(Reading time: 36 - 72 minutes)

வ வந்ததிலிருந்து நீயும் அவளைப்பத்தியே பேசுன... அவக்கூட ஊர் சுத்துன... உன் குடும்பமே அவளை தலையில தூக்கி வச்சு கொண்டாடுச்சு... அதான் சீக்கிரம் உன்னை மேரேஜ் பண்ணிக்கனும்னு எனக்குள்ள ஒரு வேகம்... ஏற்கனவே எனக்கு கொஞ்சமா நம்ம கல்யாணம் நடக்குமான்னு இருந்த உறுத்தலில்... மும்பைல இருந்து கிளம்பும் போதே என் ஃப்ரண்ட் போதை பழக்கமுள்ளவ... அவக்கிட்ட இருந்து கொஞ்சம் போதை மருந்து வாங்கிட்டு வந்தேன்...

இங்க வந்து யுக்தாவை பார்த்ததும் கன்ஃபார்ம் ஆயிடுச்சு... நம்ம கல்யாணம் நடக்காதுன்னு... இந்த பிருத்விராஜ்க்குன்னே வந்த சம்யுக்தாவா தான் அவளை பார்க்கும் போது எனக்கு தோனுச்சு... நானா உன்னைவிட்டு விலகனா அது வேற... ஆனா அந்த யுக்தாக்காக நீ என்னை விட்டுப் போறதா... நான் அந்த யுக்தா கிட்ட தோத்துப் போறதா... அப்படி ஒரு தோல்வியை என்னால ஏத்துக்கவே முடியாது..

அப்போ தான் எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு... உன்னோட பர்த்டேக்கு எங்கேயாவது வெளியில போக ப்ளான் பண்ணி... அங்க அந்த போதை மருந்தை மிக்ஸ் பண்ணி உனக்கு கொடுத்து ஒரு நைட் உன்னோட நான் இருந்துட்டா... நீ என்னையே மேரேஜ் பண்ணிப்பன்னு நினைச்சேன்... ஆனா என்னோட அம்மா, அப்பா அந்த நேரம் பார்த்து வந்தாங்க... அவங்க இங்க இருக்க நேரம் வெளியப் போகறதே கஷ்டம்... அவங்க என்னோட திட்டத்தை சொதப்பிட்டாங்க...

சரி இன்னொரு நாள் அந்த திட்டத்தை நிறைவேத்திக்கலாம்னு முடிவுப் பண்ணேன்... ஆனா உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு வந்த்ப்போ  உன்னோட பேமிலி பாண்டிச்சேரி போறாங்கன்னு தெரிஞ்சதும்... இப்போ என்னோட அம்மா, அப்பா இருக்கப்பவே இந்த திட்டத்தை நிறைவேத்தினா என்னன்னு தோனுச்சு... அப்போ தான் சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் நினைச்சேன்... என்னோட ஹேண்ட்பேக்ல தான் அந்த மருந்தை நான் வச்சிருந்தேன்..

உன்னோட பேமிலி கிளம்பியதும்... வந்திருக்க கெஸ்ட்டும் கொஞ்ச நேரத்துல போய்டுவாங்க... அப்புறம் உன் ப்ரண்ட்ஸ் தான் இருப்பாங்க... அவங்களும் லவ்வர்ஸ்க்கு நடுவுல டிஸ்டர்பா இருக்க வேண்டான்னு கிளம்பிடுவாங்க... அப்புறம் என்னோட வேலை ஈஸியா முடியும்னு நினைச்சேன்...

ஆனா அதை எப்படி சரியா செஞ்சு முடிக்கறதுன்னு தான் எனக்குத் தெரியல... என்னோட இடமா இருந்தா என்னால எல்லாம் சரியா செஞ்சிருக்க முடியும்... ஆனா அது உங்க வீடா இருக்கறதால எல்லோரும் போனதுக்கு அப்புறம் என்னால என்னோட ப்ளானை சரியா செய்ய முடியும்னு தோனல... அதனால முன்னாடியே பாதி கூல்ட்ரிங்ஸ் காலியா இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில்ல அந்த மருந்தை கலந்தேன்... ஒரு ஓரமா வச்சிருந்து எல்லோரும் கிளம்பனதுக்கு அப்புறம் அந்த கூல்ட்ரிங்ஸ்ல ஃப்ரிட்ஜ்ல வச்சு நாம தனியா இருக்கப்ப உனக்கு கொடுக்கனும்னு நினைச்சேன்...

அப்போ தான் அம்மாக் கிட்ட இருந்து சீக்கிரம் கிளம்பி வரச் சொல்லி போன் வந்துச்சு... அம்மாக்கிட்ட பேசிட்டு வர்றதுகுள்ள அந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை காணும்... பார்த்தா அந்த பார்ட்டிக்கு வந்த குட்டிப் பசங்கக்கிட்ட அது இருந்துச்சு... போய் அதை நான் வாங்கறதுக்குள்ள யாரோ அதை வாங்கி ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாங்க... ஃபிரிட்ஜை திறந்துப் பார்த்தா அது மாதிரி பாதி கூல்ட்ரிங்ஸ் காலியான பாட்டில் ரெண்டு மூனு இருந்துச்சு... அதுல எது போதை மருந்து கலந்ததுன்னு தெரியல...

இன்னொரு முறைக் கூட அந்த ப்ளானை நிறைவேத்திக்கலாம்... ஆனா இப்போ அந்த கூல்ட்ரிங்ஸை யாராவது குடிச்சிட்டு பிரச்சனை ஆயிடுச்சுன்னா... நான் தான் அதை செஞ்சேன்னு தெரிய வந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு தெரியாம பயந்துட்டேன்... அதான் அம்மா சீக்கிரம் வரச் சொல்றாங்கன்னு காரணம் சொல்லி கிளம்பிட்டேன்...

ஆனா அப்படி போயிருக்க கூடாதோன்னு அப்புறம் தான் யோசிச்சேன்... அந்த யுக்தா வருவா, நீங்க ரெண்டுப்பேரும் அந்த கூல்ட்ரிங்ஸை குடிப்பீங்க... உங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருக்கும்னு முன்னாடியே தெரிய வந்திருந்தா... கண்டிப்பா நான் அங்க இருந்து போயிருக்கவே மாட்டேன்... இப்படி என்னோட திட்டம் எனக்கே எதிரா வரும்னு நான் நினைச்சே பார்க்கல... நான் தோத்துப் போயி நிக்கறேன்.. சேச்சே..." என்று சலிப்போடு என்னென்ன சொல்ல வேண்டுமோ எல்லாமே சொல்லிவிட்டு அவள் திரும்பினால் பிருத்வி எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளைப் பார்த்து கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.

இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் இடையில் கோபப்படுவான், திட்டுவான், ஏன் அடித்தாலும் அடிப்பான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இவள் பேசிக் கொண்டிருந்தால் அவனோ அமைதியாக நின்றிருந்தான்.  அவள் பயமும் ஆச்சர்யமும் கலந்த ஒரு பார்வையோடு அவனைப் பார்க்க் அவனோ சாதாரணமாக...

"என்னடா இவன் கோபப்படுவான், திட்டுவான், இல்லை அடிக்கக் கூட செய்வான்னு எதிர்பார்த்தீயா... கோபமெல்லாம் உரிமையானவங்க, நமக்கு நெருக்கமானவங்கக் கிட்ட தான் வரும்... உம்மேல அப்படி எதுவும் வரல... அதுக்கு பதிலா என்மேல தான் எனக்கு கோபம் வருது... உன்னை நம்பி வரூனையும், யுக்தாவையும் சந்தேகப்பட்டேனே என்மேலேயே எனக்கு வெறுப்பா இருக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.