(Reading time: 36 - 72 minutes)

தில் அவள் உன்னை விட்டு ஒதுங்கி போவதாக வேறு கவலைப்படுகிறாய்.. இவ்வளவு செய்த உன் மீது இன்னும் அவளுக்கு எப்படி காதல் இருக்கும்..?? அதனால் தான் இந்த திருமணமே வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.. அப்படியும் இந்த திருமணம் நடந்தும் அவள் எப்படி இருந்தாள்..?? அப்போதாவது அவளை விட்டாயா..?? கோபத்தாலும் சுடு சொல்லாலும் அவளை வேதனைப்படுத்தினாயே..?? அதனால் தானே அவள் வீட்டை விட்டுப் போனாள்... நீ கூப்பிட்டப் போது கூட வர மறுத்தாளே.. இப்போது உன்னை விட்டு ஒதுங்கிப் போகவே முடிவெடித்துவிட்டாள்... உன்னை அவள் வெறுத்துவிட்டாள்.." என்று அவனை குற்றம் சாட்டியது...

இல்லை அவள் என்னை விட்டு போக முடியாது.. அவளை போக விடமாட்டேன்... அவளிடம் மன்னிப்பு கேட்கப் போகிறேன்.. " என்று இவன் சொன்னப் போது...

அவள் உன்னை மன்னிப்பாளா...?? அதற்கு நீ தகுதியானவனா..??  உன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாளா..?? " என்று அது திருப்பிக் கேட்டது...

"யுக்தா கண்டிப்பா என்னை மன்னிப்பா.. என்னை புரிஞ்சிப்பா..?? என்னோட காதலை ஏத்துக்குவா..?? நான் இப்பவே அவளை பார்க்கப் போறேன் என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எழுந்த போது அவன் அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது... ரொம்ப நாள் கழித்து அவனிடம் பேசுகிறார்... அதை கூட அவன் உணரமால் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ அப்பா.. சொல்லுங்க..."

"பிருத்வி எங்க இருக்க..."

"ஒருவேளையா வெளிய வந்தேன்ப்பா... கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்..."

"பிருத்வி நீ உடனே கிளம்பி வா... யுக்தாவோட அப்பா மாதவன் வந்துருக்காரு..."

"மாதவன் மாமா வா...?? சரி உடனே வர்றேன் ப்பா.." என்றவன் அவன் எதற்காக வந்திருப்பார் என்று யோசித்துக் கொண்டே யுக்தாவை பார்ப்பதை தள்ளிப் போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு போனதும்... அங்கே உட்கார்ந்திருந்த மாதவனிடம்... "வாங்க மாமா.." என்றவன்... அங்கே உட்கார்ந்திருந்த தன் அன்னையிடம் என்ன விஷயம் என்று ஜாடையிலேயே கேட்க... மதியோ தெரியாது என்று தலையசைத்தாள்... செந்திலும், பிரணதியும் அங்கு தான் இருந்தனர்.

பின் உட்கார்ந்திருந்த மாதவன் எழுந்து பிருத்வியிடம் பேசினார்..

"பிருத்வி கொஞ்சம் உன்கிட்ட பேசனும்..."

"ம்ம் சொல்லுங்க மாமா..."

"நடந்த விஷயங்களில் உன் மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது... உன்மேல மட்டும் கோபப்பட முடியாது... வேற ஒரு பொண்ணை காதலிச்சிட்டு என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதா போச்சு... அதெல்லாம் மறந்துட்டு என் பொண்ணை சந்தோஷமா வச்சுக்கன்னு சொல்லவும் முடியாது... ஆனா என் பொண்ணை என்னால இப்படி பார்க்க முடியல...

அவளை இங்க இருந்து நியூயார்க் கூட்டிட்டுப் போனப்போ... எப்பவும் சோகமாவே இருப்பா... உங்களையெல்லாம்  பிரிஞ்சதுல அப்படி இருக்கா... கொஞ்ச நாளில் எல்லாம் சரியாயிடும்னு நினைச்சோம்... அப்புறம் அவ மாறினாலும் ரொம்ப கலகலப்பா இருந்ததில்ல... சரி வளர வளர சுபாவம் மாறும் இல்லையா... அப்படி நினைச்சு நாங்க இருந்துட்டோம்... அவளுக்கு கல்யாண வயசு வந்தப்போ அவளுக்கு உன்னை தான் பிடிச்சிருக்குன்னு எங்களுக்கு தெரியல..

இங்க வந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்க கல்யாணம் நடக்க இருந்தப்போ அவ அதை வேண்டாம்னு சொன்னா... அதையும் நாங்க கேக்கல... மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணியும் அவ சந்தோஷமா இல்ல... அவனை விட்டுப் பிரிஞ்சும் அவ சந்தோஷமா இல்ல...

முன்னயாவது அவ வாய்விட்டு கலகலன்னு சிரிக்கலைன்னாலும் எங்கக் கூட இருக்கும்போதாவது அவ சந்தோஷமா இருப்பா.. இப்போ பேருக்கு தான் சிரிக்கிறா.. மொத்தத்துல கல்யாணம்ங்கிற பேர்ல என் பொண்ணோட சந்தோஷமே போய்டுச்சு... அவ என்னோட பொண்ணாவே இருந்திருக்கலாமோன்னு தோனுது...

அதை அவக்கிட்ட வெளிப்படையாகவும் என்னால சொல்ல முடியல... அவளுக்கு பிடிச்சனவனோட நல்லபடியாக கல்யாணம் செஞ்சு வைக்காத நான்... அந்த வாழ்க்கையில உனக்கு சந்தோஷமே இல்லம்மா... அந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம்மான்னு சொல்லும் தைரியம் இல்லாம இருக்கேன்...

ஆனா அதை உன்கிட்ட சொல்ல முடியும் பிருத்வி... இப்போ அவளா நியூயார்க் போகனும்னு முடிவெடுத்திருக்கா... இது தற்காலிக பிரிவா இல்லாம, நிரந்தர பிரிவா இருக்கட்டும்... நீ அவளை விட்டு விலகிடு... தனக்கு பிடிச்ச வாழ்க்கை தனக்கு நிரந்தரம் இல்லைன்னு தெரிஞ்சாலாவது அவ கொஞ்ச நாளில் சரியாகிடுவா... அதனால நீ அவளை விட்டு விலகிடு பிருத்வி... " என்று அவர் கைகூப்பி கேட்ட போது... உயிரோடு இருக்கும் போதே அவன் இதயத்தை வெட்டி எடுத்து போனது போல் இருந்தது பிருத்விக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.