(Reading time: 23 - 46 minutes)

வீரர்களே அழைத்து வாருங்கள் அவ்வாலிப வீரரை..ஆஹா..ஆஹா..எத்தகைய துணிச்சலான செயலைச் செய்திருக்கிறார் அவ்வாலிபர்..அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது நம் கடமை..ஆணையிட்டார் மன்னர் அதிவீரன்.

ஈட்டி ஏந்திய இரு வீரர்கள் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவ்வாலிபன் சற்றே தயங்கி நிற்க அவனருகில் சென்ற வீரர்கள் அவனை மன்னர் அழைப்பதாகக் கூற அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் புரியாமல்..என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டான்.திகைத்துப்போனார்கள் அவ்விரு வீரர்களும்.

காரணம் அவ்வாலிபன் பேசியது தமிழில் இல்லை.புரியாத ஒரு மொழி.வாலிபனுக்கு இவர்கள் பேசியது புரியவில்லை.இவர்களுக்கு வாலிபன் பேசியது புரியவில்லை.சைகையிலேயே பேசி அவனை மன்னரிடம் அழைத்து வந்தார்கள் அவ்விரு வீரர்களும்.ஒரு வழியாய் மன்னர் அதிவீரனின் முன் வந்து நின்றான் அவ்வாலிபன்.

அவன் தோற்றமும் அவன் அணிந்திருக்கும் ஆடையும் அவனை ஓர் அன்னியனைப் போலவே காட்டுவதை அதிவீரனால் உணர முடிந்தது.என்றாலும் அவன் மத யானையை அடக்கி மக்களைக் காப்பாற்றியவன் அல்லவா?அவன் யாராய் இருந்தால் என்ன?அவனுக்கு நன்றி சொல்வது நம் கடமை என நினைத்தார் அதிவீரன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ராஜா..வணங்குகிறேன்..என்று சொல்லியபடி மிகப் பவ்யமாகத் தலை குனிந்து அதிவீரனை இரு கரங்கூப்பி வணங்கினான் அவ்வாலிபன்.

ராஜா..என அவன் விளித்த ஒற்றை வார்த்தை மட்டுமே புரிந்தது அதிவீரனுக்கு.அடுத்ததாய் அவன் சொன்ன வணங்குகிறேன் என்ற வார்த்தை தமிழில் இல்லாமல் வேறு மொழியில் இருந்ததால் அதிவீரனுக்குப் புரியவில்லை.அவ்வார்த்தையைத் தலைவணங்கி கைகூப்பிச் சொன்னதால் வணங்குவதாகச் சொல்லியிருப்பான் எனப் புரிந்தது.

இவன் யார்?எங்கிருந்து வந்தவன்?எதற்காக இன் நாட்டிற்கு வந்துள்ளான்?இவனைப் பார்த்தால் நம் தேசத்தவன் போல் இல்லையே?இவன் பேசும் மொழியும் புரியாத மொழியாக அல்லவா உள்ளது?என்ன நோக்கத்தோடு இங்கு வந்துள்ளான் எனப் பலவாறு சிந்தனை எழுநதது அதிவீரனிடத்தில்.பின்னர் அவ்வாலிபனைப் பார்த்து தாங்கள் யார்?தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?உங்களைப் பார்த்தால் எம் தேசத்தவராய் தோன்றவில்லையே?நீங்கள் பேசும் மொழியும் கூட எங்களுக்கு அன்னியமாகப் படுகிறதே?உண்மையைச் சொல்லுங்கள் தாங்கள் யார்?என்று அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பினார்.

மௌனமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மதிவதனி அவன் என்ன சொல்லப் போகிறானோ என்பதை அறிய மிக ஆவலாய் இருந்தாள்.இவந்தான் எவ்வளவு அழகன்...இவன் கண்கள்தான் எத்தனை அழகு..பேசும் கண்கள் என்பது இதுதானோ..அவனின் வீரம் செறிந்த திண்ணிய தோள்களும்..முகத்தில் தெரிந்த வீரத்தோடு கூடிய அலட்சிய பார்வையும்..ஆண்களுக்கு அழகையும் வசீகரத்தையும் தரும் அவனின் கோதுமை நிற உடலும்..மெல்லிய மீசையும்..தரையில் காலூன்றி நிற்கும் பாவமும் எதற்கும் அஞ்சாதவன் நான் என்று சொல்வதைப்போல் இருந்த அவன் தோற்றமும்...இதுவரை எந்த ஆணையும் இது போல் பார்க்காத நம்மை இவனை மட்டும் பார்க்கத் தூண்டுவது எது..?போட்டிக்கு வந்து கலந்து கொண்ட எந்த நாட்டு இளவரசனையும் காண வேண்டும் எனத் தோன்றாத எண்ணம் இவனை மட்டும் பார்க்கத் தூண்டுவது ஏன்?நாம் இவனை இப்படிப் பார்ப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள் என நினைத்தவள் சட்டென அவனிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.ம்ஹூம்..எல்லாம் சில நொடிகள் தாம்.அவளைக் கேட்காமலேயே கட்டுப்பாடின்றி அவள் கண்கள் மீண்டும் அவனிடம் வந்து லயித்தது.

மன்னர் அதிவீரன் கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் தர முடியவில்லை.அவர் ஏதோ கேட்கிறார் என்பது புரிகிறது.ஆனால் அவற்றிற்கு பதில் தரமுடியாமல் விழித்தான் அவ்வாலிபன்.காரணம் மொழி.

ராஜா(இது எல்லா மொழியினருக்கும் புரியும் ஒரு சொல்)..நீங்கள் கேட்கும் கேள்விகள் எனக்குப் புரியவில்லை என்றான் அவன்.அப்போதுதான் அதிவீரன் இவ்வாலிபனோடு பேச மொழி தடையாக உள்ளதே இவன் பேசும் மொழி என்ன மொழி என்றே புரியவில்லையே என்ன செய்வது என்று சிந்தித்தார்.சற்று நேரம் சிந்தித்தவர் கூட்டத்தினரைப் பார்த்து இவ்வலிபன் பேசும் மொழி அறிந்தவர்கள் இங்கு யாரும் உள்ளீறா?என வினவினார்.

மன்னர் அவர்களுக்கு வணக்கம்..என்றபடி வயதான அந்தணர் ஒருவர் அவ்விடம் வந்து நின்றார்.மன்னர் அவர்களே இவர் பேசும் மொழி சமஸ்கிருதமும் மகத மொழியும் கலந்த  மொழி.நான் சிறிது காலம் காசிமா நகரில் வாழ்ந்த காலத்தில் இம்மொழி எனக்குப் பரிச்சயம் ஆனது.எனவே இவர் பேசுவதை ஓரளவு என்னால் புரிந்துகொள்ள முடியும் எனவே நினைக்கிறேன் மன்னா என்றார் அதிவீரனை வணங்கியபடி.

ஆஹா..ஆஹா அப்படியாயின் மிக நன்று...இவ்வாலிபர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து சொல்லுங்கள் அந்தணப் பெரியவரே என்றார் மன்னர் அதிவீரன்.

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலோடு.. இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தாள் மதிவதனி.

மன்னர் அவர்களே..இவ்வாலிபர் சொல்கிறார்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.