(Reading time: 23 - 46 minutes)

களே மதி..உன்னைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சில் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கிப் பெருகுகின்றன..உன்னை மகளாய்ப் பெற நான் என்ன தவம் செய்தேனோ எனத் தோன்றுகிறதம்மா...

ஆனாலும் மனதிற்குள் ஒரு பெருங்கவலை...

தந்தையே என்னால் உங்களுக்குக் கவலையா?என்ன சொல்கிறீர்கள் தந்தையே..?என் மனம் துன்பமடைகிறது தந்தை அவர்களே..என்று சொல்லியபடி அதிவீரன் அருகில் வந்து தந்தையின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் மதிவதனி.

இல்லை மகளே இல்லை இல்லை..உன்னால் கவலையில்லை மகளே..இவ்வளவு அழகும் அறிவும் திறமையும் அடக்கமும் பணிவும் பாசமும் கொண்ட உன்னை உனக்கேற்ற ஒருவனைத் தேடி திருமணம் செய்து வைக்க என் மனம் விழைகிறது மகளே..அவ்வாறான குணனலன்களைக் கொண்ட ஒருவன் உனக்கேற்றவன் எங்கே இருக்கிறானோ?என்றகவலையே அதம்மா...

தந்தையே என்ன சொல்கிறீர்கள்?எனக்குத் திருமணமா?...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பின் என்ன மகளே..?நீ இப்பொழுது பதினெட்டு வயதை எட்டிவிட்டாய்..பெற்றவர்களாய் எங்கள் கடமையை நாங்கள் செய்ய வேண்டாமா?..

ஆம் மகளே தந்தை சொல்வது சரிதானே..?உனக்குத் திருமணம் செய்துவைத்துக் கண்குளிர மனம் குளிரக் காண வேணும் என எங்கள் நெஞ்சு ஏங்குகிறது கண்ணே..பொங்கும் தாய்ப்பாசத்தோடு மகளின் தலையை வருடினார் ராணி ருக்மா...

தந்தையும் தாயும் கூறியதைக் கேட்ட மதிவதனியின் முகம் வாட்ட முற்றது..

வேண்டாம்.. வேண்டாம்..எனக்குத் திருமணம்  வேண்டாம்..தயவு செய்து இன்னொரு முறை அப்படிக் கூறாதீர்கள் தந்தையே...தாயே நீங்களும் தந்தையோடு சேர்ந்து கொள்ளாதீர்கள்..எனக்குத் திருமணம் செய்து வைத்து இன்னொரு நாட்டிற்கு என்னை அனுப்பி வைத்து உங்களிடமிருந்து என்னைப் பிரிக்காதீர்கள்...

உங்களை பிரிந்து வாழ்வதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.உங்கள் இருவரையும் தம்பி சுந்தரனையும் பிரிந்து வாழ்வதைவிட கொடுமையானது வேறு ஒன்றும் இருக்க முடியாது.என் திருமணப் பேச்சை இத்தோடு நிறுத்தி விடுங்கள் தந்தையே..கண்களில் இருந்து கண்ணீர் கன்னங்களில் வழிய மதிவதனி வருத்தமுற்றுப் பேசவும்..

அன்பு மகளே..நானும் கூட என் பெற்றோர் என்னிடம் திருமணம் பற்றிப் பேசிய போது இவ்வாறேதான் பேசினேன்.நானும் நீயும் மட்டுமல்ல உலகில் எல்லாப் பெண்களும் தன்னிடம் பெற்றவர்கள் திருமணம் பற்றிப் பேச்செடுத்தால் நீ கூறிய காரணத்தைத்தான் கூறுவார்கள்.பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் பிரிய முடியாது என்பர் ஓடியாடி விளையாடிய பிறந்தவீட்டைப் பிரிய முடியாதென்பர்.

ஆனால் திருமணம் ஆகிவிட்டால் பிறந்தவீட்டில் வந்து தங்குமாறு  கெஞ்சினாலும் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்க யோசிப்பார்கள்.அப்போது கணவனும் கணவன் வீடுமே பெரிதாய்த் தோன்றும்.இது எல்லாப்

பெண்களுக்கும் பொதுவானது.எல்லாம் சரியாகி விடும்...காலம் காலமாய் நடப்பதுதான் இது..என்று சொல்லி மகளை அணைத்துக் கொண்டார் ராணி ருக்மாதேவி.

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று மதிவதனியை சமாதானம் செய்ய.ஆனாலும் அவள் பெற்றவர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்தாளேயன்றி முழு மனதோடு திருமணத்திற்கு இசையவில்லை.

ஆனாலும் எல்லாம் அவனைப் பார்க்கும் வரைதான்.

மகள் மதிவதனி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது மன்னர் அதிவீரனுக்கு பெரும் மகிழ்ச்கியைக் கொடுத்தது.உடனே எந்த நாட்டு மன்னனிடமாவது வலியச் சென்று அவன் மகனுக்கு தன் பெண்ணைத் தருவதாகவெல்லாம் சொல்லி மகளின் திருமணத்தை எடுத்தோம் கொடுத்தோம் என்றெல்லாம் செய்து முடிக்கத் தயாராக இல்லை அவர்.அரசவையைக் கூட்டி மந்திரிப் பிரதானிகள்,ராஜகுரு,ஜோதிடர்கள் அனைவரின் யோசனையையும் கேட்டார்.அவ்வாறு அவர் அனைவரையும் கூட்டி ஆலோசிக்கையில் இளவரசி பிறந்த நேரத்தில் அவளின் ஜாதகத்தைக் கணித்த அஜ்ஜோதிடர்கள் இளவரசியின் ஜாதகம் இனிதான் அதற்குரிய வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் என தெரிந்தே இருந்தனர்.என்ன பரிகாரம் செய்தாலும் சிலருக்கு இப்படித்தான் நடக்கவேண்டுமென்பது விதி என்றால் அப்படித்தானே நடக்கும்.விதியை யாரால் மாற்றி எழுத முடியும்?இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிற அவர்களால் ஏதும் மன்னனிடம் சொல்ல முடியவில்லை.என்ன நடக்குமோ?அது நடந்தே தீரும் என்று அமைதியாய் இருந்தனர்.ஆனானப்பட்ட வியாழனென்றும் பிருகஸ்பதி என்றும் சொல்லப்படும் குருபகவான் ஒருவரின் ஜாதகத்திற்கு குழந்தை பேற்றையும் சர்வமங்களத்தையும் கொடுக்கக்கூடியவன் என்று சொல்லப்படுபவனுமாகிய முழுசுபக்கிரகம் எனச் சொல்லப்படுபவனுமாகிய ஜாதகத்தில் எந்த இடத்தில் அவனின் ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் பார்வை படுகிறதோ அந்தப் பார்வையால் ஜாதகருக்கு விசேஷ நற்பலங்கள் ஏற்படும் என்ற போற்றுதலுக்கு உரியவனான ஒன்பது கிரகங்களில் முதன்மையானவனாகிய குருபகவானாலேயே தன் மகளின் ஜாதகத்தில் இருந்த கொடுமையான கெடுபலனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பையே மாற்ற முடியாமல் தாங்க முடியாத மனத் துன்பத்திற்கு ஆளானபோது மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம் என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு மனதைச் சமாதானம் செய்து கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.