(Reading time: 23 - 46 minutes)

னைவரின் ஆலோசனையின் படி முடிவு ஒன்று எடுக்கப்பட்டது.அதிவீர பாண்டியன் தன் மகள் மதிவதனிக்குத் திருமணம் செய்ய விழைவதால் இளவரசி மதிவதனியை மணம் செய்து கொள்ள விரும்பும் இளவரசர் அதிவீர பாண்டியனால் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.பல முனைப் போட்டியாய் மூன்று வித போட்டிகள் நடத்தப்படும்.அம்மூன்று போட்டிகளிலும் ஜெயிப்பவர்களுக்கிடையே மீண்டும் இரு போட்டிகள் நடத்தப்படும்.அவ்விரண்டிலும் ஜெயிப்பவர்களுக்கிடையெ மீண்டும் போட்டி நடை பெறும்.

இவ்வாறு நடத்தப்பட்டுக் கடைசியாய் அனைத்துப் போட்டியாளர்களையும் ஜெயித்து வெற்றி பெறும் வீரனான இளவரசரே மதிவதனியைத் திருமணம் செய்யத் தகுதியானவராகக் கருத்தப்படுவார்.இப்படியாக ஓலை எழுதப்பட்டு போட்டிகள் ஆரம்பிக்கும் நாளும் குறிக்கபட்டு  அவ்வோலையோடு மதிவதனியின் உருவம் வரையப்பட்ட அழகோவியமும் இணைக்கப்பட்டு சேர,சோழ நாடுகளுக்கு மட்டுமின்றி அக்கம் பக்கத்து ஐம்பத்தைந்து தேசங்களுக்கும் அனுப்பப்ட்டது.

அவ்வோலையைக் கண்டமாத்திரத்தில் அதனுடன் இருந்த மதிவதனியின் அழகோவியம் கண்டு அனைத்து தேசத்து இளவரசர்களும் சொக்கிப்போயினர்.இவளே தமக்கு மனைவியாக வரவேண்டுமென ஏங்க ஆரம்பித்தனர்.கட்டாயம் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மதிவதனியை தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் எனக் கனா காண ஆரம்பித்தனர்.அந்தந்த நாட்டு மன்னர்களோ தன் மகன் அதிவீர பாண்டியனின் மகளை மணப்பதன் மூலம் அதிவீர பாண்டியனின் உறவு தம்மோடு எப்படி மேம்படும்

அதனால் தம் நாட்டிற்கு எத்தகு நன்மைகளும் தமக்கு எத்தகு புகழும் ஏற்படுமெனவெல்லாம் மனக் கோட்டை கட்டினர்.பாண்டிய நாட்டோடு அதுவும் அதிவீரனோடு சம்பந்தி உறவு என்றால் சும்மாவா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவசியம் தன் மகனைப் போட்டியில் கலந்து கொள்ள அனுப்புவதாகவும் தங்களுக்கு அதிவீர பாண்டிய மன்னர் அழைப்பு விடுத்ததை மிகப் பெரும் கௌரவமாகக் கருதுவதாகவும் பதில் ஓலைக் கொடுத்தனுப்பினர் அனைத்து மன்னர்களும். 

போட்டி நடக்கவிருந்த அந்த நாளும் வந்தது.போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றி பந்தல் அமைக்கப்பட்டு மன்னர் குடுபத்தினரும் மற்ற முக்கியமானவர்களும் அமர்ந்து போட்டிகளைக்காண மேடைகளும் அவற்றில் இருக்கைகளும் போடப்பட்டன.

இரண்டு நாள் முன்னதாகவே பிற நாட்டு இளவரசர்களெல்லாம் வந்தாயிற்று.போட்டிகள் ஆரம்பித்த முதல் நாள் மேடையில் நடு நாயகமாக மன்னர் அதிவீரன் பக்கத்தில் ராணி ருக்மா அதிவீரனின் வலது பக்கம் மதிவதனி.. ருக்மாவுக்கு இடப்பக்கம் சுந்தர பாண்டியன் அமர்ந்திருக்க மந்திரிப்பிரதானிகளும் மற்றவர்களும் சற்று தள்ளி இருக்கைகளில் அமர்ந்திருக்க போட்டிகள் ஆரம்பித்தன.இளவரசர்கள் வருவதும் போட்டிகளில் கலந்து கொள்வதுமாயும் இருந்தனர்.அப்படிப் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் இளவரசர்கள் அங்கே மேடையில் அமர்ந்திருக்கும் மதிவதனியைப் பார்த்து அவள் அழகினைக்கண்டு அசந்து போய் ஒரு நிமிடம் கண்களை இமைக்கவும் மறந்து போயினர்.அவர்கள்தான் அவளைப் பார்த்தனரேயன்றி மதிவதனி அவர்கள்   எவரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவளுக்குத் திருமணம்  செய்து கொள்ள விருப்பமே இல்லை எனும் போது அவள் எந்த இளவரசனை ஏறெடுத்துப் பார்க்கப் போகிறாள்?அவள்  குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். 

போட்டிகள் ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் இளவரசர்கள் வந்து போட்டிகளில் கலந்து கொள்வதும் தோற்றுப்போய் வெளியேறுவதுமாய் இருந்தனர்.

மூன்றாம் நாள்.அன்று என்னவோ போட்டிகளைக்காண வந்திருந்த மக்களின் கூட்டம் மிகுதியாய் இருந்தது.

கட்டுக்கடங்காத கூட்டம்.நெரிசல்.உட்கார இடமின்றி பெரும்பாலோர் நின்று கொண்டே போட்டிகளை கண்டு யாராவது எப்போட்டியிலாவது ஜெயித்தால் கைதட்டி ஆரவாரம் செய்வதும் வாழ்க கோஷம் போடுவது மாக இருந்தனர்.அப்படி அவர்கள் செய்யும் சப்தமும் கைத்தட்டல்களும் பல மைல்களுக்கு அப்பாலும் சென்று கேட்டது.

இன்னிகழ்வுகள் நடக்கும் இடத்திற்கு அப்பால் வெகு தூரத்தில் இலக்கின்றி வந்து கொண்டிருந்தது ஓர் குதிரை.அதன் மீது ஆரோகணித்திருந்த அந்த வாலிபன்...வேண்டாம் அவனை வருணிக்க வேண்டாம்.அது தேவையே இல்லை.கிட்டத்தட்ட குதிரைவீரனைப் போலவே இருந்த அவனின் கண்கள் மட்டும் மிக லேசான  நீல நிறமானக் கண்மணிகளைக் கொண்டதாக பார்ப்பவர்களைச் சுண்டியிழுக்கும் அழகோடு இருந்தன. இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சொல்ல வேண்டுமானால் நீண்ட நாசியும் செதுக்கிய தாடையுமாக ரோமாபுரி வீரனைப்போல் கன கச்சிதமாக மிகக் கம்பீரமாக இருந்தான் அவ்வாலிபன்.எந்த இலக்குமின்றி குதிரைமீது ஆரோகணித்து வந்தவன் செவியில் வெகு தூரத்திலிருந்து வந்த... மக்கள் ஏற்படுத்திய அந்த சப்தம் விழ சற்று நிதானித்தான்..பின் என்ன நினைத்தானோ?குதிரையை ஒரு தட்டு தட்டி சப்தம் வந்த திசை நோக்கிச் செலுத்தினான்.வெகு விரைவாகவே போட்டி நடக்கும் இடம் வந்து சேர்ந்த அவன் குதிரையிலிருந்து குதித்து அதன் காதில் ஏதோ சொல்லவும் அவன் என்ன சொன்னானோ அது என்ன புரிந்து கொண்டதோ இப்படியும் அப்படியுமாய்த் தலையை ஆட்டிவிட்டு மேய்ச்சல் இடம் தேடி நகர்ந்து சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.