(Reading time: 23 - 46 minutes)

" மித்ரா !!!"

" பதில் மட்டும் சொல்லு "

" நீ கேட்ட கேள்விக்கு ஒரே நிமிஷத்துல நான் விளக்கம் தர முடியாது  மித்ரா .. ஆரம்பத்தில் இருந்து என்ன நடந்ததுன்னு நான் உனக்கு சொல்லணும் " என்றான் அவனும் தீவிரமாய் .. ஒரு நெடிய பெருமூச்சு விட்டவள்

இப்போது நிமிர்ந்து

" சொல்லு .. நான் கேட்குறேன் .." என்றாள் .. "உப்ப்ப்ப்ப்" என்று பெருமூச்சு விட்டவன், முகில்மதியை  சந்தித்ததில் தொடங்கி , அவளுக்கு உதவியதும் , அதன் பின் காதல் கொண்டதையும் கூறி முடித்தான் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - உதய் - 26, நந்திதா - 28... சிறகடித்து பறக்குமா இவர்களின் காதல் எனும் பட்டாம்பூச்சி εїз...!

படிக்க தவறாதீர்கள்...

" முகில்மதி சின்ன பொண்ணு .. " என்று ஆரம்பித்தவள் , அவளின் முகத்தை பார்த்தாள் , அழுவதற்கு கண்ணீர் துளிகள் காத்திருந்தன .. சட்டென முகத்தை திருப்பி கொண்டாள்  மித்ரா .. " தேவை இல்லாமல் அழாத மதி .. நீ அழுதா உன் அண்ணனுக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல ? நான் இப்போ உன்னை ஏதும் குறை சொன்னேனா ? எதுக்கு அழற ?" என்றாள்  .. அடுத்த நொடி " அண்ணி " என்றபடி அவள் தோளில்  சாய்ந்துகொண்டு அழுதாள்  முகில்மதி ..

" ஷ்ஷ்ஷ்ஷ் .. நான் சொல்லறது உனக்கு புரியலையா ? நான் உன்மேல தப்புன்னு எதையும் சொல்லல .. வீணா அழாதே " என்றவள் எழிலை பார்த்தாள்  ..

" உன் மேல கண்டிப்பா தப்பு இருக்கு அன்பு .. உன்மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சு இருந்தோம் ..? உன் காதலை நான் குறை சொல்லல ..ஆனா அதை நீ மறைச்ச விதம் தப்புதான் !  அவ சின்ன பொண்ணு ! அப்படின்னு சொல்லியே நாங்க வளர்த்துட்டோம் ..அதுனால , மனசுல இருக்குறதை சொல்லறதுக்கு அவளுக்கு சந்கோஜமாய்  இருந்திருக்கலாம் .. ஆனா உனக்கென்ன ? பெரியவங்க கிட்ட பேச உனக்கு பயமாய் இருந்திருக்கலாம் ..ஆனா என்கிட்டே எதை வேணும்னாலும் பேசுற அளவுக்கு நான் உனக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கேன் !"

" .."

" நானே பல தடவை , யாரையாச்சும் காதலிக்கிறியான்னு கேட்டு இருக்கேன்ல ? ஒரு வார்த்தை சொல்லுறதுக்கு என்ன ? "

" .."

" நீ நல்லவன் ..எங்களுக்கு நல்ல தெரிஞ்ச பையன் .. உன்னைவிட  நல்ல பையனை நாங்க ஏன் தேடி போயிருக்க போறோம் ? நீ முன்னாடியே சொல்லி இருந்தா , நானே அத்தை மாமா கிட்ட சொல்லி இருப்பேனே அன்பு ? என் காதலுக்கு நீ உதவி செய்யும்போது , உன் தோழியாய் நான் உனக்கு உதவி இருக்க மாட்டேனா ?"

" மித்ரா, அப்போ உனக்கு இதில் சம்மதமா ?" ஆச்சர்யமாய் கேட்டான் அன்பெழிலன் .. நண்பனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள்  மித்ரா ..

" நான் இன்னும் பேசி முடிக்கலையே  அன்பு " என்றாள்  .. இருவருமே அவள் என்ன கூற போகிறாள் ? என்று பார்த்து கொண்டிருக்க , மனதில் பட்டத்தை பேசினாள்  மித்ரா ...

" எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நீ இதை சொல்லி இருந்தால் , நான் உனக்குத்தான் சப்போர்ட் பண்ணி இருப்பேன் அன்பு "

" .."

" ஆனா "

" என்ன ஆனா ?"

" இப்போ நான் ஷக்தியின்  மனைவி " .. "ஷக்தியின்  மனைவி " என்று கூறும்போதே அவள் மனதுக்குள் பரவசம்  உண்டானது .. (அஹெம் அஹெம் ..இந்த ரணகளத்துளையும்  உனக்கு கிளுகிளுப்பா மிது ?)..

" இப்போ நான் ஷக்தியின்  மனைவி , முகில்மதிக்கு  அண்ணி .. கல்யாணத்துக்கு முன்பு நான் உன் தோழியாய் இருந்து  முடிவெடுத்து இருப்பேன் .. ஆனா இப்போ நான் இந்த வீட்டின் முதல் மருமகள் ..எனக்குன்னு சில பொறுப்பும் கடமையும் இருக்கு " என்று அவள் கூறவும் , " இவளுக்கு தலையில் ஏதும் அடி பட்டு இருக்கா என்பது போல பார்த்தான்  அன்பெழிலன் ..சில முக்கியமான நேரங்களில் மித்ரா பொறுப்பாய் பேசுவாள்தான் .. ஆனால் , அவள் இந்த அளவிற்கு பேசுவாள் என்பதே அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது ..

" நான் இன்னும் சின்ன பொண்ணு இல்ல அன்பு .. கல்யாணத்துக்கு முன்னாடி நான் என்ன முடிவு எடுத்தாலும் அது என்னை மட்டும் தான் பாதிக்கும்.. அப்படியே அது தவறாய் போனாலும் , செல்லமாய் அதட்ட அம்மா , எனக்காக சப்போர்ட் பண்ண அப்பா இருந்தாங்க .. இப்பவும் எல்லாரும் இருக்காங்க தான் .. ஆனா , இப்போ அந்த சலுகையை  என் சுயநலத்துக்காக பயன்படுத்த முடியாது .. நீ என் நல்ல நண்பன் .. உன் காதலை என்கிட்டே நீ  சொல்லல ..அதற்கான கோபம் எப்போ போகும்னு எனக்கு தெரியாது .. ஆனா , மித்ராவோட அண்ணியாக நான் உனக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்ல விரும்புறேன் ..

என் புருஷன் கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல .. என்னால உண்மை தெரிஞ்ச பிறகும் தெரியாத மாதிரி ஷக்தி கிட்ட நடிக்க முடியாது .. நீங்க ரெண்டு பேரும்  பேசி முடிவெடுத்து ஷக்தி கிட்ட இதபத்தி பேசணும் .. இல்லன்னா , நீங்க ஊருக்கு கிளம்பின அடுத்த நிமிஷமே நானே ஷக்திகிட்ட நடந்ததை சொல்லிடுவேன் .. என்னால ரெண்டு நாளைக்கு மேல ஷக்தி கிட்ட எதையும் மறைக்க முடியாது .. எனக்கு அந்த சிரமத்தை கொடுக்காம, சீக்கிரமா பேசுவிங்கன்னு  நம்புறேன் " என்றாள்  மித்ரா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.