(Reading time: 36 - 72 minutes)

"பிருத்வி நீங்க சொல்றப்படியே பார்த்தாலும்... நம்ம ரெண்டுப்பேரும் தான் காதலிச்சோம் பிருத்வி... யுக்தா தான் நமக்கு குறுக்குல வந்துட்டா... அவளை தொட்டுட்டீங்கன்ற ஒரே காரணுத்துக்காக தான பிருத்வி நீங்க அவளையே கட்டிக்கிட்டு அழறீங்க... அன்னைக்கு அந்த இடத்துல ஒருவேளை நான் இருந்திருந்தா... இப்போ நாம ரெண்டுப்பேரும் கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்திருப்போம்..."

"சப்னா பேசும் போது யோசிச்சுப் பேசு... என்னப் பேச்சு இதெல்லாம்..."

"என்ன யோசிச்சுப் பேசு... அந்த இடத்துல நான் இருந்திருந்தான்னு சொல்றதை விட... நான் தான் இருந்திருக்க வேண்டியதுன்னு சொல்லலாம்...  நாம காதலிச்சோம்... அது நிறைவேறாம நீங்க யாரையோ கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க... அப்படி நடந்திருந்தாக் கூட போனாப் போகுதுன்னு நான் விலகியிருப்பேன் பிருத்வி... ஆனா உங்களை அடையனும்னு நான்  என்னன்னவோ செஞ்சும் உங்களை இழந்துட்டு நிக்குறேன்... அந்த வரூன், யுக்தா, பிரணதி எல்லார்க்கிட்டேயும் தோத்துட்டு நிக்கறேன்... அதை தான் பிருத்வி என்னால ஏத்துக்க முடியல... நான் தோத்துப்போயிட்டேன் என்பதை தான் என்னால தாங்கிக்க முடியல..."

"என்ன சப்னா உளர்ற..."

"உளர்றனா... இல்லை பிருத்வி உண்மையை சொல்றேன்... நீ யாரு பிருத்வி... உன்கிட்ட என்ன இருக்கு... உன்னோட ஸ்டேடஸ் என்ன..?? என்னோட ஸ்டேடஸ் என்ன..?? உன்னையே இப்படி கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு என்ன அவசியம்...??" அவனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்... அவனிடம் பன்மையில் பேசிக் கொண்டிருந்தவள் திடிரென்று ஒருமைக்கு தாவினாள்...

இவ்வளவு நாள் அவள் அவனிடம் நடித்துக் கொண்டிருந்தாள்... அந்த நடிப்பு அவனை மரியாதையாக அழைப்பதில் கூட இருந்தது... ஆனால் இனி அவனிடம் நடிக்க வேண்டிய அவசியம் என்ன..?? அவள் தான் அவள் எடுத்த காரியத்தில் தோல்வியை தழுவிவிட்டாளே... இதற்கு மேலும் அவனிடம் கெஞ்சவா முடியும்... பிருத்வியோ இப்போது அவளின் புதுமுகத்தை பார்க்கிறான்... சுத்தமாக உணர்ச்சிகளை தொலைத்த முகத்தோடு அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்..

"சின்ன வயசுல இருந்து அந்த வரூனை எனக்குப் பிடிக்காது... என்னோட வீட்ல, ஸ்கூல்ல, ட்யூஷன்ல எல்லாரும் அவனையே தலையில் தூக்கி வச்சு ஆடுவாங்க, இதுல என்னை அவன் டியூஷன் டீச்சர்க்கிட்ட மாட்டிவிட்டுட்டான்... அதுக்காக அவன் எக்ஸாம்ல பிட் யூஸ் பண்ணதா அவனை மாட்ட வச்சு அந்த ஸ்கூலை விட்டே போக வச்சுட்டேன்...

அப்புறம் மும்பைக்கே போன நான் திரும்பவும் சென்னைக்கு வந்தேன்... வரூன் படிச்ச காலேஜ்லயே சேர்ந்தேன்... அவனை வெறுப்பேத்தி பார்க்கிறதுல எனக்கு ஒரு ஆசை... உன்கூட பேசினா அவன் கோபப்படுவான்... அதான் வேணும்னே உன்கிட்ட பேசுவேன்... அதைப் பார்த்து அவன் கோபப்படுவான்...

அப்படி இருந்தப்போ என்னமோ அவனோட லவ்வரை அவன் கிட்ட இருந்து பிரிச்சிட்டா மாதிரி... உன்கூட பேசினதுக்கு ரொம்ப டென்ஷனா ஆனான்... அப்படி என்ன அவனுக்கு நீ க்ளோஸ்... உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சா என்னன்னு தோனுச்சு... உன்னை லவ் பண்ணப் போறதாகவும்... உன்னை அவன்கிட்ட இருந்து பிரிப்பதாகவும் சவால் விட்டேன்....

அதுக்கு உங்க கூட இருந்த ஃப்ரண்டை வச்சு சில வேலைகளை பார்த்து, சூஸைட் ட்ராமா போட்டு வரூன்கிட்ட உன்னை கோபமா பேச வச்சு... உன் வாயாலேயே என்னை காதலிக்கிறதாகவும்... கல்யாணம் செஞ்சுக்கப் போறதாகவும் சொல்ல வச்சேன்... அப்புறம் கொஞ்ச நாள் டைம்பாஸ்க்கு உன்னோட பழகிட்டு விலகிடனும்னு தான் நினைச்சேன்...

ஆனா என்னோட ஃப்ரண்ட்ஸ் சில பேர் உன்னை ஆஹா.. ஓஹோன்னு புகழுவாங்க... அவங்க பாய் ஃப்ரண்ட்ஸோட மேரேஜ்ன்னு கமிட் ஆகறதுக்கு முன்னாடியே நீ இப்படி இருக்க கூடாது... அப்படி இருக்க கூடாதுன்னு ஆயிரெத்தெட்டு கண்டிஷன்ஸ் போடுவாங்களாம்.. ஆனா உன்னோட பாய் ஃப்ரண்ட் உனக்கு இவ்வளவு ஃப்ரீடம் கொடுத்துருக்கானேன்னு சொல்றப்போ நானும் அதைப்பத்தி யோசிச்சுப் பார்த்தேன்...

நீ என்னை எதுக்காகவும் கட்டாயப்படுத்தினதில்ல... உன்னோட குடும்பத்துக்கு என்னை பிடிக்காதுன்னு தெரிஞ்சாலும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கன்னு நீ சொன்னதில்ல... என்னோட ட்ரஸ் விஷயத்துல கூட நீ கவனம் செலுத்தினதில்ல... அவங்க சொன்னாமாதிரி நான் ஃப்ரீடமா தான் இருந்தேன்... அதுவே என்னோட மேரேஜ் லைஃப்லயும் கிடைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்...

அதான் உன்னையே கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவுப் பண்ணேன்... ஆனா நீயோ தொழிலில் முன்னேறேனும் அப்புறம் மேரேஜ்ன்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்த... நான் உன்னை கழட்டிவிடலாம்னு நினைச்ச மாதிரி நீ என்ன கழட்டி விட்டிடுவியோன்னு நினைச்சு பயமா கூட இருந்துச்சு...

அப்போ தான் அந்த யுக்தா வந்தா... முதல்ல அவ பேரே என்ன டிஸ்டர்ப் பண்ணுச்சு... அப்புறம் அவ அழகு, அப்புறம் உன்னோட முறைப் பொண்ணு மாதிரி உன்னோட பேரண்ட்ஸை மாமா, அத்தைன்னு கூப்ட்றது, எல்லாம் எனக்கு உறுத்தலாவே இருந்துச்சு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.