(Reading time: 10 - 20 minutes)

வர்கள் பேசிக் கொண்டிரும்போதே போன் மணி அடித்தது போனை எடுக்க போகும் போது அனுவிடம் "அனு அந்த காப்பியை எடுத்துக் குடி" என்று கூறி போனை சென்று எடுத்தான் சுந்தரம். மறுமுனையில். . . .

“ நான்தான் பேசுறேன் மாப்ளை குட் மார்னிங் எப்படி இருகிறீங்க" என்று விசாரித்தார் மாமனார் சந்திரசேகர்

"நான் நல்லாருக்கேன் மாமா" என்றான் சுந்தரம் 

"அனு எப்படி இருக்கா?" என்று விசாரித்தார் 

 "ம்.. அவள் நல்லாயிருக்கா" என்றான். ஏனோ போனை அவளிடம் கொடுக்க அவனுக்கு இஷ்டமேயில்லை ஆனால் என்ன செய்வது என்று யோசித்தான் "வேற ஒன்னுமில்லையே மாமா" என்றான் தொடர்ந்து 

ஆனால் அவரோ "நான் அனுவிடம் பேசலாமா" என்றார்.. "சரி இருங்க கொடுக்கிறேன் " என்று கூறி 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"அனு இந்தா உங்க வீட்டிலிருந்து போன்" என்றான்

அவளும் ஆவலுடன் போனை கையில் வாங்கி "அப்பா என்று உருகினாள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிய எல்லோரும் எப்படி இருக்கீங்கப்பா" என்று வினவினாள்.

அதை பார்த்த சுந்தரதிற்கோ உள்ளுக்குள் கோபம், நேத்து ராத்திரி தான் அவர்களை பார்த்திருக்கிறாள் அதுக்குள்ளே எப்படி அழுது குழயுறாள் பார் என்றிருந்தது.

அங்கிருந்து எழுந்து போய் விட்டான்..

சிறிது நேரத்தில் அனு உள்ளே அவனைத் தேடி வந்தாள் " இங்கேயா இருக்கீங்க அப்பா உங்களுடன் பேச வேண்டுமென்றார் நீங்க அங்கே இல்லை அதான் உங்களை தேடி வந்தேன்" என்றாள்.

"என்ன விஷயம்" என்று கேட்டான் "அவர் இன்னும் லைனிலே இருக்கார்" என்றாள்.

போன் கிட்டே சென்று பேசியை எதடுத்து "சொல்லுங்க மாமா என்ன விஷயம்?" என்று கேட்டான்.

"மாப்ளே, அனுவும் நீங்களும் இன்னிக்கு எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க" என்றார். 

கொஞ்சம் யோசித்தான் பிறகு "தப்பா நினைக்காதீங்க மாமா நாங்க நிறைய பேச வேண்டி இருக்கிறது கொஞ்ச நாள் பொறுத்து வருகிறோம், இப்போ முடியாது" என்றான்.

அனுவிற்கு இதைக் கேட்டு கஷ்டமாக இருந்தது என்ன இது இப்படி பேசி விட்டார் அப்பாவிடம், என்று நினைத்து கண்ணீர் விட்டாள்.

சந்திரசேகருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்னடா மாப்பிள்ளை இப்படி சொல்லி விட்டாரே என்று வருத்தப்பட்டார். ஆனாலும் மாப்பிளையிடம் "சரி மாப்பிள்ளை நீங்க சொல்லுங்க, உங்களுக்கு எப்போ சௌகிரியப்படுமென்று" கேட்டார். 

சுந்தரமோ" நானே உங்களுக்கு போன் பண்ணுகிறேன் மாமா" என்றான்.

வேறு வழியில்லாமல் “சரி, போனை வைக்கிறேன் மாப்பிள்ளை" என்று போனை வைத்துவிட்டார்.

சுந்தரதிற்கோ, இந்த நேரத்தில் தன் அனுவை யாரோடும் எந்த உறவானாலும் சரி, பங்கு போட்டுக்கொள்ள இஷ்டமில்லை.அதனாலேயே தன் மாமனாரிடம் அப்படி சொன்னான்.

ஆனால் அனுவிற்கோ வருத்தமாக இருந்தது. அவளுக்கு என்னவோ தன் அப்பாவை அவமானபடுத்தி விட்டான் தன் கணவன் என்றிருந்தது.

அதனால் பேசாமல் ரூமிற்குள் சென்று படுத்துக்கொண்டாள். அவள் கணவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. 

அப்படியே தூங்கி விட்டாள். தன்னை யாரோ தூக்கி மடியில் வைத்துக்கொண்டது போலிருந்தது. கண்ணை விழித்து பார்த்தாள்.

"என்ன என் பெண்டாட்டிக்கு கோபமா?" என்றான் சுந்தரம்.

"ஆமாம் இதுலே ஒண்ணும் குறைச்சலில்லை" என்றாள் அனு.

"ஆமாமில்லே என் கன்னம்மாக்கு நிறைய குறை வச்சிட்டேன் இப்போ எல்லாம் சரி பன்றேன், பாரு இப்போ" என்று அவள் முகத்தருகில் தன் இதழை கொண்டு போனான்.

அவள் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.

"நான் கோபமாயிருக்கேன்" என்றாள் அனு.

 "அதனால் என்ன சரி பண்ணிட்டா போச்சு" என்றான், அவள் கணவன்.

"உனக்கு இப்போ என்ன வேணும் அனு" என்று தன் கணவன் கேட்டவுடன் 

"நீங்க ஏன் அப்பாவிடம் அப்படி சொன்னீர்கள்?" என்றாள் அனு 

அவன் ஒன்றும் பேசவில்லை, அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்

தொடரும் 

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.