(Reading time: 25 - 49 minutes)

ரு முறை கிளம்பிச் சென்றால் திரும்பி இவள் சடலம் கூட தெலுங்கு தேசம் வர இயலாதே…. பாண்டிய நாடு கண்ணுக்கப்பால் எங்கோ இருப்பதாகத்தானே சொல்லிக் கொள்கிறார்கள்….

அப்படி ஒரு தேசத்திற்கு திருமணம் என்ற  ஒரு நிகழ்வில் இவள் இவளது தாதியர் சிலருடன் ஒரு அந்நிய மன்னருடன் பிரயாணப்பட வேண்டும்….அதுவும் அம்மன்னன் சற்று முன் வரை இவர்களது எதிரி…..

இதில் இவளது தாயின் நிலையும் இவளதும் ஒன்றாமா? ஆனால் யாதொருவரும் இவள் நிலை உணர்ந்து அதற்கு இப்படியாய் ஒரு தீர்வை  பகரக் கூட முன்வரவில்லை…..

ஆனால் இவரோ இவள் மனோநிலை மற்றும் கிலேசம் எவ்வளவாய் புரிந்து கொள்கிறார்…. நயந்தது இவள் மனம்.

“என் தங்கைக்காக நானாயிருந்தால் இதை அவசியம் செய்வேன்….அஃதோடு இப்படி ஒரு முறை உணடு எங்கள் தேசத்தில்……பெண்ணை மணமுடித்து கொடுக்க இருக்கும் வீட்டை அவளது குடும்பத்தினர் வந்து பார்த்துச் செல்வது அங்கு வழமை…. அதை உம் சகோதரிக்கு மனதளவில் அன்யோன்யமான  தமையனான நீர் செய்து கொடுக்கும்பட்சத்தில் அவருக்கும் உண்மை நிலை புரிந்ததாய் ஒரு சுமூக உணர்விருக்கும்…..” இன்னுமாய் அவன் புரிவிக்க முயல.....காற்றிடைப் பட்ட நறுமணமாய் கரைந்தாள்….

ஆனாலும் “ ருயம்மாதேவிக்கு நான் மனதளவில் நெருக்கம் என எதை கொண்டு முடிவுக்கு வந்தீர் நீர்?”  என கவனமாய் கேள்வி எழுப்பினாள்….

முன்பும் இச் சேனாதிபதி, இளவரசியாய் மந்திராலோசனையில் கலந்து கொண்ட இவளிடம் தான் சொல்லிய செய்தி, ருயமருத்ரனுக்கு தெரிந்திருக்கும், அவனே தன்னைத் தேடி வருவான் என இவரது நண்பனும் அமைச்சனுமாகிய வரதுங்கனிடம் சொல்லிக் கொண்டதை இவளே கேட்டாள் தானே..

அப்படி எவ்வாறு முடிவுக்கு வந்தார் இவர்....?

“நீர்  தான் சொன்னீர்…” அதற்கு இப்படியாய் ஒரு பதில் அவனிடமிருந்து…

“நானா? எப்போது சொன்னேன்?”

“அரச குலத்தை சேர்ந்தவரான நீர் ரகசியமாய் கோட்டைக்கு வந்திருக்கிறீர்…. கோட்டை தலைவனுக்கே நீர் வந்திருக்கும் செய்தி தெரியாது என நீர்தானே சொன்னீர்….. கோட்டை தலைவனுக்கு தெரியாமல் உள்ளே தங்கி இருக்க வேண்டுமெனில்…. அவரை விடவும் உயர் அதிகாரம் உள்ள ஒருவர் அதை அனுமதித்திருக்க வேண்டும்… அந்த வகையில் அங்கு இளவரசியார் மட்டுமே சைலபத்திரரை விடவும் உயர் அதிகாரத்தில் இருக்கிறார்….. ஆக நீர் அவர் மாத்திரம் அறிய வந்துறுக்கிறீர் என்றாகிறது…. அது போதுமே உங்கள் இருவருக்கும் இருக்கும் அன்யோன்யத்தை புரிந்து கொள்ள…” அவன்  காரணம் விளக்க அவனது சிந்திக்கும் விதம் இவளை அச்சமூட்டுகிறது…

ஒவ்வொன்றையும் எத்தனையாய் கொண்டு கூட்டி ஆராய்கிறார் இந்த பாண்டிய படைதலைவர்..…எப்பொழுது இவள் வகை உண்மையை கண்டு கொள்வாரோ?!

“ இச் செயலுக்கு நான் காகதீயத்திலிருந்து பிறரை அழைக்கலாம்தான்….. சற்று முன் வரை எதிரியின் தேசமாயிற்றே…..நம்பி தனியே வர அவர்கள் தயங்க கூடும்…..நீரானால் பாரும் சாக துணிந்தவர்….ஆக தயங்காமல் வரலாமே…. “ விஷமம் துள்ளி விளையாடியது அவன் குரலில்….

இவள் அனல் பறக்கம் கண்டன பார்வை பார்த்தாலும் அவன் இதழிலிருந்த சன்ன முறுவல் கூட மறையவில்லை…

இதற்குள் கோட்டையின் மிக அருகில் வந்திருந்தனர் இவர்கள் இருவரும்….. “நீர் கோட்டைக்குள் செல்லும் ருயமரே…. ரகசியம் காக்க எண்ணினால் மறைந்தே இரும்…. கோட்டைத்தலைவர் சைலபத்திரரும் நானும் கோட்டையைவிட்டு வெளியே படை நடத்துவதால் கோட்டை செயல்பாடுகளில் ஒரு கண் வைத்திரும் என உமக்கு நான் சொல்லத் தேவையில்லை என நம்புகிறேன்…” என இவளை வழியனுப்ப முயன்றான் அவன்.

“கோட்டைக்குள் இருக்கும் இளவரசியாருக்கு போர்பயிற்சி உண்டு… தாங்கள் எப்பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம்….” ருயமருத்ரனை நம்பி பொறுப்பை ஒப்படைப்பதைவிட மேலான அதிகாரமுள்ள இளவரசியை இப் பாண்டிய சேனாதிபதி நம்பி காரியங்களை பகிர்ந்து கொள்வார் என எண்ணித்தான் இவள் இதைச் சொன்னது….

அவனோ ”இளவரசியார் எங்கள் படை பிரிவோடு போர்களத்திற்கு வருவார்…” என இவள் முற்றிலும் எதிர்பாராத விடை கொடுத்தான்.

“ஏன்….?” வியப்புகுறி முகமெங்கும் வியாப்பித்திருக்க….அதற்கு இணையாக காரணம் விளங்காமையும் கவனமாய் அதில் தடம் பதிக்க…. விளக்கம் வினவினாள்.

“ருயமரே  நீர் என்னோட ஒற்றறிய வந்த பிரதான காரணம்… .நன் ஒற்றறிய செல்கிறேனா… இல்லை துருக்கியரிடம் ஒற்று சொல்ல செல்கிறேனா என எந்த வித கிலேசமும் எமது வருங்கால மகராணிக்கு இருக்க கூடாது என்பதற்காகதானே….

இப்பொழுதும்  ஒரு படை பிரிவை நான் தனியாக அழைத்துச் செல்கிறேன்…..ஆக என்னை கண்காணிக்க உமது பக்கமிருந்து ஒரு தலைவர் வேண்டும்……நீரோ சைலபத்திரர் முன்னிலையில் கூட வர பிரியப்படாதவர்…..அப்படி இருக்க உமது வீர்கள் முன் களம் வர மாட்டீர்….ஆக இளவரசியை அழைத்துச் செல்கிறேன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.