(Reading time: 36 - 72 minutes)

ன்னைக்கு போதை மருந்து கலந்தது யாருன்னு சந்தேகப்பட்டப்போ யுக்தா மேல தான் சந்தேகம் வந்தது... அப்பவும் அவ அதை செய்திருக்கக் கூடாதுன்னு மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு... அப்போ வேற யாராவது செஞ்சிருப்பாங்களான்னு யோசிச்சப்ப கூட, நீதான் அதை செஞ்சிருப்பன்னு எனக்கு சந்தேகம் வரல... ஏன் தெரியுமா..?? நான் உன்னை காதலிக்கிறதாகவும் கல்யாணம் செஞ்சுக்கறதாகவும் சொன்னதால அந்த நம்பிக்கையோடு நீ காத்திருப்பேன்னு நான் நினைச்சேன்... ஆனா ஒரு உறவுக்கு அடிப்படையே நம்பிக்கை தான் அதுவே உனக்கு இல்லையே... எனக்கே அந்த நம்பிக்கை யுக்தா மேல இல்லை... அப்புறம் எப்படி உன்மேல நான் கோபப்பட முடியும்..."

"......."

என்ன சொன்ன நாம ரெண்டுப்பேரும் தான் காதலிச்சோம்... யுக்தா குறுக்க வந்துட்டான்னு சொன்னல்ல... ஆனா நான் ஆரம்பத்துல இருந்தே யுக்தாவை தான் காதலிச்சிருக்கேன்... உன்மேல ஒரு சதவீதம் கூட காதல் இல்லை.. அதான் உன்கிட்ட உரிமையா கூட என்னால பழக முடியல... அதை நான் எப்பவோ உணர்ந்துட்டேன்... ஆனாலும் உன்கிட்ட அதை நான் சொல்லல, ஏன் தெரியுமா...?? "

"........."

"நீ ஒதுங்கிப் போயிடுன்னு நான் சொன்னப்பல்லாம் நீ என்னை திரும்ப திரும்ப சுத்தி வந்தப்பல்லாம்... நான் உன்னை காதலிக்கவே இல்லை... அது ஏதோ கோபத்துல எடுத்த முடிவு... அதனால் நீ என்னை விட்டு விலகிடுன்னு நேரா சொல்லியிருக்கலாம்... ஆனா என்னால அப்படி சொல்ல முடியல... நான் தான் உன்னை காதலிக்கல... ஆனா நீ என்னை காதலிச்ச... என்ன இருந்தாலும் உன்னை நான் ஏமாத்திட்டேன்... இப்போ நான் உன்னை காதலிக்கவே இல்லைன்னு சொல்லி உன் உணர்வுகளை காயப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா அதுக்கெல்லாம் நீ தகுதியானவளே இல்லன்னு இப்போ தான் புரிஞ்சுது...

ஆனா இப்போ தான் நான் நிம்மதியா இருக்கேன்... எப்போ யுக்தாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டேனோ அப்ப இருந்தே உனக்கு துரோகம் பண்ணிட்டேனேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு.... அப்புறம் உன்னை நான் காதலிக்கவே இல்லைன்னு தெரிஞ்சப்பக் கூட உன்னோட ஃபீலிங்ஸோட விளையாடிட்டேனேன்னு வேதனைப்பட்டேன்... இந்த குற்ற உணர்வு நான் சாகற வரைக்கும் கூட என்னை விட்டு போயிருக்காது... ஆனா இப்போ நீயும் என்னை காதலிக்கலைன்னு தெரிஞ்சப்பிறகு, அதுவும் நீ எவ்வளவு கேவலாமானவன்னு தெரிஞ்சப்பிறகு உன்னை நான் ஏமாத்தலங்கிற நிம்மதி மனசுக்குள்ள இருக்கு...

அப்புறம் என்ன சொன்ன... அன்னைக்கு நைட் அந்த இடத்துல நீ இருக்க வேண்டியதுன்னு சொன்னல்ல... அப்படி அன்னைக்கு அந்த இடத்துல நீ இருந்தா.. உன்னோட நிழலைக் கூட நான் தொட்டிருக்க மாட்டேன்... அன்னைக்கு எங்களுக்குள்ள நடந்ததை நான் நியாயப்படுத்துல... ஆனா அன்னைக்கு நாங்க உணர்ச்சிக்கு அடிமையாகல... எங்க மனசுல இருந்த காதலுக்கு தான் அடிமையானோம்...

இங்கப் பாரு சப்னா... இத்தோட நமக்குள்ள ஒன்னுமில்ல... நீ செஞ்ச தப்பை கூட நான் மன்னிச்சிட்றேன்... ஏன்னா அதால தான் நான் யுக்தாவை கல்யாணம் செய்துக்கிட்டேன்.. அதனால ஒழுங்கா ஊருக்குப் போய் உன்னோட அம்மா, அப்பா சொன்ன பையனை கல்யாணம் செஞ்சுக்க... அதவிட்டுட்டு, நான் தோக்க மாட்டேன்... ஜெயிக்கனும்னு ஏதாவது திரும்ப செய்ய இருந்த... அப்பவும் இப்படி நான் அமைதியா இருப்பேன்னு நினைக்காத... வர்ற கோபத்துக்கு உன்னை கொலைக் கூட செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போய்டுவேன்..." என்று அவன் சொன்னப்போது சப்னாவிற்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது..

அப்போது கூட கீழே விழுந்தும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்ற மாதிரி... "நான் இதுக்கப்புறமும் உனக்காக என்னோட டைமை வேஸ்ட் பண்ணுவேன்னு நினைச்சியா... நெவர்... குட் பை..." என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்... அவள் போனதும் அவன் நின்றிருந்த இடத்தில் இருந்த சிமெண்ட் பென்ச்சில் தொப்பென்று உட்காரந்தவன்... தலையைப் பிடித்துக் கொண்டான்.

என்ன செய்து வைத்திருக்கிறேன்... இந்த சப்னா பேச்சை நம்பி அன்று வரூனை சந்தேகப்பட்டேன்... அந்த சப்னா செய்த தவறுக்கு யுக்தாவை சந்தேகப்பட்டேன்... வரூனிடம் நடந்துக் கொண்டது கூட பரவாயில்லை... ஆனால் யுக்தாவிடம் நடந்துக் கொண்டது... ஒரு பெண் மீது என்ன பழியை சுமத்தக் கூடாதோ... அந்தப் பழியை சுமத்தியிருக்கிறேன்... கோபம் புத்தியை மறைக்கும் என்று சொல்வார்களே.. அது என் விஷயத்தில் எவ்வளவு சரியாகிவிட்டது... அவளை சந்தேகப்பட்டுவிட்டேனே... அவள் காதலை சந்தேகப்பட்டுவிட்டேனே... மனசுக்குள்ளேயே புலம்பினான் பிருத்வி...

ஆனால் அவளும் அன்று குற்றத்தை ஒத்துக் கொண்டாளே..??  அதனால் தானே நான் அவள் மீது கோபப்பட்டேன்.." அவனே அவனிடம் கேட்டப் போது...

அவன் மனசாட்டியோ... "ஏன் ஒத்துக் கொண்டாள்..?? நீ ஏன் அதை செய்தாய் என்று அவளிடம் கேட்டால்..?? பின் அவள் என்ன செய்வாள்... அவள் பெண்மையையும் உன்னிடம் இழந்து.. அதற்கான பழியையும் அவள் மீதே சுமத்தினால்.. அவள் என்ன செய்வாள்..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.