(Reading time: 23 - 46 minutes)

ன் பெயர் ஹஸ்த குப்தன்.ஹஸ்த குப்த மௌரியன் என்றும் சொல்வர்.நான் குப்த வம்சத்தைச் சார்ந்தவன்.பரந்து விரிந்துள்ள இப் பாரத தேசத்தின் வடபுலத்தில் அமைந்துள்ளது எங்களது குப்த ராஜ்ஜியம்.

எங்களது குப்த சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவித்தது எங்களின் முன்னோர்களில் ஒருவரான ஸ்ரீ குப்தர்.

பிஹாரில் நிர்மாணிக்கப்பட்ட எமது ராஜ்ஜியம் ஸ்ரீ குப்தருக்குப் பிறகு வந்த குமார குப்தர், ஸ்கந்த குப்தர்,சந்திர குப்தர் சமுத்திர குப்தர் இரண்டாம் சந்திர குப்தர்,ராம குப்தர்,விஷ்ணு குப்தர்,புத குப்தர் ஆகியோரின் ஆட்சி காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து மகாராஷ்ட்ரா,உத்தரப் பிரதேசம், சௌராஷ்ட்ரம்,மாளவம்,குஜராத்,மத்தியப் பிரதேசம்,பஞ்சாப்,ஆப்கானிஸ்தான்,நேபாள்,விந்தய சாத்பூரா.காஷ்மீர்,.ஆந்திராவின் பெரும் பகுதி,காஞ்சீபுரம் என  விரிவதைந்துள்ளது.எனது தந்தையாரான பிரம்ம குப்தரின் தற்போதைய ஆட்சியில் நாங்கள் ஆந்திராவை முழுவதுமாய்க் கைப்பற்றும் நிலையில் உள்ளோம்.எங்கள் குப்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பெருமையாகச் சொல்லுவர்.என் மூதாதையரின் ஆட்சி காலத்தில்தான் ஆரியபட்டர்,வராக மிகிரர் போன்ற வான சாஸ்திர அறிஞர்களும்,சாகுந்தலம்,குமார சம்பவம்,மேக தூதம் ஆகியவற்றை எழுதிய காளிதாசரும்,போர் முறைகளையும்,அர்த்தசாஸ்திரத்தை எழுதியவரும்,கருப்புக் கலை எனச் சொல்லப்படும் மந்திர தந்திர நூலை எழுதியவருமான சாணக்கியரும் வாழ்ந்தனர்.எண்கணிதத்தில் புதுமையைக் கண்டது எங்கள் ஆட்சியில்தான்.ஆயுர்வேத சிகிச்சை முறை எம் முன்னோர் காலத்தில்தான் பிறந்தது.இப்படி பல்வேறு பெருமமைகளைக் கொண்ட குப்த ராஜ்ஜியத்தின் அரச பரம்பரையில் வந்த பிரம்ம குப்த மௌரிய மன்னரின் மகனே ஹஸ்த குப்தனாகிய நான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஆந்திராவில் எங்களது பெரும்படை முகாமிட்டிருக்க காஞ்சிபுரம் வந்த நான் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் விருந்தோம்பல் ஆன்மிகம் கலை இவற்றால் பெரிதும் கவரப்பட்டு சேர சோழ பாண்டிய நாடுகளைக் கண்டு மகிழவே இப்பயணத்தை மேற்கொண்டேன்.அப்படி வருகையில் இங்கு ஏதோ போட்டிகள் நடை பெருவதைக்கண்டு பார்த்து ரசிக்க விரும்பி இவ்விடம் சேர்ந்தேன்.மற்றபடி வேறு ஏதும் என் கருத்தில் இல்லை என்றான் மிகப் பவ்யமாக.

மன்னா.. இந்த வாலிபர் சொன்ன விபரங்கள் இவைதான் என அவன் சொன்ன விபரங்களை விரிவாக எடுத்துச் சொன்னார் அவ்வந்தணர்.

அவ்வாலிபன் சொல்வதாய் அவ்வந்தணர் சொல்லச் சொல்ல அப்படியே அசந்து போய் அமர்ந்திருந்தார் மன்னர் அதிவீரன்.

அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த மதிவதனி அவன் மீது படிந்திருந்த கண்களை மீட்க முடியாமல் தவித்தாள்.ஹஸ்த குப்தா..ஹஸ்த குப்தா.. என அவள் நாவு இருமுறை மெலிதாக சொல்லிப்பார்க்க இனித்தது போல் இருந்தது அவள் மனதுக்கு. எப்பேர்ப்பட்டவன் இவன்.எத்தகு பெருமைகளைக் கொண்டவன்.ஆயினும் எவ்வளவு பணிவாக,பவ்யமாக இருக்கிறான். பெரும் வீரனுமல்லவா இவன்.அழகன் வீரன்,குலத்தால் பெருமைக்குரியவன்,அரச குலத்தவன்,துணிச்சல் மிகுந்தவன்..அவனைப்பற்றி அவள் மனது ரொம்ப நாள் பழகியது போல் சொல்லிக்கொண்டே போனது.இதுதானோ பெண்ணின் பலவீனம்?

சிறிது நேரம் முன்பு வரை திருமணத்தை வெறுத்தவள்..எந்த ஒரு ராஜகுமாரனையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பமின்றி இருந்தவள் தாயையும் தந்தையையும் உடன் பிறந்த தம்பியையும் ஓடிவிளையாடிய அரண்மனையையும் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கிப் பிரிய மாட்டேன் என்று சொன்னவள் அதில் உறுதியாய் இருந்தவள் சில நிமிடங்களுக்கு முன் பார்த்த அன்னிய தேசத்தவனை இனத்தாலும் மொழியாலும் பழக்க வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட ஒருவனை சந்தித்த வேளையில் சிந்திப்பது

எங்கணம்  சாத்தியம்?இது என்ன விந்தை?ஏனிப்படி?இதுதான் காதலா?மெல்ல மெல்ல அவன் உருவம் அவனின் ஆறடி உருவம்..அவன் அழகு..அவனின் பேசும் கண்கள்,மதற்பும் லேசான செருக்கும் வீரமான கம்பீரமான தோற்றமும்,பணிவான கனிவான பவ்யமான உடல் அசைவுகளும் கணீரென்ற அவனின் குரலும் அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்க அவளின் இதயத் தடாகத்தில் காதல் எனும் தாமரை மொட்டு மெள்ள மெள்ள ஒவ்வொரு இதழாய் விரிந்து கடைசியில் மொத்தமாய் முழுதாய் மலராய் விரிந்தது.

இதற்காகத்தானே காத்திருந்தது விதி...

விதி என்ன செய்யப் போகிறது..பார்ப்போமே.....நன்றி....

தொடரும்...

Episode 14

Episode 16

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.