(Reading time: 19 - 37 minutes)

மேலியாவிற்கு மெல்ல விழிப்பு வந்தது. அவளது உடல் முழுதும் ஒரு வித வலி ஆட்கொண்டு வேதனைப்படுத்தியது. தான் இருக்கும் இடத்தை நோக்கி பார்வையை சுழலவிட்ட அமேலியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல பீரங்கியினுள் இருந்து எழுந்தாள். மெல்ல மெல்ல நிலைமையை உணர்ந்தாள். '.எப்படி இங்கே நாம் வந்து சேர்ந்தோம்? இது என்ன சோதனை?' .என்று அவளுக்குள் பல கேள்விகள் எழுந்தன.

பீரங்கியினுள் இருந்து எட்டிப்பார்த்தவள் வில்லியம்ஸ் வருவதைக் கண்டு மீண்டும் பீரங்கியினுள் தன்னை மறைத்துக் கொண்டாள். அமெரிக்கர்கள் தன்னை கடத்தி விட்டார்களா என நினைத்து அழத் தொடங்கிவிட்டாள். மீண்டும் பீரங்கியினுள் இருந்து தலையை வெளியே நீட்டி பார்த்தாள்.

கப்பலின் கடைசி மூலையில் கடற் சீற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தான் வில்லியம்ஸ். அமேலியா அழுதபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். இது கனவாக இருக்க வேண்டும், கனவாக தான் இருக்க முடியும். நான் இங்கே வர வாய்ப்பில்லையே என்று துடிதுடித்தாள். நடப்பது கனவில்லை என்பதை  சில நிமிடங்களிலேயே புரிந்துகொண்டவள் அழுதபடியே இருந்தாள்  அவளது பார்வை அவ்வப்போது வில்லியம்ஸின் மீது விழுந்தது . இந்த அமெரிக்கன் ஏன் கொட்டும் மழையில் அவ்விடத்தில் நின்று கொண்டிருக்கிறான் என்று புரியாமல், அவனது செயலை ஒளிந்தபடி கலங்கிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அமேலியா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

வில்லியம்ஸ் தனது ஊன்றுகோலை தூர எறிந்து  தன் ஒற்றைக்காலால் நின்றான், நிற்க முடியாமல் கீழே விழுந்து வலியால் துடித்தான். பின், சமாளித்துக்கொண்டு எழுந்து கம்பியைப்  பிடித்து கப்பலின் விளிம்பில் நின்றான். இம்முறை ஜிம்னாஸ்டிக் ஸ்டைலில் கம்பி மேல் ஒற்றைக் காலோடு ஏறி நின்று கடலைப் பார்த்து சப்தம் போட்டு சிரித்தான் வில்லியம்ஸ். சாதித்து விட்டதைப் போன்ற ஒரு பூரிப்பு அவனுக்கு. கண்களை மூடினான். காற்று அவனை தள்ளியது சுதாரித்தபடி நின்றான். சாராவின் முகம் அவன் கண் முன்னே வந்தது அவர்கள் வாழ்ந்த நினைவுகள் நிழலாடின. அமைதியோடு சில நொடிகள் நின்ற வில்லியம்ஸ், "ஐ ஆம் சாரி சாரா" என்று அழுதபடி கூறிவிட்டு .சீற்றத்தோடு மலை போல் எழுந்த வந்த அலையினுள் குதித்தான்.

அமேலியா அதிர்ச்சி அடைந்தாள். பீரங்கியில் இருந்து வெளியே வந்து அவன் விழுந்த இடத்தை பார்த்தாள். அவன் கடலில் குதித்த சுவடே இல்லாமல் அலைகள் குதித்துக் கொண்டிருந்தன. அடுத்தடுத்த அதிர்ச்சிகளை சந்தித்த அமேலியா வேதனையின் உச்சத்திற்கே சென்றாள்  அழக் கூட சக்தியற்றவளாய், நரகத்தின் நடுவே தான் சிக்கி இருப்பதாய் உணர்ந்தாள். மீண்டும் கடலைப் பார்த்தாள். அவன் எதற்கு கடலில் குதித்தான் என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டாள்

வில்லியம்ஸ், தான் ஆசைப்பட்டது போல்  மனிதர்கள் தொட முடியாத  பெரிய கல்லறைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டான். ஆழ்ந்த மரண அமைதிக்குள் நுழைந்துவிட்டான்   இதைத் தான் அவன் எதிர்பார்த்தான். உயிர் பிழைத்தபோது அவன் தேடிய நிம்மதி மரணத்திற்கு  பின் அவனுக்கு கிடைத்தது. வில்லியம்ஸ் விடுத்த சவாலில் இறைவன் வெற்றி வெற்றி பெற்றுவிட்டார்

தொடரும்...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.