்ல…வேறென்ன இருக்கும்?”என்று மௌனமாய் சிந்தித்தவனின் உள்மனம் “காதலா?” என்று கேட்டதும் நடயை நிருத்தி தங்கையை ஆராய்ந்தான் ஷக்தி.. அவன் நின்றது கூடதெரியாமலவள் நடந்து கொண்டிருந்தாள்…

“இப்படியும் இருக்குமா? என் தங்கச்சி காதலிக்கிறாளா? தன் வாழ்க்கையை முடிவெடுக்கும் அளவிற்கு வளர்ந்துட்டாளாஇவள் ?” அவனுக்கு ஒரு புறம் பொருப்புணர்ச்சி எழுந்தாலும்,இன்னொரு புறம் சிரிப்புத்தான் வந்தது.. அன்று அவன் இருந்த மனநிலையா?ரம்யமான அந்தைரவா?அல்லது தங்கையின் கவலை நிரம்பிய முகமா?ஏதோ ஒன்று ஷக்தியை சாந்தமாய் வைத்திருந்தது.. சாலையோர சுவரில் ஏறி அமர்ந்தவன், தங்கையையும் அருகில் அமர வைத்துவிட்டு பேசினான்..

“ இன்னைக்கு மதியழகன் அண்ணாவும் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்லமதி ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ ம்ம்ம்ம்.. ஆமா, கலகலப்பாய் இருந்திருக்கும்”

“அதுக்காக மட்டும் சொல்லல,  என் காதல்வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் அவருக்கும் பெரிய பங்கு இருக்கு”

“ம்ம்”

“அன்னைக்கு அந்த ஃபோன் காலில் நான் அவர்கிட்ட மனசு விட்டு பேசலைன்னா, எங்க கல்யாணம் எப்படி நடந்துருக்கும் தெரியல”

“ம்ம்ம்”

“நம்மள விட வயசில்பெரியவங்ககிட்ட அப்பப்போ மனசு  விட்டு பேசுறது தப்பில்ல..”

“ம்ம்ம்”

“அதுவும் காதல்விஷயத்துல,நாம குழம்பி போயி இருக்கும்போது யாரச்சும் ஒருத்தர் கிட்டமனசு விட்டு பேசுறது நல்ல விஷயம் தான்”

“..”

“ மித்ரா அவ மனசுல இருந்த காதலை வைஷூ கிட்ட சொன்னது இல்ல..ஆனா அன்புகிட்ட சொல்லிருக்கா..இதை ஏன் சொல்லுறேன் தெரியுமா?”

“இல்லை” என்பதுபோல் தலையாட்டினாள் அவள்..

“ ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்கு தான் புரியும்.. சோ பொண்ணுங்க கிட்ட தான் நீ மனசு விட்டு பேசனும்னு இல்லை”

“ ஒரு பொண்ணோட மனசை புரிஞ்சுக்காத ஆணாய் நான் இருக்கலாம்..ஆனா,தங்கச்சி மனசு புரிஞ்சுக்காத, அண்ணா நான் இல்லம்மா” என்று கூறி ஷக்தி கூர்ந்து பார்க்கவும்,கேவலுடன் அவன் தோள் சாய்ந்தாள் முகில்மதி..

தேநேரம், எழிலின் காரில் மௌனமாய் அமர்ந்திருந்தாள் காவியா..

எழிலும் கிட்டதட்டஅதேமனநிலையில் அமைதியாய் காரோட்டினான்.. பின்னாலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும்,அவன் கொஞ்சம் இயல்புநிலைக்கு வரகாவியா அப்போதும் அசையாமலிருந்தாள்..

“ச்ச,இவளை எப்படி கவனிக்காமல்விட்டேன்?” என்று தன்னைத்தானேகடிந்து கொண்டான் அவன்..

“கில்லர்…கில்லர்..என்னை பாரேன்”

“ ஓ,நானும் உன் காரிலிருக்கேன்னு இப்போத்தான் நியாபகம் வருதா டா?”

“ஹேய் அம்மு சாரி டீ”

“ச்ச,பேசாதே…எப்போடாஉன்னை பார்ப்போம்..மனசுல இருக்குற பாரத்தை கொட்டி தீர்ப்போம்ன்னு நினைச்சேன்..ஆனா,உனக்கு என் நியாபகமே இல்லைல? போடா!!”

“ஹேய், எப்போடா என்னை திட்டலாம்ன்னு காத்துட்டு இருப்பிங்களா டீ ? ஒருத்தி மூணாவது மனுஷி மாதிரி பேசுறா,ஒருத்தி தூக்கி எறிஞ்சுட்டு போறா..நீயும் திட்டுற..என்னை பார்த்தாலே தூக்கி வீசி பந்தாடனும்னு தோனுதா?” வலி மிகுந்த குரலில் கேட்டான் எழில்.. அவனிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லைகாவியா..

“டேய் காரை நிறுத்து”

“வேணாம் அம்மு,வீட்டுல போயி பேசிக்கலாம்..”

“ ஒரு மண்ணும்வேணாஆம்..காரை நிறுத்துன்னு சொல்றேன்ல?” என்று அவள் அதட்டல் போடவும் காரை நிறுத்தினான் அவன்..அவன் முகத்தைகைகளில் ஏந்தினாள் காவியா.

“ இது என் ஹிட்லர் இல்ல..அவன் இப்படி உடைஞ்சு போக மாட்டானே..சொல்லு என்னச்சு” என்று கனிவாய் அவள் வினவவும் மடை திறந்த வெள்ளமாய் நடந்ததை கூறினான் அவன்.. அதே வேளை முகில்மதியும் கூறினாள். ஷக்தியின் பதில் என்ன?அடுத்த அத்யாயத்தில் தெரிஞ்சிப்போம்.

தொடரும்

Episode # 31

Episode # 33

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.