(Reading time: 36 - 72 minutes)

மையே... இமையே...

விலகும் இமையே...

விழியே... விழியே...

பிரியும் விழியே...

எது நீ... எது நான்...

இதயம் அதிலே...

உணரும் நொடியில்...

பிரியும் கணமே...

பனி மூடிப் போன பாதை மீது...

வெயில் வீசுமா...

இதயம் பேசுகின்ற பாஷை...

உந்தன் காதில் கேட்குமா...

அடி மனதில் இறங்கிவிட்டாய்...

அனு அனுவாய் கலந்துவிட்டாய்...

அதே நேரம் தன்னுடைய அறையில் பிருத்வி கொடுத்த பொம்மையை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் யுக்தா... பிருத்வி எந்த முடுவெடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராயிருந்த அவளுக்கு... அவளை விட்டு விலக முடிவெடுத்திருக்கிறான் என்று தெரிந்த பின்பு வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை... விதி வசத்தால் இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து இப்போது பிரிவதற்கு... அன்று பிருத்வியின் காதல் பற்றி தெரிந்த போது விலக நினைத்தாளே... அப்போதே அது நடந்திருக்கக் கூடாதா..?? இவ்வளவு வலியும் வேதனையும் அன்று இருந்திருக்காதே...

எப்போதும் பிருத்வி கோபமாக தான் பேசுவான் என்று தெரிந்தும்... அன்று மட்டும் அது ஏன் என்னை பாதிக்க வேண்டும்... அப்போது வீட்டை விட்டு வந்தவள்... இனி அங்கு போக முடியாதபடியே ஆகிவிட்டதே... பெரியவர்களுக்காக அன்று வந்து பிருத்வி கூப்பிட்டானே அப்போதாவது அவனுடன் நான் சென்றிருக்கலாமே... தப்பு செய்துவிட்டேனோ...??

யுக்தா என்ன திடிரென்று உனக்கு சுயநலம்... கட்டாயத்தின் பேரில் பிருத்வி உன்னோடு வாழக் கூடாது என்று தானே நீ நினைத்தாய்..?? அவனுக்கு பிடித்த வாழ்க்கையை அவன் வாழ வேண்டுமானால்... நீ அவனை விட்டு விலகுவதுதான் சரி...

பிருத்வியை விட்டு நீ பிரிந்ததாக யார் சொன்னது..?? என்று அவள் மனம் கேள்விக் கேட்ட போது அந்த பொம்மையை அவள் பார்த்தாள்... இந்த பொம்மையை சொன்னதா நினைத்துக் கொண்டாயா..?? நான் அதை சொல்லவில்லை... பிருத்வியோட நினைவுகள் எப்போதும் உன் மனதில் இருக்கும்... அந்த பன்னிரண்டு வயதிலேயே பிருத்வியின் நினைவுகள் உன்னை விட்டு போகவில்லை... இப்போது அதை யாராவது அழித்திட முடியுமா.?? நீ சாகற வரைக்கும் பிருத்வியோட நினைவுகள் உன்னை விட்டுப் போகாது... அதனால் நீ சந்தோஷமாக அவனை விட்டு விலகு என்று ஆறுதல் தேடிக் கொண்டாலும்...

விதியின் வசத்தால் அவன் மனைவியானாலும்... ஒரு நல்ல தோழியாய் அவன் மனதில் இடம் பிடித்திருந்தாலும்... கடைசி வரை அவன் காதலை பெற முடியாமலே செல்வதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... என்ன பிழை செய்தாள்..?? ஏன் தன்னால் பிருத்வியின் காதலை பெற முடியவில்லை... என்று நினைக்கும் போது தன்னையும் மீறி கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது அவளுக்கு...

இமையே... இமையே...

விலகும் இமையே...

விழியே... விழியே...

பிரியும் விழியே...

எது நான்... எது நீ...

இதயம் அதிலே...

உணரும் நொடியில்...

பிரியும் கணமே...

சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து...

வானெல்லாம் மழை...

வரைந்து காட்டுகின்ற வர்ணம்..

என்ன செய்ததோ பிழை...

அடிமனதில் இறங்கிவிட்டாய்...

அனு அனுவாய் கலந்துவிட்டாய்...

அடிமனதில் இறங்கிவிட்டாய்...

அனு அனுவாய் கலந்துவிட்டாய்..

இப்படி பிரிவு தான் முடிவென்று இருவரும் தீர்மானித்திருக்க... அதை சிரிப்போடு முருகன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்... இப்போதும் அந்த சிரிப்பிற்கான அர்த்தம் புரியவில்லையென்றாலும்... இது இறுதி முடிவாய் இருக்காது என்பது மட்டும் தெரிகிறது...

Episode # 25

Episode # 27

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.